(Reading time: 14 - 28 minutes)

ரி விடு.... இன்னைக்கு ஒரு நாள்தான்...... நீ முதல்ல உன் அண்ணியோட பேசறத நிறுத்து அப்பவே உருப்படுவ”, என்று சொல்லிக்கொண்டிருக்க ஹரி டிக்கெட்டுகளுடன் வந்து சேர்ந்தான்.  தீபா அருகிலிருந்த ATM வரை சென்றிக்க அவள் வருவதற்காக காத்திருந்தார்கள்.  அவளும் வந்து சேர அனைவரும் கிளம்பி செக்யூரிட்டி செக், டிக்கெட் செக்கிங் முடிந்து எலிவேட்டர் நோக்கி சென்றார்கள்.   Observatory டெக் எண்பத்து ஆறாவது மாடியில் உள்ளது.  அங்கிருந்து மன்ஹட்டன் சிட்டி முழுவதும் பார்க்க முடிந்தது.  ராம் ஸ்வேதாவிற்கு அனைத்தையும் விளக்கிக் கொண்டு வர,  ஹரியும், தீபாவும் சேர்ந்து வந்தார்கள்.

“என்ன ஹரி இது... நீங்க ஸ்வேதாக்கூட போகாம இப்படி அவன் கூட விட்டு இருக்கீங்க.... உங்களுக்கு செம்ம சான்ஸ்.  அவளோட தனியாப் பேச.  நான் அந்த ராமை ஏதானும் சொல்லி தனியா கூட்டிட்டு போறேன்.... நீங்க ஸ்வேதாக்கிட்ட பேசுங்க...”, என்று கூறு ராமிடம் சென்று சந்தேகம் கேட்பவள் போல் எதையோ கேட்டபடியே அவனை ஸ்வேதாவிடமிருந்து சிறிது தள்ளி அழைத்து சென்றாள் தீபா.  இதற்காகவே காத்திருந்த ராம், அதன் பின் ஸ்வேதாவை கண்டுகொள்ளாமல் முழு நேரமும் தீபாவுடன் சுற்றி வந்தான்.  தீபாவிற்கு இம்சையாக இருந்தாலும்.... ஹரி, ஸ்வேதாவிற்காக பொறுத்துக் கொண்டாள்.  ஹரி படு குஷியாக ஸ்வேதாவுடன் சுற்ற ஆரம்பித்தான்.  ஒரு வழியாக அவர்கள் வியூ முழுவதும் பார்த்து மதிய உணவு சாப்பிட அங்கிருந்த புகழ் பெற்ற உணவகத்திற்கு சென்றார்கள்.  அங்கும் தீபாவும், ராமும் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க.... ஸ்வேதா வேறு வழி இல்லாமல் ஹரியுடன் பேசிக்கொண்டு சாப்பிட்டாள்.

பின் அங்கிருந்து கிளம்பி 2 மணி நேர Cruise பயணம் லிபர்ட்டி of statue மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களுக்கு செல்ல சென்றார்கள்.  ஸ்வேதா அதன் பின்னர் என்ன சொல்லியும் ராம் தீபாவை விட்டுவிட்டு ஸ்வேதாவுடன் நடிக்க மறுத்து விட்டான்.  இவனை நம்பியதற்கு தனக்கு இது தேவைதான் என்று நொந்துவிட்டாள் ஸ்வேதா.  “என்ன ஆச்சு ஸ்வேதா... ராம் ஏதோ தீபாக்கூட தனியா பேசணும்ன்னு நினைக்கறான் போல... அவா பேசட்டுமே...  உனக்கு என்னோட வர்றது கஷ்டமா இருக்கா”

“ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை.  தீபாக்கு ராமை அத்தனை தூரம் தெரியாது.  அதான் நானும் அவாக்கூட இருந்தா கொஞ்சம் கம்ஃபோர்ட்டபிளா ஃபீல்  பண்ணுவாளேன்னு நினைச்சேன்”

“எனக்கு என்னவோ அப்படித் தோணலையே.... என்னை வெறுப்பேத்தவே அவன் கூட பேசறா மாதிரி இருக்கு.  அப்படி ஏதானும் நினைப்பு வச்சிருந்தேனா அதை மறந்துடு.... எனக்கு நீ எத்தனை பேர் கூட பேசினாலும் சந்தேகமோ, இல்லை பொறாமையோ வராது.  நீ எனக்கு மட்டும்தான்னு முழு நம்பிக்கையோட இருக்கேன்.  அப்பறம் எப்படி அதெல்லாம் வரும்.  so தேவை இல்லாத வேலை எல்லாம் பண்ணாத”, என்று கூறி அவள் ஒரு வாரமாக கஷட்டப்பட்டு போட்ட பிளானை ஒரே நொடியில் தகர்த்தான்.  ஆனால் இந்த முறை ஏனோ ஸ்வேதாவிற்கு அவனிடம் தோற்ற உணர்வு வரவில்லை.  மாறாக அவளிடம் அவன் வைத்த நம்பிக்கையைப் பார்த்து சந்தோஷம்தான் வந்தது. 

ப்பல் கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் தீபாவை தனியாக அழைத்து சென்ற ராம் அவளிடம் தன் காதலைக் கூறி, தன்னை மணக்க சம்மதமா என்று கல்யாணம் வரை சென்று விட்டான்.  முதலில் அதிர்ச்சி அடைந்த தீபா, தனக்கும் காதலுக்கும் இந்திய.... அமெரிக்க தூரம் என்று கூறி தன் பெற்றோர்களிடம் நேரடியாக பேச்சு வார்த்தையை நடத்த பச்சைக் கொடியைக் காட்டினாள்.  ராம் உடனே தன் பெற்றோர்களுக்கு அழைத்து அவர்களை சென்று தீபாவின் பெற்றோர்களைப் பார்க்க சொல்ல.... அவர்களும் நல்ல நாள் பார்த்து தீபாவின் வீட்டிற்கு சென்று பேசினார்கள்.  ராமின் பெற்றோரும், தீபாவின் பெற்றோரும் பேசி அவர்கள் கல்யாணத்தை நிச்சயிக்க ஸ்வேதா, ஹரி காதலுக்காக நடிக்க வந்த ராம் காதல் கல்யாணத்தில் முடிந்தது.

தீபாவும், ராமும் ஜோடி போட்டுக் கொண்டு சுற்ற.... வேறு வழி இல்லாமல் ஸ்வேதா ஹரியுடனே நேரம் செலவழிக்க வேண்டியதாயிற்று.  ஸ்வேதா வந்து ஒரு மாதம் முடிந்திருக்க, தீபா ப்ராஜெக்ட் விஷயமாக ஒரு வார காலம் அருகிலிருக்கும் ஊருக்கு செல்ல நேர, ஸ்வேதா தனியாக இருக்க வேண்டியதாயிற்று.

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.