(Reading time: 49 - 98 minutes)

டுத்து இரு வாரம் கடந்திருந்தது……. அது இரவு தொடங்கும்  நேரம் அதே கிணத்தடியில் பவி….. வீட்டில் நடக்கும் எதையும் கவனிக்க கூடாது என அத்தனையாய் தவிர்த்திருந்தாள்….எதையாவது கண்டு இன்னுமா குளம்பும் மனசு…..

அப்போதுதான் இவள் முன் வந்து விழுகிறது அந்த கல்லில் சுற்றப்பட்ட காகித பந்து….. “எடு எடுத்து படிச்சுப் பார்த்து சந்தோஷபடு… போடி அறிவு கெட்டவளே….” வெளியே ரெஜினாவின் குரலும் புல்லட் கிளம்பிப் போகும் சத்தமும்….

கை நடுங்க தான் எடுத்தாள் பவி…..எடுக்கும் போதே அவளுக்கு அத்தனை கசப்பான ஒரு பந்து அடி வயிற்றில்….திறந்து பார்த்தாள்…. அபயனுக்கும் அனுவுக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…………….அந்த பத்திரிக்கையை அவளால் வாசிக்க கூட முடியவில்லை…………..

கடவுளே… என்னதிது…?

கால நேரத்தைப் பார்த்தாள் இன்னும் இரண்டு அரை மணி நேரத்தில் திருமணம்….….

அதற்கு மேல் அவள் என்ன செய்தாள் என்றெல்லாம் அவளுக்கே தெரியவில்லை….. யாரை அழைக்கவும் அவளிடம் மொபைல் கூட இல்லை….வீட்ல எப்ப யார் அதை எடுத்து எங்க வச்சாங்களோ…..கேட் வழியாக வெளியே வந்தாளா…இல்லை சுவரேறி குதித்தா……நோ ஐடியா….  ஓடத் தொடங்கி இருந்தாள் அவள்….

ங்கு திருமணத்திற்காய் தயாராகிக் கொண்டிருந்தாள் அனு…..டார்க் வயலட் நிற காஞ்சிப் பட்டு…..அள்ளி இறைக்காமல் மிதமான நகைகள்…..அவள் ஒல்லி உடல் வாகுக்கு மிகவுமே அழகாக தெரிந்தாள்தான்….. ஆனால் அவள் முகத்தை சந்தோஷம் துளியும் இல்லை…..

தன்னை சமப் படுத்த நெற்றியை அடிக்கடி தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள்…..

யாராகி நின்ற அபயன் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்தான்….. அவனுக்கு நடப்பதை தாங்க தனி சக்தி தேவைப் படுகிறது……கண்களை இறுக மூடித் திறந்தான்…..கண்ணிற்குள் அவனது பவிப் பொண்னு….. இப்டி செய்துட்டியேடி…என அவளை குறை சொல்வதா…அல்லது இவனது இந்த முடிவுக்கு தன்னைத்தானே சிதறிக் கொள்வதா?

அதிபன் சர்ச்சில்தான் இருந்தான்….. அவன் முகத்தில் எதையும் காண்பிக்க விரும்பாத இறுக்கம்….மரகதமும் பொற்பரனும் கனி மொழியுடன் முதல் வரிசையில் அமர்ந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்….அவர்கள் மூவருமே சந்தோஶமாக இருப்பது தெரிகிறது….

இந்த முடிவும் கூட அவர்களுடையது தானே….சரியாய் சொல்ல வேண்டுமெனில் மரகத்தின் முடிவு இது…..இம்ளிமென்ட் செய்தது பொற்பரன்…

அன்று பவியும் முடியாதென சொல்ல….அதிபனும் அனுவிடம் மௌனமாக கடந்து போக…..அன்றே அறிவித்து விட்டார் மரகதம் இந்த முடிவை தன் கணவனிடம்…. பொற்பரன் பேச்சை அபயன் மீறியதாய் இது  வரைக்கும் கிடையாது….

அனுவுக்கோ கனி ஆன்டி இதை சொன்ன போது தாண்டிப் போக முடியவில்லை….. அதிபன் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வான் என பார்த்தால்….அவன் என்ன நினைக்கிறான் என காட்டிக் கொள்ள கூடாதென்பதிலேயே குறியாய் இருந்தான்….

உண்மையில் ரொம்பவும் தவித்தது  அவந்தான்….. ஆனால் அம்மா அப்பாவை அவர்கள் முடிவை இந்த விஷயத்தில் அப்ரப்டாய் எதிர்க்க அவனுக்கு வராது….

யவ்வனும் வினியும் ஓடி ஓடி வந்தவர்களை கவனிக்க வேண்டிய நிலையில்…. குடும்பத்தோட ஒரே திருமணமான ஜோடி இவர்கள் தானே…நிற்காமல் சுழன்று கொண்டிருக்க வேண்டிய நிலை…

ஆனால் இருவர் முக புன்னகையும் வெளி பக்கத்திற்கே….உள்ளுக்குள்…தெய்வமே தெய்வமே தான்….

கண்ணில் பட்ட முதல் ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டாள் பவி…. ‘பக்கத்துல உள்ள டெலிஃபோன் பூத் போய் கால் செய்துட்டா போதும்….அபை எப்டியும் வந்துடுவாங்க…..’

அதுதான் அவள் நம்பிக்கை…..

ஆனால் அப்படி போய் ஃபோன் செய்தால்…..அவன் நம்பர்  ஸ்விட்ச்ட் ஆஃப்….அடுத்து இவள் யாரை அழைக்க என திகைத்த நொடி கண்ணில் படுகிறது அந்த போலீஃஸ் வெகிகிள்….. பெரியத்தான் ஃப்ரெண்ட்  சசிபால்…..

கூப்டா இல்லையா ரெஜி..சசி கூட போய்டலாம்னு…..அப்போ அவருக்கு விஷயம் தெரியும்தானே….. அடுத்த இரண்டாம் நிமிடம்…அவரோடு இவள் போய்க் கொண்டு இருந்தாள்….

அங்கு தயாராகி இருந்த அனுவை சர்ச் வாசலில் கொண்டு வந்து நிறுத்தியது வினி….

அனு முகம் இருந்த வகை பார்த்து…. வினிக்கு என்ன சொல்லவென தெரியவில்லை…..

மெல்ல ஆல்டரைப் பார்த்து நடக்க தொடங்கினாள் அனு….

மணப் பெண் வருகை அறிவிக்கப் படவும் ஆல்டரில் சகோதர்களுடன் நின்று கொண்டிருந்த அபயன் திரும்பிப் பார்த்தான்…

அனுவை அவளது கசின் அழைத்து வந்து கொண்டிருந்தான்….

இடக்கையால் தன் முகத்தை இவன் ஒற்றிக் கொண்ட நேரம் பார்வையில் படுகிறாள் அனுவுக்குப் பின்னால் வாசலில் நுழையும் பவி….

பார்க்கவும் எந்த  வகையிலும் தன் அமைதியை கைவிடக் கூடாதென எத்தனையோ அவன் நினைத்திருந்தாலும்…..அவள் இருந்த கோலத்தைப் பார்க்க அவன் உறுதியை காப்பாத்திக் கொள்ள முடியவில்லை….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.