(Reading time: 17 - 34 minutes)

.கே சார்..

உள்ளே ராம் சென்று மகியின் அருகிலிருந்த சேரில் அமர்ந்தான்..மனசை திடப்படுத்தி கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்..மகி ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத..உடம்பு குணமாகனும் அதான் முக்கியம்..அவளின் உணர்ச்சியற்ற பார்வை அவனுள் ஈட்டியாய் இறங்கியது..எனக்கு உன் நிலைமை புரியுது..என் பேர் ராம் உன்னோட ஹஸ்பெண்ட்..இதை கேட்டவளின் கண்களோ அப்பட்டமான அதிர்ச்சியை வெளிப்படுத்தின..அம்மாவ பாக்கனும்..மெல்லிய குரலில் கேட்டாள்..

நாம இப்போ டெல்லில இருக்கோம் குட்டி..மகி..நீ டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவுடனே ஆன்ட்டிகிட்ட பேசு..இப்போ ரெஸ்ட் எடு என்றவாறு பதிலுக்கு காத்திராமல் வெளியே வந்தான்..மறுபடியும் கண்களில் நீர்..ராம்…

இல்ல பரணி தப்பு பண்ணிட்டேன் அவளுக்கு பிரச்சனைநு தெரிஞ்சும் அவளை நா கல்யாணம் பண்ணிருக்ககூடாது..அப்படியே பண்ணிருந்தாலும் இங்க கூட்டிட்டு வந்துருக்க கூடாது அதுக்கான தண்டனைதான் நா இப்போ அனுபவிக்கிறது..ரொம்ப பயமாயிருக்குடா ஒரு வேளை மகிக்கு கடைசி வரை என் நியாபகம் வராமயே போய்டுச்சுனா??இப்போ நா பேசும் போது கூட யாரையோ பாக்குறமாறி பாக்குறாடா,செத்துடலாம் போலயிருக்கு..

டேய் ராம் என்ன பேசுற..அறைஞ்சேன்னா தெரியும்..கவலைபடாதடா கூடிய சீக்கிரம் நம்ம மகி நமக்கு கிடைச்சுருவா..சரி அம்மா அப்பாவ வேணா வர சொல்லலாமா??

வேண்டாம் பரணி அவங்களுக்கு எதுவும் தெரிய வேண்டாம்..

டேய் எப்படிடா??

ஆமா பரணி எப்படியாவது சமாளிக்குறேன்..என்று பேசி முடிக்க அவன் கையிலிருந்த மகியின் மொபைல் சிணுங்கியது..விஜி தான் அழைத்திருந்தார்..அழைப்பை ஏற்றவனிடம் பொதுவான நல விசாரிப்புகளை முடித்து மகியை பற்றி வினவினார்..ஏனோ காலையிலிருந்து மனதே சரியில்லையெனவும் மகியும் அவனும் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கே அழைத்ததாகவும் கூறினார்…எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும் நவீன யுத்திகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒரு தாயின் மனதை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது..எத்தனையோ மைல்கள் தள்ளி தன் பிள்ளைகள் இருந்தாலும் அவர்களை தன் மனதில் சுமப்பவளே தாய்..ராம் அவரை சமாதானப்படுத்தி அழைப்பை துண்டித்தான்..

அடுத்த நொடி ராஜியிடமிருந்து அழைப்பு வந்தது..அவர் எப்படியும் கண்டுபிடித்துவிடுவார் என இயல்பாகவே பேச முயற்ச்சி செய்தான்..

மகி என்னடா போனே பண்ணல??

ஹலோ நா உன் புள்ளநு ஒருத்தன் இருக்கேன் நியாபகம் இருக்கா.??எப்போ பாத்தாலும் அவளையே கொஞ்சிட்டு இருங்க..

டேய் மகி எங்க நீ எதுக்கு அவ போனை வச்சுருக்க??

இது என்ன கொடுமை என் பொண்டாட்டி போனை நா வச்சுக்க கூடாதா??நீங்க எதுக்கு கால் பண்ணீங்கநு சொல்லுங்க??

ம்ம் அது சரி நீயே வச்சுக்கோ..ஒண்ணுமில்லை ராம் டெய்லி நைட் எவ்ளோ நேரம் ஆனாலும் எங்ககிட்ட பேசிட்டுதான் தூங்க போவா..நேத்து நைட் பேசவேயில்லை அதான் மனசு வேற ஒருமாதிரி இருந்தது..நல்லாயிருக்கீங்கல்ல??

கிட்டதட்ட குரல் நடுங்க ஆரம்பித்திருந்தது ராமிற்கு..கட்டுப்படுத்தியவன்..எங்களுக்கு என்னம்மா உங்க தொல்லைலா இல்லாம ஜாலியா இருக்கோம்..மகிக்கு இன்னும் சந்தோஷம்..

போடா படவா நீ வேணா ஜாலியாயிருப்ப என் மகி அப்படிலா கிடையாது..சரி அப்பறமா மகியை பேச சொல்லு..

அம்மா நாங்க ப்ரெண்ட்ஸ்ஸோட இங்க பக்கத்துல ட்ரெக்கிங் போறோம்மா..டூ டேஸ் ஆகும் அங்க அவ்வவளவா சிக்னல் கிடைக்காது நா வந்துட்டு அவளை பேச சொல்றேன்,

ஓ..அப்படியா சரிடா பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க..மகியை பத்திரமா பாத்துக்கோடா..என்ற எச்சரிக்கையோடு போனை வைத்தார்..

ராம் நீ மகிகூடவேயிரு..நா சாக்ட்சிய ட்ராப் பண்ணிட்டு வந்துரேன்..ரொம்ப டைம் ஆயிடுச்சு..என்றவன் அவன் பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான்..

அமர்நாத் பவனில் அவளை இறக்கிவிட்டு அவளோடேயே நடக்க ஆரம்பித்தான்..கேள்வியாய் நோக்கியவளிடம் உங்க தாத்தாவ பாக்கனும் என மொட்டயாய் கூறிவிட்டு முன்னேறி நடந்தான்..அவர் அறையின் முன் நின்று காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தான்..உள்ளே வருமாறு குரல் கேட்க உள்நுழைந்தவனின் கண்களில் தெரிவது என்ன என்று புரியாமல் பின்தொடர்ந்தாள் சாக்ட்சி..

வாங்க பரணி என்ன இந்த நேரத்துல??-அமர்நாத்..

உங்ககிட்ட கொஞ்சம் வெளிப்படையா பேசனும்னு ஆசைபட்றேன் சார்..

பரணி!!!

மன்னிச்சுடு சாக்ட்சி நா இவ்ளோ பொறுமையா பேசுறதே பெரிய விஷயம்..நீ எனக்கு வேணும்தான் ஆனா இப்போ மகி இருக்குற நிலைமைக்கு அவளைவிட எனக்கு எதுவும் முக்கியமில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.