(Reading time: 49 - 98 minutes)

கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரதிக்கு இப்போது டெம்பரேச்சர் ஏற….இவள் பேரசெட்டமால் கொடுத்தும் அது குறையாமல் கூட…..ஒரு கட்டத்தில் ஜுர வேகத்தில்…..இன்றைய மாமாவின் செயலில் ஆரம்பித்தவள்….சிறு வயதிலிருந்து இன்று வரை அவள் அனுபவித்த பார்ஷியாலிட்டியை பவியோடு ஒப்பிடு ஒன்றொன்றாய் சொல்ல ஆரம்பித்தாள்….

.”கண்டிப்பா நான் இப்ப இல்லைனாலும் சீக்கிரம் செத்துடுவேன்…..” முழுவாய் நினைவிலிருக்கிறாள் என்ற நிலையில் இல்லாத போதும் ப்ரதி இப்படியாய் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டிருக்க….

 மொத்தமாய் பவிஷ்யா விழுந்தது இங்கேதான்……தங்கை மீது தாய்மை நிறைந்த பாசம் வைத்திருந்தவளுக்கு….. தன் தங்கை எப்போதும் தன்னால் பாடு அனுபவித்திருக்கிறாள் என்பதோடு…….இப்போதும் அவளை தனக்காக பலி இடப் போகிறார்கள் என்று இவள் நினைத்திருந்த விதத்தால் வந்த உணர்ச்சிப் போராட்டத்திலும் ….

தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டும் அப்பாவிடம் மாமா வகையில் வேறு  மாற்றத்தை எதிர் பார்க்க முடியாது என்பதிலுமாய்

அவளுடைய அப்பாவிடம் கதறிவிட்டாள் “உங்களையாவது இல்ல ப்ரதியாவது கொன்னுட்டுதான் எனக்கு வெளிய மாப்ளை பார்க்கனும்னா எனக்கு அப்டி ஒன்னு வேண்டாம்” என…

அபைக்காக அவளால் ப்ரதியையோ அப்பாவையோ விட்டுவிட்டு போக முடியுமாயிருக்கும்….. ஆனால் கண்டிப்பாய் கொன்றுவிட்டு போக முடியாது….. இது தான் அவள் மனதின் அப்போதைய நிலை…… அவள்  அந்த சூழலில் கண்டது தங்கையையும் தந்தையையும் தான்……

வழக்கம் போல் தன்னை அவள் பார்க்கவில்லை…….தன்னவனையும்தான்…

இவளது இந்த முடிவை அப்பா இமிடியட்டாய் ஏற்றார் என்றெல்லாம் இல்லை…….”என்ன  விளையாடுறியா அங்க கூப்ட்டு சொல்லியாச்சு….” என மறுக்கத்தான் செய்தார் முதலில்…

ஆனால்  அடுத்து மருத்துவமனையில் அட்மிட் ஆன சின்ன மகளின் கண் விழிக்கா நிலையும்…,….இவளது இந்த வார்த்தைகளுமாய் சேர்ந்து…..பேசிய திருமணத்தை நிறுத்த வைத்தது அவரை…..

தங்கை சுகமாகி வீடு வரும் வரையுமான நான்கு நாட்களும் பவி இதே  மனநிலையில்தான் இருந்தாள்…அதோடு அவள்  ஹாஃஸ்பிட்டல் போன விதத்தில் மொபைலை எடுத்துக் கொண்டு கூட போயிருக்கவில்லை…..

ன்று ப்ரதி  மருத்துவ மனையிலிருந்து வீடு வந்து மூன்று நாட்கள் ஆகி இருந்தன….. இந்த மூன்று நாளில் அத்தனை ஆயிரம் முறை தவித்துவிட்டாள் பவிஷ்யா….எப்படி இவள் அபையை வேண்டாம் என வீட்டினில் சொல்லிவிட்டாள்??? அவன் இல்லாமல் எப்படி போகப் போகிறதாம் வாழ்க்கை…??

