(Reading time: 49 - 98 minutes)

டந்தவைகளை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தவள் கண்ணில் அந்நேரம் அந்த போர்ட் பட….அதில் சிவப்பு எழுத்துக்களில் பீடியாக் செக்க்ஷனிலிருந்து A1B2  தெரிய….அது எத்தனை அரிய வகை ரத்தம்…. கிடைக்க எவ்வளவு கடினம் என தெரியுமென்பதாலும்….. அதோடு அதிக்கும் அதே வகை ரத்தம் என அவள் அறிவாள் என்பதாலும்… டாக்டராயிற்றே அவள்…… அந்த சூழலிலும் அதியிடம் அதைக் காண்பித்து ரத்தம் கொடுக்க  சொல்லி கேட்டாள்….

அதிக்குமே மனம் நீராவிற்காய் அடித்துக் கொண்டிருந்தாலும்…..இதை மறுக்க தோன்றவில்லை….. அவனும் கொடுத்திருந்தான்….. அடுத்து அதை அதிபன் அபயனெல்லாம் சுத்தமாய் மறந்திருக்க, கதையோ அதோடு முடியவில்லை…..

அப்போது நோயல் அந்த ரத்தத்தினால் பிழைத்துக் கொண்டாலும் அவனுக்கு போன்மாரோ (எலும்பு மஜ்ஜை) ட்ராஸ்ன்பளன்டேஷன் தேவை இருந்தது……. பையனுக்கு ஒருவகை மரபணு சார்ந்த நோய்…..போன்மாரோவில்தான் ரத்தம் உற்பத்தியாகும்….. அதில் அவனுக்கு ப்ரச்சனை…..

அதற்கு அவனுக்கு ஒத்துக் கொள்ளும் வகை போன்மாரோ யாராவது தானம் தரவேண்டும்… குடும்ப உறுப்பினர் யாராவது கொடுக்கலாம் என்றால் யாருடையதும் ஒத்துப் போகவில்லையாம்….  அடுத்தும் நேஷனல் ரெஜிஃஸ்ட்ரியிலும் தேடினார்களாம்…அதாவது முழு நாட்டிலிருந்தும் யாரெல்லாம் கொடுக்க விரும்புகிறார்களோ அவர்களுடையதில் தேடினார்களாம் அங்கும் கிடைக்கவில்லையாம்….

அந்த நிலையில்தான் அதிபன் கொடுத்த இந்த ரத்த தானம்…..குழந்தையை காப்பாற்ற எதையும் செய்ய தயாராய் இருந்த நோயலின் அப்பா…. அதிபனை பற்றி விசாரித்து இந்திய திரும்பிவிட்ட அவனை தொடர்பு கொண்டார்…..ஒருவேளை இவனுடையது ஒத்துப் போய்விடாதா என ஒரு தவிப்பு….

நீராவின் இழப்பில் இருந்தவன்தான்….அவளை அவன் இழக்க ஒரு வகையில் காரணமான  அந்த மருத்துவமனையில்தான் நோயலின் அப்பாவுமே மருத்துவர்…..ஆனால் அவன் அதையெல்லாம் விஷயமாய் யோசிக்க கூட தயாராயில்லை….

ஒரு குழந்தையின் உயிர் …..அதுமட்டும்தான் அவனுக்கு அப்போது விஷயமாக பட்டது….

நோயலின் அப்பா போரீஸ் இங்கிருந்து செய்து அனுப்ப சொன்ன டெஃஸ்ட்டுகளை செய்து அனுப்பினான்…. நோயலுடையதுக்கு இவன் மஜ்ஜை ஒத்துப் போவது தெரிய….இப்போது இவன் மீண்டுமாய் ரஷ்யா சென்று போன்மாரோ தானம் செய்துவிட்டு வந்திருந்தான்….  

அப்படி பிழைத்தவன் நோயல்….. 

