(Reading time: 49 - 98 minutes)

ரெஜினா சொல்லிக் கொண்டு போக “இததான் ஊர்ல ஓடிப் போறதுன்னு சொல்லுவாங்க….வாழ்நாள் முழுக்க வலிக்கும் இதோட பின் விளைவு….” ரெஜி  முகத்தைப் பவி பார்த்த பார்வையிலேயே….இவள் மறுப்பு புரிய…..

”சரி அப்ப உன் அப்பா இஷ்ட படியே செய்….அபை அண்ணா நீ என்ன நினைக்கிறன்னு கேட்டுட்டு வர சொன்னாங்க….நீ சொன்ன பதிலை போய் சொல்லிடுறேன்” கிளம்பி சென்றுவிட்டாள் அவள்….

ந்த நிலையில் அன்று மரகதமுடன் அனுவின் வீடு சென்றிருந்த நிலவினி அனுவின் இருநிலை மனதை உணர்ந்தவளாக அடுத்து அவளை சந்திக்க சென்றாள்….வினிக்கும் அனுவின் நிலமை புரியாமல் இல்லை….வெகு இயல்பான ஒரு திருமணம் இவளுக்கு யவியோடு ……அதையே இவள் மனம் எத்தனையாய் குழப்பி பயந்தது……

இதில் தன் மாமியாருடன் வசிக்கும் அனுவின் நிலை என்னதாய் இருக்குமாம்…. அனுவின் இந்த தடுமாற்றம் கூட நிலவினிக்கு ஒரு வகையில் அனு மீது மரியாதையையும் நம்பிக்கையையும் தான் ஏற்படுத்துகிறது…..

இன்னைக்கு ஒரு லவ்…..வர்க் ஆவ்ட்ஆனா ஓகே…..இல்லை நாளைக்கு ப்ரேக் அப்…அடுத்து இன்னொன்று என எடுத்துக் கொள்பவர்கள் ஒரு உறவுக்குள் நுழைய விருப்பமும் வாய்ப்பும் இருக்கும் போது நுழைய தயங்குவது இல்லை…..

ஆனால் இறுதி வரை உறவு நிலைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தான் ஆயிரமாய்  தயங்குவார்கள்….அந்த வகையில் அனு மிகவும் யோசித்தே இந்த உறவுக்குள் வர நினைப்பது நிலவினிக்கு சரியான ஒரு அனுகுமுறையாகவே தெரிகிறது….

ஆனால் அதற்காக அதை அப்படியே விட்டுடவும் முடியாதே….என்ன ப்ரச்சனைனு தெரிஞ்சா ஹெல்ப் செய்யலாமில்லையா…? அதற்குத்தான் அவள் அனுவை சந்திக்க மறுநாள் மாலை மீண்டுமாய் போனதே….

கனி மொழி முன்பாக மனம் விட்டு பேச ஒரு வித தயக்கம் இருக்கும் என அனுவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் வினி….

ஊரின் குளத்திற்கு அருகில் ஒரு களத்து மேடு உண்டு…… சிமெண்ட்டால் பூசப்பட்ட  அகல தரைக்குத்தான் அப்படி பெயர்….அருகில் குளக் கரையில் பெரிய பெரிய ஆல மரங்கள்  இதற்கு நிழல் கொடுக்கும்…… அறுவடை காலத்தில் முன்பு கதிர்களை இங்கி கொண்டு வந்து கொட்டி….. மாடுகளை வைத்து போரடிப்பது வழக்கம்….

இப்போதெல்லாம் மிஷின் அறுவடை…… ஆக களம் எப்போதுமே காலிதான்……  பொதுவாய் பெரிதும் ஆள் நடமாட்டமின்றி இருக்கும் பகுதி இது…..  ஆனால் பாது காப்பிற்கும் குறைவிருக்காது….. காரணம் இந்த களத்து மேட்டுக்கு எதிர் புறம் ஊர் கிணறு…… மொத்த ஊருக்கும் இந்த கிணற்றிலிருந்து தான் குடி நீர் கொடுக்க படுகிறது…..

