(Reading time: 49 - 98 minutes)

சே தீபனைப் போய் என்னதா நினச்சுட்டேன் நான்’ என வெடித்து சிதறும் குற்ற உணர்ச்சியும்…..கூடவே விடுதலை கிடைத்த வேகத்தில் ஆகாயமளவு அடித்து விரியும் அவன் மீதான காதல் புரிதலும்….அவனைக் குறித்து அலையாய் சுருட்டும் அத்தனை பெருமிதமுமாய் இவள்….

நோயல் என ஒரு குட்டிப் பையனைப் பத்தி அதிபன் அவளிடம் ஏதோ எப்போதோ குறிப்பிட்ட ஞாபகம் இருக்கிறது……ஆனால் அவனை இப்படித்தான் தெரியுமென இவளுக்கு தெரியாது…..  அதில் இப்போது நோயல் விஷயத்தை முடித்த விதத்தில்… எல்லோரும் ரிலடிவ்ஸ்…யாருக்கும் எந்த இடமும் முழுதாய் சொந்தமும் கிடையாது….முழுதாய் அன்னியமும் கிடையாது…. என்ற பாங்கில்…

ஆதி மனிதனின் காதலில் தொடங்கிய உலகம்….அன்று முதல் இன்று வரை தலை முறை தலைமுறையாய் காதலால் இணைந்துதான் கிடக்கிறது…. அத்தனை காலத்திலும் இனம் தாண்டிய காதல்களும் திருமணங்களும் இருக்கத்தான் செய்திறுக்கின்றன…..எத்தனையோ ஆணும் பெண்ணும் அதில் ஆனந்த முத்தெடுத்திருக்கிறார்கள்…..அழகாய் வாழ்ந்து போயிருக்கிறார்கள்…… அந்த காலகட்டத்தில் அவர்களால் அது முடியுமெனில் இப்போது இவள் இத்தனையாய் பயப்பட வேண்டிய அவசியம் என்ன….? என்ற உணர்வு நிலை உண்டாக

அப்படியேதானே விதவை மறுமணங்களும்…..இங்கு அது இயல்பான ஒன்று இல்லை எனினும்….இல்லவே இல்லாதது என்றும் இல்லையே…..அத்தனை தலைமுறையிலும் எத்தனை நடந்திருக்கிறது…..அவர்கள் வாழவில்லையா…..? இவளுக்கும் முடியும்….அதுவும் அடி முடியற்ற அன்பு சுரங்கம் தீபன். அவனோடு எனில் நிச்சயமாய் முடியும்…...

.மொத்த உலகமும் உண்டாக போதுமான காதல்….அத்தனை பிரிவையும் தாண்டி தீண்டி பிணைக்கும் அந்த அடங்கா அன்பு……இவர்களை இணைந்திருக்க செய்யாதாமா? அன்பை நம்பலாம் தப்பில்லை…..

அதியுடன் திருமணத்தில் இணைய இவளுக்குள் இருந்த அடிப்படை தடை சுவர் அப்படியே தகர்ந்து விழ….. காதல் பிளம்பாய் இவள்….

இப்போது அனுவைப் பார்த்த வினிக்கு அனு மனதில் இதுவரை குழப்பியது என்னவென்று விலாவாரியாய் புரிந்தது என்று இல்லையெனினும்….. அது எது சமபந்தப்பட்டதாய் இருக்கும் என ஒரு யூகமும்…..அந்த குழப்பம் மொத்தமாய் தெளிந்துவிட்டதென்ற முழு புரிதலும் கிடைத்தது…..

ஆக அவளிடம் “பையனுக்கு கொடுத்த மாதிரி ஒன்னு அப்டியே அவனோட தீபன் அங்கிள்க்கும் பார்சல் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும்….”  என கிண்டலாய் காதருகில் முனங்க..

அனுவின் அந்த வெண் முகம் இத்தனை சிவக்கும் என இவளே எதிர் பார்க்கவில்லை….

“பாவம் பெரியத்தான்..…இந்த பவர்ஃபுல் அட்டாக்ல இருந்தெல்லாம் அவங்க எப்ப வெளிய வரவாம்…..” வினி இப்போது இப்படியாய் சீண்ட…

“வினி…”என்றபடி அனு செல்லமாய் அடி ஒன்றை வைக்கும் போது அங்கு வந்திருந்தான் அதிபன்….

நோயல் குடும்பத்தை ரிசீவ் செய்ய அவன்தான் செல்வதாய் ஏற்பாடு…..ஆனால் கடைசி நிமிடத்தில் காரை மட்டுமே அனுப்பும் சூழல்…..இப்போது வேலை முடியவும் அவர்கள் இருக்கும் இடம் தேடி வந்திருந்தான்….

அவனை அங்கு பார்க்கவும் வினி…” நான் வீட்டுக்கு கிளம்புறேன் பெரியத்தான்…. அனுவ நீங்க ட்ராப் பண்ணிடுங்க “ என்று விட்டு கிளம்ப எத்தனிக்க

எப்டியாவது அதிக்கும் அனுவுக்கும் பேச சூழ்நிலை அமைய வேண்டும் என எண்ணினாள் அவள்…..  அனுவும் ஆர்வமாய் அதியைப் பார்க்க…..

அவனோ “இல்லமா…..நீங்க ரெண்டு பேருமா வீட்டுக்கு கிளம்புங்க “ என்று மறுத்தான்….. நோயல் குடும்பத்தை அவன் அங்கிருந்து அப்படியே குளம் தாண்டி இருக்கும் வயலுக்கு கூட்டிச் செல்வதாய் திட்டம்…. நோயல் விருப்பம்…

அதன் ஒட்டிய இடத்தை தான் கனிமொழிக்கு கொடுத்திருப்பது….. மகனுக்காக நினைவிடம் ஒன்று அங்கு கட்டிக் கொண்டிருக்கிறார் அவர்….. உதவியெல்லாம் இவன் தான்…. இப்போது நோயல் குடும்பம் அதைப் பார்க்கவும் என்ன ஏதென்று கேள்வி எழுப்ப…. காலம் செல்ல செல்ல இவனோடு காதலில் கலந்து ஒன்றாகி உளம் மனம் நினைவு எல்லாம் இவனுக்குள் இன்றுக்குள் அவள் வந்த பின்….இவன் கூடவே அந்த நினைவிடத்திற்கு போனாலும் சலனம் இருக்காது….தாய் தகப்பன் கல்லறையைப் பார்க்கும் போது வரும் அந்த ஒரு உணர்வுதான் வந்து போகும்…..ஆனால் இப்போது அனு அங்கிருந்தால் எப்படி உணர்வாளோ என்றிருக்கிறது இவனுக்கு….

இத்தனை நாளைக்குப் பின் இப்போது தான் அவள் முகம் தெளிந்து மலர்ந்து இருக்கிறது….. அதை கெடுக்க அவனுக்கு இஷ்டம் இல்லை…. ஆக

‘முடிஞ்ச வரை சீக்கிரமா வந்து உன்ட்ட பேசுறேன்டா……. ‘ என மானசீகமாக மனதுக்குள் அவளிடம் சொல்லிக் கொண்டேதான்  அனுவை அழைத்து செல்ல மறுத்தான்…

அந்த நொடிகளில் அங்கு மாலை நேர வாக்கிங்க் என வந்து சேர்ந்த மரகதம் பொற்பரன் கண்களில் விழுகிறது  அனுவின் அந்த ஏக்க முகமும், எதையும் வெளிக்காட்டா பாவத்தில் தன் மகனின் மறுப்பும்….

அடுத்துதான் அந்த அதிரடி முடிவு…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.