மூன்று நாளில் அத்தனை எடை குறைந்து…..முகம் முழு பாலைவனமாய்……உடல் ஊணற்ற  பிண்டமாய்…உயிர் சுமப்பதே பெரும் வேலையாய்….. சுருண்டு கிடந்தாள் அவள்…..

இதில் அங்கு வந்து நின்றார் மாமா…..இவள் அறைக் கட்டிலில் கிடந்தவளுக்கு ஏதோ சலனம் உணர திரும்பிப் பார்த்தாள்…. இவள் அறைக்குள் வங்து கொண்டிருந்தார் அந்த மாமா…..

அவர் முகத்தில் என்ன பாவம்…..கண் பார்வை எங்கு படுகிறது…..எதையும் இவள் கவனிக்கும் நிலையில் கூட இல்லை…. இப்போது இவர் யார் இவளுக்கு??????!!!!!!!!

சுத்தமாய் பலமற்று கிடந்தவளுக்கு எங்கிருந்து எப்படி வந்தது அந்த பலம் என்றெல்லாம் தெரியாது……துள்ளி எழுந்தவள் அரக்க பறக்க அடித்து ஓடியது அவளது அப்பாவிடம்……அவரது அறையில் வேஷ்டியும் பனியனுமாய் சேரில் உடகார்ந்து எதோ கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவின் கைகளைப் போய் அப்பி பிடித்தவள்…. அவர் உயரத்திற்கு குனியவென இவள் கால்கள் எப்போதோ  முட்டி இட்டிருந்தது…..

“அப்பா……வேண்டாம்பா…….என்னை தயவு செய்து விட்டுடுங்கப்பா…..என்னால இந்த கல்யாணத்துக்கெல்லாம் கண்டிப்பா ஒத்துக்க முடியாதுபா…… நான் கல்யாணமே செய்யாம கூட இருந்து உங்களைப் பார்த்துகிறேன்பா…..வேண்டாம்பா….ப்ளீஸ்பா….” மயான அமைதியில் இருந்த வீட்டில் அழுகையும் கதறலுமாய் இவள் சத்தம் சட்டென கேட்க

அதில் “என்னடி அடுத்த ஆர்பாட்டம்…?” என்றபடி அங்கு வந்து சேர்ந்த அம்மாவை…..இவள் முட்டி இட்டு இருந்த நிலையிலேயே அவர் தொடைகளோடு சேர்த்து கட்டிக் கொண்டவள்…… “அம்மாம்மா விட்றுங்கம்மா…..உங்களுக்கு கூட புரியலைனா நான் யார்ட்டமா போய் சொல்ல….?”அடுத்து என்ன சொல்ல வந்தாளோ……நாள் கணக்காய் சாப்பிடாமல் கிடந்த உடலும்…..உச்ச உணர்ச்சி வேகமுமாய் மயங்கிப் போனாள் அவள்…

அடுத்து அவளுக்கு விழிப்பு வரும் போது அவள் படுக்கையில் துணி போல் கிடக்க…அங்குதான் நின்றிருந்தார் அப்பா….

“என் உயிர் போனா கூட மில்காரங்க வீட்டோட திரும்பவுமெல்லாம் என்னால சம்பந்தம் பேச முடியாது…. எத்தனை தடவை மாத்தி மாத்தி சொல்ல அங்க…..மானம் உள்ளவன் எவனாவது செய்வானா?....அங்க சம்பந்தம் செய்ய சரின்னு சொல்லிட்டு இங்க உன் மாமான்னா மட்டும் அலர்றியே அதான் சொல்லி வைக்கேன்….”  சொல்லியவர் “ மில் வீட்டுப் பையனை இதோட மறந்துடு…..அவன் கூட சேர்ந்து அடுத்த ட்ராமா போடலாம்னு நினச்சா இந்த வீட்ல இருந்து போற பிணம் தனியா போகாது…..” இவள் பதிலை கூட கேட்காமல் கடகடவென வெளியே போய்விட்டார்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.