ஒரு கணம் அவன் அதை கண் மூடி அதை ரசிக்க…..நெருங்கி நின்றவன் நெற்றியில் முதல் முத்தம் அவளது… விழி விரிய ஆசையாய் இப்போது அவளைப் பார்த்தவனின் அணைப்பிற்குள் இருந்தாள் அவள் அடுத்த நொடி…
“அன்னைக்கு என் வீட்ல கொண்டு என்னை விட்டுட்டு கிளம்பினீங்கல்ல அப்ப தோணிச்சு…”
“ஹேய் நானும் உனக்கு நிறைய இப்டி கடன் வச்சுறுக்கேன்…
“.இது அன்னைக்கு கிணத்தடில பார்த்தோமே அப்ப கொடுக்க முடியாம போனது…..” அவள் கன்னத்தில் ஆரம்பித்தான் அவன்….
“இது அண்ணி சொன்னதுக்காக என்னை பார்க்காம சுத்திட்டு இருந்தியே அப்ப….”
லிஸ்ட் நீண்டு
“இது அன்னைக்கு பாயாசம் கொண்டு வந்தியே அதுக்கு…” வரும் போது… கதவை யாரோ தட்டும் சத்தம்…. “சாரி மக்களே….கீழ உங்கள பெரிய தலைகள்லாம் தேடுது….” அனுதான் சொல்லிவிட்டுப் போனாள்…
“ஃஸ்….கூப்டுறாங்க….” பவி விலக …
“இது இன்னைகு நைட்க்கு ஸ்டார்ட்டிங் பாய்ண்ட்….” இதழில் முற்றுப் புள்ளி வைத்து தொடக்கமிட்டு வைத்தான் அவள் கணவன்….
சில வருடங்களுக்கு பிறகு…
யவ்வனும் வினியும் வீட்டிற்குள் நுழைய ஏனோ ஏற்க முடியாத அமைதி…
அடுத்த அறைக்குள் இவர்கள் சற்று எச்சரிக்கையாகவே நுழைய..
இவர்களை ஓரக்கண்ணால் பார்த்தார் இவர்களது ஜூனியர்….
“வாங்க…” அவன்தான்
‘இவன் குரல் ஏன் இப்டி இருக்குது…..?’ வினி மிரள தொடங்கிய நேரம்….. பையன் சட்டென சுவரோடு மேலே பறக்க….
“அம்மா….என் பிள்ள…” வினி அலற..
“அம்மா…” குழந்தை இவளைப் பார்த்து கையை நீட்ட இவளுக்கு பின்னால் உள்ள டேபிள் சர்ரென அதாக விலகிப் போய் எங்கோ விழுகிறது….
காதுகளைப் பொத்திக் கொண்டு வினி பதறி விலக…
“வினு…இதெல்லாம்…” யவி அவளுக்கு ஆறுதல் சொல்ல தொடங்க…
“அப்பா…” குழந்தை இப்போது இவனைப் பார்த்து கை நீட்ட இவன் பின்னாலிருந்த செல்ஃபிலிருந்து புத்தகங்கள் வரிசையாய் சிதறி விழுகின்றன கீழே….
“யவிப்பாஆஆஆ…” பதறிய வினியை பக்குவமாய் பற்றியபடி….பின்னால் நகர்ந்து அங்கிருந்த கதவுக்குப் பின் கை நீட்டி அவன் இழுக்க…
வினியின் செல்ல குட்டியார் ஆரவ்….அவளோட அக்கா பையன்…..லீவுக்கு இங்கு வந்திருக்கிறான்….
“ஐடியாதான் நெட்ல இருந்து நான் எடுத்தேன் சித்தப்பா….செய்தது எல்லாம் அபை சித்தப்பாதான்..”
இதற்குள் உள்ளே வந்த அபையின் கையில் ஏறி இருந்தான் வினியின் மகன்….
“வாங்க சார் வாங்க…..உங்க ஜூனியரும் வரட்டும் அப்றம் இருக்கு “ அபையை வினி வரவேற்க…
மேடிட்ட வயிறோடு உள்ளே வந்த பவியோ…
“நீ செய்றியோ இல்லையோ நான் செய்றேன் அதை…என்ன செய்தாலும் அடங்க மாட்டேங்காங்கப்பா…” வினியிடம் குற்றப் பத்திரிக்கை வாசிக்க….
“இன்னும் என்ன அடங்கனும் பவி… நேத்து கூட நைட் 20 டைம் சிட் அப்ஸ் எடுத்தாராம் அவளோட சித்தப்பா….சிருஷ்டி வந்து சொல்லிட்டு இருந்தா….” அனு கையில் அவர்களது முதல் வாரிசு சிருஷ்டி…
அனுவிடமிருந்து தன்னை நோக்கி தாவும் அண்ணன் மகளை கையில் வாங்கிய அபயன்….”அது சும்மா….பிஸிகல் வர்க் இல்லைனா வெயிட் போடும்னு அவ ஏதோ வர்க் அவ்ட் ஷெட்யூல் சொன்னா அண்ணி….நீங்க அதி மாதிரி நான்னு நினைக்காதீங்க…..” அபை இப்போது வார…
“கண்டிப்பா நான் உன்னை மாதிரி கிடையாதுடா…” அதி சொல்லியபடி உள்ளே வந்தவன்…..அனுவைப் பார்த்து கண் சிமிட்ட… “பிஸிகல் வர்க் இருக்கனும் அப்பதான் ஃபிட்டா இருக்க முடியும்” என சொல்லி அனுவையே அவன் அவ்வப்போது தூக்கி தூக்கி வெயிட் லிஃப்டிங் செய்வதும் அதில் தொடங்கும் இன்ன பிற விஷயங்களும் அவள் மனதுக்குள் ஓடி….அவள் முகத்தில் அதன் வண்ணத்தை காண்பிக்க
“ஆஹான்…” என ஏதோ விஷயம் என புரிந்த வினி வம்பிழுக்க….
ஆனந்தத்திற்கு அங்கு முடிவில்லை….
Friends ரொம்பவும் லேட் எப்பி……அதோடு நான் நீங்கள் எதிர் பார்த்த அளவும் இந்த எப்பியை தந்திருக்கவில்லையோ என்றும் தோன்றுகிறது……உங்கள் கருத்துக்களை பகிருங்கள்…. மீண்டும் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வருகிறேன்…..அனைத்து உதவிகளையும் செய்த சில்சீக்கும்…துணை வந்த உங்களுக்கும்….சுகம் பேணும் தெய்வத்திற்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்…. அடுத்த வாரம் சந்திப்போம்…..
முற்றும்!
{kunena_discuss:929}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.