(Reading time: 49 - 98 minutes)

வளைப் பார்த்து ஓட நினத்தவனை கை பிடித்து அசையாது நிறுத்தினான் இப்போதும் அதிபன்……

இதற்குள் நிலவினி சென்று பவியைப் பிடிக்க….”விடு நிலு….” அழ கூட தெம்பில்லை பவிஷ்யாவுக்கு…

“அவங்க பாட்டுக்கு இப்டி செய்துட்டாங்க…” பேசக் கூட தெம்பில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தவளை மறுக்க கூட இடம் கொடுக்காமல் …..எந்த சீனும் க்ரியேட் செய்யும் முன்….ரெஜியும் வினியும் அவசர அவசரமாக வெளியே கொண்டு சென்றுவிட்டனர்…..

பவிக்கு மிகவும் கஷ்டமான நேரம் என்றால் இதுதான்….ரெண்டு பேரும் அவளோட ஃப்ரெண்ட்ஃஸ்…..அவளை என்ன செய்றாங்க….

அடுத்து வெளியில் வரவும் அருகிலிருந்த ரிஷப்ஷன் ஹாலின் உறவினர்கள் தங்கும் அறைக்கு இவளை கொண்டு போய் சேர்க்கும் போது உள்ளே அபயன் இவளுக்காய் காத்திருந்தான்……

மார்போடு இறுகிய கைகளுடன் அத்தனை அழுத்த முகத்துடன் கண் நிறைய கோபத்துடன்…..

பவிக்கு பார்வையில் எதுவும் முழுதாக பதிவதாக கூட இல்லை…. இருந்த பலத்தை எல்லாம் அவனை இறுக்கி அணைப்பதில் காண்பித்திருந்தாள்…..ஓடி சென்று அவனோடு ஒன்றி இருந்தாள்…..

“சாரி அபிப்பா….கண்டிப்பா தப்பு செய்துட்டேன்…….”

அவனுக்கு அவளை காய்ச்சி எடுக்க வேண்டிய அளவு கடும் கோபம்தான்….. ஆனால் அதை அவளிடம் இந்த நொடி காண்பிக்க மனம் இல்லை….  ஆனால் அவள் இருக்கு நிலையில் அவள் மீது பூ வென்ன அது தொட்ட காற்று மோதுவது கூட இவனுக்கு வலிக்கும்…

“முதல்ல சாப்டு…அடுத்து அழகா கிளம்பி மேரேஜுக்கு வந்து சேரு….” தன் மீது படர்ந்திருந்தவளை பிரித்தெடுத்து அருகிலிருந்த ஜூஃஸை அவளுக்காய் நீட்டினான்…..

அவள் முகம் சுருங்கிய கோலத்தில்…

“அட லூசு…மேரேஜ் அதிக்கும் அனு அண்ணிக்கும்……நீ வரலையா…?” அவன் கேட்கவும் தான் இவளுக்கு நடந்த விஷயமே புரிகின்றது…..

இவள் முகத்தில் மொத்தமாய் அத்தனை மகிழ்ச்சி….. “என்னைக்கு இப்டி இமோஷனலாவே இரு……நல்லா நாலு வைக்கிறேன் உனக்கு…..” இவளிடம் சொன்னவன்… அறையை விட்டு வெளியே போனான்….

“அண்ணி அவள கிளப்பி கூட்டிட்டு வாங்க….நான் அங்க போறென்…” வெளியே நின்ற நிலவினியிடம் சொல்லிவிட்டுப் போனான்….

“எத்தனை அடி சார் போட்டீங்க….” நிலவினி வார…

தன் காதை தேய்த்துக் கொண்டவன்….. இப்போதைக்கு இல்ல…பட் கண்டிப்பா உண்டு…” அவன் முகத்திலுமே இதுவரை இருந்த அத்தனை இறுக்கமும் போய் குடி வந்திருந்தது மகிழ்ச்சி….

“எங்க தெரியாதாக்கும் கோபம் எல்லாம் வெளிய தான்….சரியான சரண்டர் பார்ட்டி…” இது வினி

“எங்க அண்ணா மாதிரியே எல்லோரையும் நினைக்க கூடாது…” இது இவன்…

அடுத்தென்ன அற்புதமாய் நடந்து ஏறியது அதி அனு திருமணம்…

வெகு இயல்பு போல் கலந்து கொண்டாள் பவிஷ்யா…… நாளை என்னவென யோசிக்க முடியவில்லைதான்…..ஆனால் அபயன் “ப்ச்….பார்த்துக்கலாம்” என முங்கிவிட்டுப் போன இரண்டு வார்த்தை பலம் சேர்க்கிறது….

அடுத்து திருமணம் முடிந்த பின்….. இப்போது அனுவும் அதிபனும் வீட்டிற்கு சென்றார்களாயின்……மற்ற குடும்ப உறுப்பினர்கள் கிளம்பிப் போனது பவிஷ்யா வீட்டிற்கு….

பவிஷ்யாவிற்கு அவள் மாமவுடன் திருமணம் என அடித்து வந்திருந்த பத்திரிக்கை அப்போது தான் ஹாலில் வந்து இறங்கி இருந்தது….. பவி வீட்டில் அங்கும் இங்குமாய் சுனங்கி கிடந்ததால் அவள் வீட்டில் இல்லை என்பதையே யாரும் இதுவரை கவனித்திருக்க கூட இல்லை…

இப்போது இந்த அலங்கார கோலத்தில் இவர்களோடு போய் நிற்கும் போதுதான் அவள் வீட்டில் இல்லை என்பதே புரிகிறது…

கூடவே அவள் அப்பா மிரண்டும் போனார்…… அவரால தாங்க முடியாத  விஷயம் இது பொண்னு வீட்டை விட்டு போய் கல்யாணம் செய்து கொள்வது என்பது…..அடுத்து யாரை எப்படி அவரால் நிமிர்ந்து பார்க்க முடியுமாம்?....அவர் பயம் அவருக்கு…

அடுத்து ஒரு காரசார பேச்சு அவர் புறமிருந்து….ஆனால் அத்தனை பேருமாய் அமர்ந்து பேசி…அவருக்குமே இத்தனை அளவு வந்த பின்…..இதில் பிடிவாதம் செய்து கிடைக்கப் போகவது ஒன்றுமில்லை என ஒரு நினைவு……அதோடு மகள் இவர் விருப்பம் இன்றி போய்விட்டால் என்ற ஒரு கேள்வி…..

முழு மனதாக இல்லை எனினும் அபை பவி திருமணத்திற்கு அவர் ஒத்துக் கொண்டார்….. ரொம்பவும் இழுக்க வேண்டாம் என இரண்டு வாரத்தில் திருமண தேதி முடிவு செய்துவிட்டு தான் கிளம்பினர் அபயன் குடும்பத்தினர்…

இப்போது பவிக்கு மீண்டுமாய் பயம்…இவங்க போனதும் ப்ரதிய மாட்டுவாரோ அப்பா…?

கிளம்பும் முன்… “ரெண்டு நிமிஷம் அவட்ட பேசிக்கிறேன் மாமா…” என  கேட்டுவிட்டே இவளிடம் பேச வந்த அபயன்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.