(Reading time: 17 - 34 minutes)

வனுக்கோ தன்னவளின் தலையை கோதிவிட வேண்டும் போலிருந்தது..இந்த வெகுளிதனம் மட்டும் இவளை விட்டு அகலவே அகலாது என்று தோன்றியது..நா உன்ன குட்டிமாநு தான் கூப்பிடுவேன்..அததான் சொல்ல வந்து மகிநு மாத்திப்பேன்..போதுமா..இப்போ தூங்கு மகி..என்றவாறு அட்டெண்டருக்கான படுக்கையை நோக்கி ராம் நகர…என்ன தோன்றியதோ,குட் நைட் ராம்…என்றாள் மென்குரலில்..நீங்க எப்படி கூப்பிடுவீங்களோ அப்படியே கூப்பிடுங்க..எனக்காக கஷ்டபடாதீங்க..

கேட்டவனுக்கு ஏனோ சீக்கிரம் அனைத்தும் சரி ஆகிவிடும் என்று தோன்றியது..குட்நைட் என்று புன்னகைத்துவிட்டு படுத்துக் கொண்டான்..

மறுநாள் எழுந்திருக்கும் போதே கண்கள் ராமை தேடின..ஆனால் அங்கு அவனில்லை..லேசாக அறையினுள் பார்வையை சுழற்ற வெளியிலிருந்து கையில் காபி கோப்பைகளோடு வந்தான் ராம்..ஏனோ நேற்றைவிட சற்று உற்சாகமாக காணப்பட்டான்..

குட்மார்னிங் குட்டிமா..ப்ரெஷ் ஆயிட்டு வா காபி சாப்டலாம் என்றவாறு அவள் எழுந்து செல்வதற்காக தன் கையை நீட்ட சிறு தயக்கத்துடன் அவன் கரம் பற்றி பாத்ரூம்சென்று பல்துலக்கி முகம் கழுவி வந்தாள்..அவளை வாகாக அமர வைத்துவிட்டு காபியை நீட்டினான்..சிறு புன்னகையோடு அதை வாங்கி பருக ஆரம்பித்தாள்..நர்ஸ் வந்து ட்ரெஸிங் முடித்துவிட்டு செல்ல,அவளின் கலைந்த கூந்தல் ராமின் கண்ணில் பட்டது..தன்னிடமிருந்த சீப்பை கொண்டு தலையை வாரிவிட எழுந்தான்..

இல்ல பரவால்ல..நானே..-மகி..

அவனது பார்வையிலேயே அடுத்து பேசாமல் வாயை மூடிக்கொண்டாள்..

முன்விழுந்திருந்த முடிகளை சேர்த்து வலிக்காத வண்ணம் லேசாக வாரி தூக்கியவாறு போனி டெயில் போட்டுவிட்டு நகர்ந்தான்..ஒரு விஷயம் மகி..உனக்கு அக்ஸிடெண்ட் ஆனது நம்ம ரெண்டு பேரு வீட்டுக்குமே தெரியாது ஒரு வேளை நீ ஆன்ட்டிகிட்ட பேசினாலும் எதுவும் சொல்லிக்காத வீணா டென்ஷன் ஆய்டுவாங்க..இன்னைக்கு ஒரு நாள் நீ இங்கேயே இரு நாளைக்கு நாம வீட்டுக்கு போலாம்..சரியா..

பள்ளி குழந்தையை போல் அவன் கூறிய அனைத்திற்கும் தலை அசைத்தவள்..அம்மாகிட்ட ஒரே ஒரு தடவை பேசட்டுமா…

சரி நானே கால் பண்ணி தரேன்டா..என விஜியின் எண்ணை அழைத்து அவளிடம் நீட்டினான்..சில நிமிட உரையாடலுக்குப் பின் ராமிடம் போனை கொடுத்தவளின் கண்களில் ஏதோ ஒரு ஆச்சரியம்..

என்ன மகி ஆன்ட்டி எதுவும் சொன்னாங்களா??ஏன் அப்படி பாக்குற..

இல்ல அது..எங்கம்மா என்ன பத்தி பேசினதவிட உங்களதான் ரொம்ப விசாரிச்சாங்க எப்படியோ எதேதோ சொல்லி சமாளிச்சேன்..எங்கம்மாவே உங்க மேல இவ்ளோ அன்பு வச்சுருக்காங்கனா நீங்க என்ன அவ்ளோ நல்லா பாத்துட்டு இருந்துருப்பீங்கல..பட் நா தான் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்குறேன்…நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன் எனக்கு ஒண்ணுமே நியாபகம் வரல..ரொம்ப யோசிச்சா தலை தான் வலிக்குது..என்னால எப்பவுமே கஷ்டம்தான்..என உடைந்து அழுதாள்..

ராமோ பதறிவிட்டான்..ஹே குட்டிமா ரிலக்ஸ் டா..ஏன் உன்னை நீயே வருத்திக்குற..கைகளை இதமாய் பிடித்தான்..உன்னால எப்பவும் யாருக்கும் கஷ்டமில்லைடா..உனக்கா எப்போ நியாபகம் வருதோ வரட்டும்,நீயா ரொம்ப ஸ்ட்ரெய்ண் பண்ணிக்காத..நா இருக்கேன் மகி உனக்கு..நீ அழுதா எனக்கு பிடிக்காது இனி எக்காரணத்துக்காகவும் அழக்கூடாது..கண்ணை துடை மொதல்ல..

ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு அவனை ஏறிட்டாள்..மகி நீ கொஞ்ச நேரம் தூங்கு..நா போய் சில வேலைய முடிச்சுட்டு வந்துட்றேன்..என்றவாறு வெளியே வந்தான்…

எஸ்.எம் ஹாஸ்பிட்டல் எப்போதும் போல் பரபரப்பிற்கு குறைவின்றி இயங்கிக் கொண்டிருந்தது..உள்ளே நுழைந்த ராம் நேராக அதர்வாவின் அறை நோக்கிச் சென்றான்..உள்ளே நுழைந்தவனை கண்ட அதர்வாவின் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி..அவன் வாய் திறப்பதற்குள் டேபிளில் ஒரு டைரியை விட்டெறிந்தான் ராம்..

எதுக்காக உன் ஹாஸ்பிட்டல்க்கு வந்தேன்னு ரொம்ப குழம்பிருந்தல..இதுக்காகதான்..எடுத்து பாரு..இதுல இருக்குறதவிட நிறையவே உன்னபத்தி தெரியும் எனக்கு..இந்த எம்.டி சேர்ல ஆசை தீர உக்காந்துக்கோ இன்னும் கொஞ்ச நாள் தான்..நீ இருக்கப் போற இடமே வேற..கொஞ்ச நாள் உன்ன நிம்மதியா விடலாம்நு நினைச்சேன்..எப்போ என் மகியவே கொல்ல பாத்தியோ உன் ஆட்டத்தை நா முடிக்குறேன்…மறுபடியும் நா உன்ன பாக்கும் போது ரொம்ப மோசமான சூழ்நிலைல இருப்ப அதர்வா..டேக் கேர்..என்றபடி வெளியேறினான்..

உள்ளுக்குளிருந்த கொதிப்பையும் தாண்டி ஒருவித பயம் பரவியிருந்தது அதார்வின் முகத்தில்..

 

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:952}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.