(Reading time: 49 - 98 minutes)

னாலும் எத்தனையோ பேர்  இப்டி மேரேஜ் செய்து வாழலையா…. இவளோட க்ளாஃஸ்மேட் ராகா அவளோட தாய்மாமவ லவ் மேரேஜ் செய்றா….தன் மனதையும் மாத்த முடியும் என்றுதான் முதலில் நம்பினாள்…. எப்போதும் எதையும் ஏற்றுப் பழகிய குணம் அதை தான் தூண்டியது….

ஆனாலும் நாலு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை…. இந்த நினைவுகளிலிருந்து  இதை திரும்ப திரும்ப கொண்டு வரும் தன் மனதிலிருந்தே விடுபட்டு ஓடி விட வேண்டும் போல் தவித்துப் போனாள்….

 இதில் இன்று மாலை தலைக்கு குளித்துவிட்டு மொட்டை மாடியில் வீசி அடித்த காற்றில் முடி காய வைத்துக் கொண்டிருந்தாள்…..முகத்தில் அறைந்து முடிபிரட்டிய காற்றின் விடுதலையை தனதாய் கற்பனித்து இவள் கண் மூடி இதம் காண முயன்றிருந்த நேரம்….

இவள் துப்பட்டாவை பின்னிருந்து எதோ இழுப்பதாய் இவள் உணர…அதற்குள் அது அவளிடமிருந்து முழுதாய் பறி போயிருந்தது….. இழுத்த திசையில் இவள் பதறித் திரும்ப……மாமா…. அவர் கையில் இவளது துப்பட்டா…

“நான் வந்தத பார்க்கவும் மாடிக்கு தனியா வந்தல்ல….என்ட்ட பேசனும்னுதானே….” இவளது இந்த செயலை அவர் எடுத்துக்கொண்ட விதத்தில்…அதோடு அவர் இவளிடம் நடந்து கொள்ளும் முறையில்….

ஒரு பக்கம் சுர் என ஏறுகிறது கோபமெனில்……அதை காட்ட உரிமையற்ற உறவு நிலை ஒரு புறம்….மேரேஜ்னு பேசி முடித்த பின்பு இவர் செயலை இவள் என்னதாய் எடுக்க வேண்டும்?  மறுபக்கமோ அரண்டு சுருங்குகிறது இவள் பெண்மை…. அவர் பார்வை இவளை தொடும்  விதங்களில் அவள் கை அதுவாக அப்போதைய துப்பட்டாவாய் மாற….

“அப்டில்லாம் இல்ல…..” சுண்டிய முகத்தோடு இவள் ஓரெட்டு பின் வைக்க….

இவள் சற்றும் எதிர் பார்க்காத விதமாய் இவளை இடுப்போடு வளைத்து…. தன்னோடு இழுத்து……இவள் முகத்தில் மூர்க்கமாய் அவர் முகம் வைக்க முயல….. இவள் தீப்பட்ட புழுவாய் துடிக்க….விடுபடும் முயற்சியில் அம்மா அம்மா என அலறியபடி…இவளையும் மீறி இரண்டு மூன்று முறை அவரை அடிக்க….

“ஆக அக்காவும் தங்கச்சியுமா சேர்ந்து எதோ நாடகம் தான் போடுறீங்க என்ன….? ஆனா என்ன ஆனாலும் சொல்லிட்டேன்…….நீயும் இந்த மொத்த உடம்பும் எனக்குத்தான்….” இவளை விலக்கி தள்ளியவர்…..

 “கல்யாணம் மட்டும் முடியட்டும்…. அப்றம் கவனிச்சுக்குறேன்….” என்றுவிட்டு கட கடவென போய்விட்டார்….. போகிற போக்கில் அவர் எறிந்த இவளது சுருண்டு மடங்கிய துப்பட்டா அங்கிருந்த கொடி கம்பில் சிக்கி ஆடியது….

