(Reading time: 49 - 98 minutes)

டா… இந்த படிப்ப பத்தி பேசாதன்னு முன்னமே சொல்லி இருக்கேன் உன்ட்ட….பவி அப்பா கூட பிறந்தவங்க அத்தனை பேர் வீட்லயும் வீட்டுக்கு ஒன்னாவது இஞ்சினியரிங் படிக்க போய்ட்டு…..அப்ப நம்ம வீட்ல ஒருத்தியாவது அது மாதிரி போகலைனா என்னல்லாம் பேசுவாங்க….இப்ப டாக்டர்னா கவுரமா இருக்குதுல்ல….” அம்மா சொன்னது மாமாவுக்குத்தான் எனினும் அவரின் கண்கள் அப்பாவைப் பார்த்து சமாதான கொடி ஆட்டிக் கொண்டிருந்தது….

இது  ஒன்னு….இந்த பெருமைக்கு மாவடிக்கிறது இவங்க அம்மா ஊர் பரம்பரை சொத்து போல….. 8 படிச்சுறுந்தாலும் பத்திரிக்கை அடிக்கப்ப MA னுதான் போட்டுக்குவாங்க….. இதுல அப்பா சைடு எல்லார் வீட்டிலும் பிள்ளைங்க இஞ்சினியரிங் போக……பவிய டாக்டராக்கியே தீர்ரதுன்னு நின்னது அம்மா…..அப்பாவுக்கும் கொஞ்சம் கௌரவம் பார்க்கிற பழக்கம் உண்டு அத தேவையான அளவுக்கு சீண்டி தோண்டி நோண்டிவிட்டு அம்மா பவிய டாக்டராக்கினது……இதுல இப்ப அவங்க தம்பியே அதை குறை சொன்னா எப்டியாம்….?

“இங்க பாரு சின்னவனே…..உனக்கும் அவ படிச்சிறுக்கது உறுத்துது….சொந்ததுக்குள்ளயும் டாக்டர் பொண்ண பெரிய இடத்துல  குடுக்கலையான்னு கேட்காங்க…..” அம்மா ஆரம்பிக்க இப்போது மாமா முறைத்தார்….

“சொல்றத கேளு……பெரியவள அந்த மில்காரங்க வீட்ல கேட்கிறாங்கல்ல….அங்கயே கொடுத்துட்டு…… உனக்கு சின்னவள செய்யலாம்னு அபிப்ராயபடுறாங்க உங்க அத்தான்….” அம்மா சொல்ல சொல்ல மாமா ஒரு புரியாத பார்வை பார்த்தார் எனில்….. இவளுக்கோ காலடியில் நழுவியது நிலம்….

“ஏன்டா இவனே யோசிக்கிற….அவளுக்கும் படிப்பு முடியுது….. அவ பிஏ உன் படிப்பை விட கம்மிதான… வீட்டுக்காரி வேலைக்கு போகாம வீட்டோட இருக்கனும்னு சொல்றல்ல….யோசிச்சுப் பார்த்தப்ப எல்லாத்துக்கும் இது சரியா இருக்கும்னு பட்டுது…..”

மாமா சற்றாய் சிந்தனையில் ஆழ….

“பெரியவ படிப்புக்கு ஏக செலவு செய்துறுக்கோம்…இந்த சின்ன கழுதைக்கு அப்டி எதுவும் பெருசா இல்ல….அதனால அவளுக்கு போடுறதவிட இவளுக்கு அதிகம் செய்யலாம்னு உங்க அத்தான் அபிப்பிராயம்…..அந்த மில் வீட்ல வேற நகை பணம்னு எதுவும் பேச மாட்டாங்க போல….ஜெயநாதன் வீட்டு பொண்ண இப்பதான அங்க கட்டி கொடுத்தாங்க…..கேள்விப் பட்டேன்….”

ப்ரதிக்கு தானே மொத்தமாய் மரத்துப் போவது போல்…உலகம் தன்னை மட்டும் விட்டுவிட்டு சுற்றுவது போல்…

‘ஐயோ மாமா வேண்டாம்னு சொல்லிடனும்…..இல்லைனா இத தடுக்க யாராலயும் முடியாது….’ இவள் உயிர் கதற…

‘மாமா என்னைக்கு அப்பாவ எதித்துப் பேசினார் இப்ப மட்டும் என்ன சொல்லிட போறார் என்கிறது அறிவு….’

“சரி இதுவும் சரியாதான் இருக்குது….செய்… என்ன இப்ப பெரியவ இருக்கப்ப சின்னவ கல்யாணம் செய்ய முடியாது…..நீ கொஞ்சம் வெயிட் பண்னுனு சொல்லுவ…..முடிஞ்ச வரை மூத்தவ கல்யாணத்த சீக்கிரமா முடிங்க…..அந்த கல்யாணத்தோடயே எங்களுக்கும் நிச்சயம் முடிச்சுடுங்க…..அடுத்து ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் வச்சுகிடலாம் தானே…..நான் வேலைய ஆரம்பிக்கேன்…” மாமாவின் பதிலில் தன் மொத்தமும் முடிந்து போனதாக ஒரு உணர்வு இவளுக்கு…..

அடுத்து வந்த நாட்களில் பவிஷ்யா அபை திருமணத்தை உறுதி செய்து இவள் வீட்டில் இருந்து தகவல் கொடுக்கப்பட….இவளைத் தவிர அத்தனை பெரும் ஆனந்தத்தில் அலையடிக்க….

மாமாக்கு வயசு கொஞ்சம் அதிகம்…மத்தபடி என்ன….. எல்லோருக்கும் ஒரு நாள் வயசாக தானே செய்யும்…இது என்ன விஷயாமா என எத்தனை தான் சமாதான படுத்தினாலும் அடங்க மறுக்கிறது இவள் மனது….

ஒரு பக்கம் இதுவரை எப்போதும் அனுபவித்த செகண்ட்ரி ட்ரீட்மென்ட்டின் மொத்த வலி…..பவிக்கு வேற மேரேஜ்க்கு கௌரவமான இடம் பார்க்கனும்னுதானே இவளுக்கு இந்த நிலை…..

அதற்காக அக்கா மேல் வருத்தமெல்லாம் இல்லை… அக்காவுக்காக இதை அனுபவிக்கலாம் என்ற நினைவுதான் இவளை இத்தனை பாடு பட்டு தன்னை தானே சம்மதிக்க சொல்லி கட்டாயப் படுத்திக் கொண்டிருக்கும் உந்து சக்தியே….

ஆனால் அவ அம்மா அப்பாவுக்கு…? அவங்க இவளை என்னதா பார்க்காங்க?

கூடவே தூக்கி வளர்த்த மாமா….. அவர் அப்படியே ஒட்டி உறவாடிய ரகமில்லைதான்….. இருந்தாலும் வயது காரணமாக….பெற்றோரின் தலை முறை  என்ற அடிப்படையில் அவரை ஒரு வகையில் தகப்பனாய் பார்த்துப் பழகிய மனது…..

தன் சித்தப்பாக்களும் இவரும் என்றும் மனதளவில் ஒன்றுதான் இவளுக்கு…. அவங்க அப்பாவோட தம்பி….இவர் அம்மாவோட தம்பி….. இதில் எங்கிருந்து வருகிறதாம்  வித்யாசம்..?

 அதனால் அவரோடு கல்யாணம் என்ற நினைவையே தாங்க முடியவில்லை…. அருவருக்கிறது…… இதில் நிஜத்தை எப்படி தாங்கவாம்….??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.