“என் லைஃப் அவ்ளவுதான் முடிஞ்சுட்டுன்னு நினச்சாங்க….அப்போ அதிபன் அங்கிளாலதான் நான் பிழச்சேன்….. இப்பவும் அவங்க மாரோ தான்  எனக்குள்ள இருந்து ப்ளட் ப்ரடியூஸ் செய்றது…..நான் அப்ப அவங்க ப்ளட் ரிலடிவ் தான……?அவங்க சன் மாதிரி தான நான்…?” அனுவிடம் ஒரு துள்ளலுடன் கலகலவென விளக்கிய நோயல்…..

“அந்த கோபடுற அங்கிள்ட்ட நீங்க சொல்லுவீங்களா…? உலகம் முழுக்க உள்ளவங்க ரிலடிவ்ஸ்தானாம்….. எனக்கு எங்க ஃபேமிலி, எங்க நேஷன்னு அங்க உள்ளவங்க யாரோடதும் ஒத்து போகலை…..ஆனா அதிபன் அங்கிளோடது மட்டும் ஒத்து போச்சுதுல்ல…..அது ஏன்னு கேட்டப்பதான் இதை தெரிஞ்சுகிட்டேன்…..

எல்லோருக்கும் அவங்க தாத்தா பாட்டி அவங்களோட பாட்டி தாத்தான்னு இருக்ற ஃபோர்ஃபாதர்ஸ்ல  எப்படியும் வேற நாட்டு காரங்களும் இருந்திருக்காங்களாம்…… ஜெனிடிகல் அனாலிஸிஸ்ல கண்டு பிடிச்சுறுக்காங்களாம்….

என்னோட ஏதோ   ஒரு பாட்டியோ தாத்தாவோ, அதிபன் அங்கிளோட எதோ ஒரு தாத்தாவோ பாட்டிக்கோ அம்மாவாகவோ இல்ல அப்பாவாகவோ  இருந்திருப்பாங்க…..

அதான் எங்களுக்கு நிறைய ஒன்னு போல இருக்குது….கண்டிப்பா நாங்க ரிலடிவ்ஸ்தானாங்கும்…..

அது போல எங்க நாட்லயும் சிலர்க்கு  அடுத்த நாட்டுக்காரங்கன்னா பிடிக்காது……இந்த கோபடுற அங்கிளுக்கும் அடுத்தவங்களை பிடிக்கலை…… அப்டின்னா இவங்களும் அவங்களும் சொந்தகாரங்களா இருப்பாங்களா இருக்கும்….. அப்ப இவங்க கொண்டல்புரத்துக்கு கொஞ்சம் வெளிநட்டுகாரங்கன்னும் அர்த்தம் ஆகுதுதான….” அவன் அவனுக்கு தெரிந்த லாஜிகில் விளக்கிக் கொண்டு போக…..

இத அந்த கோபகாரர்க்கு நடு மண்டையில அடிச்சு நச்சுனு புரியுற மாதிரி எப்படி சொல்ல என வினி திரும்பிப் பார்க்க…… அனுவோ நோயலை அணைத்திருந்தாள்……

அதிபனுக்கு நான் மகன் போல என நோயல் ஆரம்பித்த தொனியிலேயே அனுவுக்கு அதி மீதிருந்த மொத்த பயமும் போயிருந்தது எனதான் சொல்ல வேண்டும்……

 ஒரு குழந்தை ஒருவரைப் பற்றி இத்தனை துள்ளலாய் சொல்ல வேண்டுமெனில் அதன் அடிப்படை கலப்படமற்ற சுத்த அன்பாய்தான் இருக்க முடியும் என்பது அவளுக்கு தெரியும்….

ஆக அதி ஒரு வெளிநாட்டு வெள்ளைக் குழந்தையிடம் அன்பாயிருக்கிறான் காரண காரியமேயின்றி…… என்ற அந்த ஒத்தைப் புரிதலே போதுமானதாய் இருந்தது இவள் பயம் போக்க……

அதில் நோயல் ரஷ்யன், அதுவும் நீரா இறந்த மருத்துவமனையில்தான் இவனது தந்தையும் வேலை செய்திருக்கிறார் என தெரிந்தும் அதி உதவி இருக்கிறான், அதுவும் இவ்ளவு முயற்சி எடுத்து என தெரிய வரும்  போது……

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.