(Reading time: 17 - 34 minutes)

ரணி மகிக்கு என்னாச்சு??-அமர்நாத்..

இன்னைக்கு மார்னிங் ஒரு அக்ஸிடெண்ட்..உயிர் பொழச்சுட்டா ஆனா அவளோட உயிருக்கு உயிரான ராமையே அடையாளம் தெரில..மெமரி லாஸ் ஆய்டுச்சு..அதுக்கு காரணம் யாருநு தெரியுமா சார்???

அவரிடம் பதில்லில்லை..அதுவே அவரின் மனவோட்டத்தை தெரிவிக்க,உங்க எண்ணம் கரெக்ட் தான் சார்..அதர்வா தான் இத பண்ணிணது ஆனா ஏன் எதுக்குநு தெரியல..உங்க பையன் பண்ற அயோக்கியதனத்தை நாங்க கண்டுபிடிச்சா அவன் எங்களை கொல்ல வருவானா??அதையே எங்களால பண்ணமுடியாதுநு நெனைக்குறானா??சார் இன்னும் கொஞ்ச நாள் தான் உங்க பையனை யாராலையும் காப்பாத்த முடியாது ஆனா அதுக்கு காரணம் நானும் ராமும் தான் அத சொல்லிட்டு போகதான் வந்தேன் அப்புறம் நீங்க ராம தப்பா நினைச்சுகாதீங்க என்று கூறிவிட்டு வாசலை நோக்கி நடக்க ஆரம்பிக்க…..

அவன் வந்த ரெண்டாவது நாளே அவன் ஒரு டிடெக்டிவ்நு தெரிய வந்தப்போவே நா அவனை தப்பா நினைக்கல..இப்போவா தப்பா நினைக்க போறேன்..என்ற பதிலை கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திலிருந்தனர் பரணியும் சாக்ட்சியும்..

என்ன பரணி அப்படி பாக்குற??இந்த அளவு ஷார்ப்பா இல்லைனா இவ்ளோ பெரிய சாம்ராஜியத்தை கட்டி காப்பாத்திருக்க முடியுமா??அவனை பாத்தவுடனே விருப்பப்பட்டு வேலைக்கு சேர்த்தது உண்மைதான் ஆனா அவன் அதர்வாவை முதல்நாள் பாத்து பேசினப்போ அவனோட செய்கைகளில் பல மாற்றம் தெரிஞ்சுது..அப்போ கூட சந்தேகம்நு சொல்ல முடியாது எதுக்கும் தெரிஞ்சு வச்சுகலாம்நு நெனைச்சுதான் கமிஷ்னர்க்கு கால் பண்ணேன்..என்னோட ரொம்ப க்ளோஸ் ப்ரெண்டு..ராமோட போட்டோவ காமிச்சவுடனே அவனை பத்தி தனக்கு தெரியும்நு சொன்னாரு..

இவரு பேரு ராம் A.K டிடெக்டிவ்வா இருக்காரு..எங்க டிப்பார்மெண்ட்க்கு கூட சின்ன சின்ன ஹெல்ப் பண்ணிருக்காரு..ஆமா ஏன் அவரைபத்தி கேட்குறீங்க??

இல்ல சாதாரணமாதான் கேட்டேன்னு ஏதேதோ சொல்லி சமாளிச்சேன்..அக்சுவலா நீங்க ACPக்கு ஹெல்ப் பண்றீங்கநு அவருக்கு தெரியாததால வேற எதுவும் சொல்லல..சரி ராமால எந்த ப்ரச்சனையும் வராதுநு கன்பார்ம் ஆனப்பறம் அவனோட வேலையபத்தி நா பெருசா எடுத்துக்கல..பட் அதர்வாவ கண்காணிக்க நா சொன்னது எதார்த்தமாதான்..எப்போ அவன் மேல தப்பு இருக்குநு உறுதியாச்சோ அப்போவே ராமை நா முழுசா நம்ப ஆரம்பிச்சேன்..ஒருவேளை இதுக்காக தான் ராம் இங்க வந்துருக்கானோனு தோண என்னால் ஆன உதவிகளை நா செய்யனும்னு நினைச்சேன்..அதுல ஒண்ணுதான் அதர்வா ரூம் சாவிய குடுத்து அவனுக்கு வேண்டியத எடுத்துக்க சொன்னது..அப்பவும் ராம் என்கிட்ட எதையுமே வெளிப்படையா சொல்லல..ரெண்டு நாள் முன்னாடிதான் ACP சொன்னதா உங்க கேஸ் டீடெயில் மொத்தத்தையும் கமிஷ்னர் சொன்னாரு..நானே உன்னையும் ராமையும் கூப்பிட்டு பேசனும்னு இருந்தேன் அதுகுள்ள இப்படி ஆயிடுச்சு..