அடுத்து அவளது அறைக்கு வந்து அத்தனை முறையாய் குளித்துப் பார்த்துவிடாள்…..அவளை ஆட்க் கொள்ளும் அருவருப்புத்தான் விலகுவதாய் இல்லை…..  அம்மா அப்பா காலில் விழுந்து கதறி அழுதால் கூட அவர்கள் தன் பக்க முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என நன்றாக தெரியும்….. இவளால் இந்த கல்யாணத்திற்குள்  ஒரு நாள் கூட சமாளிக்க முடியாது…..என்ன செய்யவென்று தெரியாமல் வெகு நேரம் மொட்டை மாடியில் உட்கார்ந்து சுய பட்சாதாபத்தோடு அழுதவளுக்கு….. காற்றில் ஆடிய துப்பட்டா காட்டிய வழி…..தூக்கு கயிறு…

அதை செயல் படுத்த வந்த இடத்தில் தான் இப்போது பவிஷ்யாவிடம் மாட்டி நிற்கிறாள் அவள்…

விஷயத்தின் ஆழ அகலமெல்லம் சொல்லாமல் அடிப்படையை சொன்னதற்கே ஆடிப் போனாள் பவிஷ்யா….. “மாமா கூட எனக்கு மேரேஜாம்…உன் மேரஜ் முடிஞ்சதும்….” இவ்ளவுதான் ப்ரதி சொன்னது….அதற்குள் அவளை இழுத்துக் கொண்டு அவள் அம்மாவிடம் போய் நின்றாள் பவி….

தன் அப்பா தன் முடிவுகளை எந்த காரணத்திற்காகவும் மாற்றுபவர் இல்லை என்பது இவளுக்குத் தெரியும்….அப்படி இருக்க இவளுக்கு மாமாவுடன் திருமணம் என்றுவிட்டு பின் அபையுடன் திருமணம் என அப்பா தன் முடிவை மாற்றவும் இவள்  இதை எதிர் பார்த்திருக்க வேண்டும்….

அப்போது காதல் மயக்கத்தில் இதெல்லாம் கண்ணில் படவில்லை….. இப்போதோ  விஷயம் தெரிந்த பின் அப்பா தன் முடிவை மாற்றுபவர் இல்லை என்பதைதான் இவள் ஏற்க விரும்பவில்லை…..…இவளுக்கான முடிவை மாற்றி அபைக்கு ஒத்துக் கொண்டாரே…..அப்படியே தங்கைக்கும் அப்பாவும் அம்மாவும் மற்று ஏற்பாடுக்கு ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்…..

ஆனால் இவள் அம்மாவோ இவளை எதுவும் பேச கூட அனுமதிக்கவில்லை…அவரும் பெரிதாய் எதுவும் சொல்வதாயும் இல்லை…..”எங்களுக்கு எப்ப யாருக்கு என்ன செய்யனும்னு தெரியும்…..உன்ட்ட கேட்டு கேட்டுதான இவ்ளவு நாள் வளர்த்தோம் பாரு…..உன் வேலைய பார்த்துட்டுப்போ”  என்பது தான் அவரது பதில்…..

அடுத்து அவர் சொன்ன வார்த்தைகள்  தான் பவி சரிய தொடங்கிய இடம்….விழுகிறோம் என உணர்வின்றி அவள் விழத் தொடங்கிய கணமும் அதுதான்……..

 “இந்தா அவ மட்டும் உன் மாமாவை கட்டலைனா வேண்டாம் வேண்டாம்னு கூப்பாடு போடுறீய அந்த மாமாவ நீதான் கட்டி இருக்கனும்…..நீ இப்ப சிரிச்சுகிட்டு நிக்கியே அதுக்கு காரணம் அவ கழுத்துதான்….” அம்மா தங்கையின் கல்யாணத்தை சொல்ல….இவளுக்கு அந்த தூக்கு கயிறுதான் கண்ணில் வருகிறது…..

மிரண்டுதான் போனாள் பவிஷ்யா….. இவளுக்காக இவள் தங்கையை பலிகொடுக்கவா?????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.