(Reading time: 17 - 34 minutes)

ன்டா கொஞ்சமாவது அறிவிருக்கா??ஏற்கனவே பாயல் விஷயத்துல அவனோட பிரச்சனை அதுவே இன்னும் முழுசா தெரில இதுல அந்த மகியை அடிச்சு தூக்கிருக்கீங்க..இவ்ளோ பெரிய விஷயத்தை எங்ககிட்ட கேட்டுட்டு பண்ணணும்னு தோணலையா??-விநாயக்

இல்ல சார் அந்த பொண்ணு அதர்வா சாரை நேத்து ரொம்ப மரியாதை குறைவா பேசிடுச்சு..எங்களால தாங்கிக்கவே முடில..அதான்..லேசா தான் இடிச்சுருக்கோம் அதெல்லாம் ஒண்ணும் ஆகாது..

மண்ணாங்கட்டி நானே அவ பேசினத நினைச்சு கவலைபடலை உங்களுக்கு என்னடா??-அதர்வா..

அதற்குள் ஓடிவந்து ஒருவன்,சார் அந்த பொண்ணுக்கு பழசெல்லாம் மறந்து போச்சாம் அதுக்கு என்னவோ பேர்லா சொன்னாங்க சார்..

அதர்வா ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான்..என்னவோ ஒண்ணும் ஆகாதுநு சொன்ன இப்போ பாரு..இதெல்லாம் தேவையா..இருக்குற ப்ரச்சனை பத்தாதுநு இது வேற..மாமா நீங்க சொன்னதால தான் அவனைபத்தி ரொம்ப கிளறாம விட்டேன்..எனக்கென்னவோ அவன் டிப்பார்ட்மெண்ட் ஆளா இருப்பானோனு தோணுது..

அதர்வா அதெல்லாம் ஒண்ணும் இல்லை நம்ம DCPய வச்சு இன் அண்ட் அவுட் செக் பண்ண சொல்லிட்டேன் அவன் சாதாரணமானவன் தான்..பட் ஏதோ ஒரு நோக்கத்தோட இங்க வந்துருக்கான் அதுதான் என்னனு தெரில..சரிவிடு இவனுங்கள திட்டியும் இனி ஒண்ணும் ஆக போறதில்ல..என்ன நடக்குதுநு பாப்போம்..

பரணி ஹாஸ்பிட்டலை அடைந்த போது ராம் அறையின் வெளியே அமர்ந்திருந்தான்..என்னடா இங்கயிருக்க??மகி என்ன பண்றா??

தூங்குறா பரணி..முழிச்சுருந்தாலும் என்ன ஏதோ சந்தேகத்தோடேயே பாக்குறா ரொம்ப கஷ்டமாயிருக்கு டா..

ராம் மறுபடியும் மறுபடியும் அதையே யோசிச்சு உன்ன நீயே வருத்திக்காத..தைரியமாயிரு..அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்டா என்று அமர்நாத் பவனில் நடந்த அனைத்தையும் கூறினான்..என்ன மனுஷான்டா இந்த வயசிலயும் அப்படி ஒரு மனதைரியம்..நிஜமா அசந்துட்டேன்..

ம்ம்ம் நினைச்சேன்..தி க்ரேட் A.K வாச்சே கண்டுபிடிக்காம இருப்பாரா….சரி நா அப்பறமா அவர்ட்ட பேசுறேன்..அண்ட் நாளைக்கும் மகி ஹாஸ்பிட்டல்லயே இருக்கட்டும்நு நெனைக்குறேன்டா..அப்பறமா அவளே கொஞ்சம் தெம்பாய்டுவா சோ வீட்டுலயும் சமாளிச்சுப்பா..

ம்ம்ம் புரியுதுடா..சரி நீ கொஞ்சமாவது தூங்குபோ உள்ள படுத்துக்கோ நா அங்கே லாங்க் இருக்கு அங்க இருக்கேன்..

உள்ளே நுழைந்தவனின் கண்களில் சிறு குழந்தையாய் தூங்கும் அவனின் மகி..தலையில் பெரிய கட்டு ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க மறு கையில் சிறு கட்டுடன் ஊசியின் தாக்கத்தால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்..வந்தவன் அவளருகில் அப்படியே அமர்ந்துவிட்டான்..ஓவென்று கதறி அழ வேண்டும் போலிருந்தது..அவளது கை மீது சாய்ந்து கண்களை மூட கண்ணீர் அவளின் விரலை நனைத்தது..லேசாக கை சிலிர்க்க அரைகுறையாய் கண்களை திறந்தாள்..தன் முன் குனிந்து அழுபவனை பார்க்க ஏனோ பாவமாய் இருந்தது..

எனக்கு எப்போ கல்யாணம் ஆச்சு??இவரு என் மேல அவ்ளோ அன்பு வச்சுருக்காரா??எனக்கும் இவரை பிடிக்குமா??விடை தெரியவில்லை எதற்கும்..அதற்குள் ராம் நிமிர்ந்துவிட தன்னை நிலைபடுத்திக் கொண்டு எழுப்பிட்டனா குட்…சாரி மகி..நீ தூங்கு நா இங்கதான் இருக்கேன் எதுவும் வேணும்னா தயங்காம கூப்பிடு..

ஒரு விஷயம் கேட்கணும்??ஒரு பைவ் மினிட்ஸ் பேசிட்டு தூங்கலாமா??-மகி..

ஆச்சரியமாய் பார்த்தான்.. தன்னையும் அறியாமல் ஒரு ஆர்வம் ராமிடம்..சொல்லுடா???

வந்து…நமக்கு எப்போ கல்யாணம் ஆச்சு??

திருமண நினைவில் லேசாக புன்னகை அரும்ப,20 நாள் ஆகுது..

ஓ…உங்களுக்கு என்ன எப்படி தெரியும்??

நீயும் நானும் .ஒரே ஆபீஸ்ல தான் வொர்க் பண்ணிணோம் சென்னைல..

வாட் சென்னைலயா??அப்போ அப்போ இது லவ் மேரேஜா??பாவமாய் கேட்டாள்..

ராமிற்கோ சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை..ஆமாடா..ஏன் ரொம்ப கஷ்டபடுத்திக்குற..நம்ம வீட்டுக்கு போனப்பறம் எல்லாம் பொறுமையா சொல்றேன்..நீ தூங்கு..

லவ்வா??நானா???எங்கம்மா ஒத்துகிட்டாங்களா??இல்ல அவங்களுக்கு தெரியாம பண்ணிக்கிட்டனா??அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதே..கண்களில் ஒருவித தவிப்பு அவளிடம்..

இதோ பாரு மகி எல்லாரோட சம்மதத்தோடும் திருவிழா மாதிரி நடந்நது நம்ம கல்யாணம்..ஆன்ட்டி அதான் உங்க அம்மாதான் இதுல ரொம்ப சந்தோஷப்பட்டாங்க போதுமா..ரெஸ்ட் எடுடா ப்ளீஸ்..

சாரி..நீங்க படுத்துகோங்க..உங்க பேரு???

ராம்...

ஆங்ங்ங்,.ராம்..அது…நீங்க என்ன வேற ஏதோ பேர் சொல்லி கூப்பிட ட்ரை பண்ணி அப்பறம் மகினு சொல்றீங்க அது என்ன???இது மட்டும் சொல்லுங்க வேற எதுவும் கேட்க மாட்டேன்.ப்ராமிஸ் என்றாள் பாவமாய்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.