இவ்வளவும் தெரிஞ்சு நா ஏன் அமைதியா இருந்தேன்னா அதர்வாக்கு தண்டனை கிடைக்கனும்னு தான்..என்னால அவன்கூட போராடி ஜெயிக்க முடியாது அதான் நீங்களே அதை முடிச்சு வைக்கனும்னு ஆசைபட்டேன்..என்னோட அமைதிக்கு இன்னோரு காரணம்..நா உங்களை நம்பினதாலதான் அதர்வாவும் விநாயக்கும் உங்களை பத்தி அவ்வளவா விசாரிக்க முயற்சி பண்ணல..என்னபத்தி அதர்வாவவிட விநாயக்கு நல்லா தெரியும் அப்படி யாரையும் விசாரிக்காம வேலைக்கு வைக்கமாட்டேன்ங்கிறதுல இருந்து என்னை ஏமாத்திட்டு யாரும் உள்ளே வந்தா அது நல்ல காரணத்துக்காகவே இருந்தாலும் நா அதை என்கரேஜ் பண்ண மாட்டேன்ங்கிறது வர தெரியும்..அதனாலயே ராம் மீது சந்தேகம் இருந்தாலும் அவங்க அதை பெரிதுபடுத்தாம விட்டதுக்கு காரணமாயிருக்கும்..இல்லைனா எப்பவோ உங்களை பத்தின விவரங்கள் எல்லாம் சேகரிச்சுருப்பாங்க..

பரணி தன்னினைவேயின்றி நின்றான் என்ன மனிதர் இவர் பெத்தபிள்ளை தப்பு செய்றான்னு தெரிஞ்சவுடனே அத மூடி மறைக்காம தண்டனை கிடைக்கனும்னு நினைக்கிறார்..இன்னமும் இந்தமாதிரி உயர்ந்த மனிதர்கள் உலகில் இருக்கதான் இருக்கிறார்கள்..என்ற சிந்தனையிலிருந்தவனை அவரின் குரல் கலைத்தது,

என்ன பரணி என்ன யோசிக்குறீங்க??

இல்ல சார் ஒண்ணுமில்லை மொதல்ல என்ன மன்னிச்சுடுங்க,மகி மேல இருந்த அக்கறைல வந்தவுடனே என்னென்னவோ பேசிட்டேன்..சாரி..

அதெல்லாம் விடுங்க..நேத்து பாத்து பழகின என்னாலேயே தாங்கிக்க முடில அப்பறம் உங்களுக்கு வருத்தம் இருக்காதா..இன்னும் என்னலா செய்ய காத்திருக்கானோ தெரில..இதெல்லாம் பாக்க கூடாதுநு தான் என் மீரா போய் சேர்ந்துட்டா போல..என்றார் குரல் தழுதழுக்க..அவரை சமாதானப்படுத்தி சாக்ட்சி மாத்திரைகள் கொடுத்து உறங்க வைக்கும் வரை அங்கேயே இருந்துவிட்டு அதன்பின் ஹாஸ்பிட்டல்க்கு கிளம்பினான்..

அதே நேரம் எஸ்.எம் ஹாஸ்பிட்டலின் பின்புற குடோனில்,

விநாயக் அந்த இருவரின் கன்னத்திலும் ஓங்கி அறைந்தான்..அதர்வாவோ கண்களாலேயே அவர்களை எரித்துக் கொண்டிருந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.