முன்பு  மக்கள் வாளியால் நீர் இரைத்துக் கொள்வர் இங்கிருந்து என்றால்..இப்போதெல்லாம் அருகில் இருக்கு வாட்டர் டேங்கிற்கு மோட்டர் மூலம் நீர் ஏற்றப் பட்டு…அனைத்து வீடுகளுக்கும் பைப் மூலம் தனி தனியே சப்ளை செய்யப் படுகிறது…

குடி தண்ணீர் அல்லவா….. யாரும் கோபத்தில் எதையும் செய்து வைத்துவிடக் கூடாதே….. ஆகவே கிணற்றுக்கு பாதுகாப்பு மற்றும் மோட்டர் போட்டு தண்ணீரை டேங்கிற்கு ஏற்றவென  ஒரு ஆள் உண்டு அங்கு…..

ஆதலால் கண்ணுக்கு எட்டிய காது கேளா தூரத்தில் ஆள்….பேச மொத்த ப்ரைவசி என வினி அனுவை அழைத்துப் போனது அங்கு……

 அனுவிற்கு அதிபன் குறித்த தன் மன எண்ணங்களை வினியிடம் சொல்ல வேண்டும் என திட்டமில்லைதான்…..ஆனால் வினியுடன் இருப்பது அவளுக்கு பிடிக்கும் என்பதால் வந்திருந்தாள்…. ஆக பேச்சு நேரடியாக அதிபனைப் பற்றி  தொடங்கவில்லை….சற்றாய் அங்கும் இங்குமாய் சுற்றிக் கொண்டிருந்தது…..

அப்பொழுது அங்கு வந்திருக்கிறது ஒரு கார்….கிணற்றுக்கும் களத்து மேட்டுக்கும் இடைப் பட்ட ரோட்டில் அது…… அதன் கதவு திறக்க உள்ளிருந்து குதித்து இறங்குகிறான் ஒரு 10 வயது மதிக்க தக்க பையன்…… அடுத்த படியாய் இன்னும் இருவர்…..அவனது அம்மா அப்பாவாக இருக்க வேண்டும்…..

அத்தனை பேரும் அனுவை விடவும் பளீரென்ற வெள்ளை நிற வெளி நாட்டினர்….

கொண்டல் புரத்தை பொறுத்தவரை இது ஒன்றும் இயல்பான விஷயம் இல்லை என்பதால் வந்தவர் யாராய் இருக்கும் என வினியின் கவனம் அவர்கள் மேல் போகிறது….

கையில் காமிராவுடன் வந்திருந்த அவர்கள் அங்குமிங்குமாய் ஃபோட்டோக்கள் எடுக்க….. அந்த  பையனோ இவர்கள் அருகில் இருந்த ஆலமாத்தின் விழுதுகளை பிடித்து ஆடிவிட்டு வரைப் போனான்…. உற்சாகம் எல்லாவற்றிலும்….

அடுத்ததாய்  அவர்கள் ஊர் கிணறின் புறம் நகர்ந்தவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்க….ஏதோ வேலை காரணமாக கிணறின் கை பிடி சுவர் மேல் மூடியாக  வைக்கப் பட்டிருந்த  க்ரில்லின் கதவு திறந்திருக்க…..  கயிறில் கட்டிய வாளி ஒன்றும் அங்கிருக்க…..

மோட்டர்ல எதாவது ப்ரச்சனை எனில் அந்நேர அவசரத்துக்கு பயன்படும் என வைத்திருக்கும் அதை இப்போது விளையாட்டாய் எடுத்த பையன்  அதை வைத்து கிணற்றிலிருந்து நீர் இறைக்க முயன்றான்….

அவனுக்கு எல்லாமே புது விஷயம்…..எல்லாவற்றிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தான்….அவனுக்கு அது விளையாட்டாய் இருந்தது போலும்..... கூட வந்திருந்த பெரியவர்களிடம் எதையோ சொல்லி சிரித்தபடி அவன் நீர் இறைக்க….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.