(Reading time: 49 - 98 minutes)

ன்மா அப்டி என்னமா அவரைத்தான் கட்டி ஆகனும்னு கட்டாயம்…..?” பவிக்கும் வீட்டில் எதிர்த்துப் பேசியெல்லாம் பழக்கமில்லை தான்….ஆனால் இதில் எப்படி சும்மா இருப்பதாம்..

இப்போது இதர்குப் பதில் இவள் அப்பாவிடமிருந்து வருகிறது……ஆம் அவர் அப்போதுதான் அங்கே வந்தார்….

“ஏனா? மாசம் பிறந்தா பென்ஷன்னு டான்னு பணம் வர்ற வேலையிலயா நான் இருக்கேன்….. ? தொழில்னா இன்னைக்கு  ஒரு நில இருக்கும்….நாளைக்கே அது வேற கதையாவும் மாறும்….இன்னைக்கு என்ட்ட இருக்கது நாளைக்கும் இருக்கும்னு என்ன நிச்சயம்…..வயசான காலத்துல கைல எதுவும் இல்லாம போய்ட்டா நான் எங்க போய் நிப்பேன்?

இவ்ளவு ஏன்…என்னைக்குனாலும் நான் முந்துறனோ இல்ல உன் அம்மாவோ……யார் முந்தினாலும் அடுத்தவங்க போய் நிக்க எங்களுக்கு என்ன மகன் வீடா இருக்குது….? படுக்கையில விழுறதுன்னு வர்றப்ப  உங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் வீட்டுக்குத்தான வந்தாகனும் நாங்க….. இதுல ரெண்டு பேரையும் வெளிய  கொடுத்துட்டு அவன் வந்து எங்களை பார்ப்பான்னு நான் எப்படி நம்ப? ஏன் நம்பனும்….?

 இதுனா ஒன்னுக்குள்ள ஒன்னு…..இன்னைக்கு வரைக்கும் உன் மாமன் என் முன்னால சத்தமா கூட பேச மாட்டான்…..அவன் கண்டிப்பா வயசான காலத்துல இவ எங்களைப் பார்க்கிறதை தடுக்க மாட்டான்…..அதோட அவன் வீட்ல வந்து உட்காரவும் எனக்கு அவ்ளவா உறுத்தாது…” அப்பா விளக்க

“இவ மகனா பிறந்துதான்  எங்களை பார்க்கலை…..இப்ப மகன் இடத்துல இருந்து பார்க்கட்டும் தப்பில்ல….” அம்மா அதற்கு இப்படி ஒரு ஆங்கிள் சொன்னார். இதில் பவி பக்கத்தில் நின்றிருந்த  ப்ரதி  இவளை அழுதபடி பிடிக்க…

“ஏம்மா என்னமா பேச்சு இது….நான் நீங்க  அப்பா எல்லாம்  ஆணா பொறக்கனும்…இல்ல பொண்ணா பிறக்கனும்னு நம்மள செயது வச்சுகிட்டா வந்தோம்…ஏதோ இவ மட்டும் செய்யாம போன மாதிரி….? ஏன் உங்க வகையில சொன்னா நான் கூட பையனா பிறந்திருக்கலாம்ல….அப்போ தப்பு என்னோடதும் தான…?” இதுதான் பவிஷ்யா சரிக்கிய அடுத்த வழுக்கு  ஸ்தலம்….

“ம்…நீ பிறக்கப்ப ஒழுங்கா பிறந்த.…இந்தா இவ பிறக்கப்ப அடுத்த பிள்ளை வச்சுகிறதுக்கான வழியையும் அடச்சுட்டுல்லா பிறந்தா….டாக்டர் அடுத்து குழந்தை வைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களே….. அதனால இவ  பார்க்கட்டும்….” அம்மா சொல்லிக் கொண்டு போக….

“அதுக்கும்தான் அவ என்னமா பண்ணுவா…?” பவி பதில் கேள்வி கேட்க ஆரம்பிக்க “அவ போய் சாகதுக்குன்னு நிக்கா…” விஷயத்தை இவள் விளக்க தொடங்க….

“என்னல இவ்ளவு ஓடி ஓடி ஓடா தேஞ்சு உங்கள வளத்ததுக்கு கடைசி காலத்துல நான் பாக்க மாட்டேன்  நீ பாக்க மாட்டேன்னு ரெண்டு பேரும் கணக்கு சொல்லுதிய…..” என இப்போது உணர்ச்சி வசப்பட்டு இடையிட்டது அப்பா

“சாக கூட செய்வா….  ஆனா எங்களை பார்க்க மாட்டா என்ன அவ?” இது அம்மா….

“ சரி ரெண்டு பேரும் இந்த அப்பனை பார்க்க வேண்டாம்….ஏடி இவளே அப்டியே உனக்கும் எனக்குமா அரளி விதையோ இல்ல ஒரு முழ கயிறோ ரெடி பண்ணு…..நாம போய்டலாம் இவ ஒருத்தியும் நம்மள தூக்கி சுமக்க வேண்டாம்……” என  அப்பா அம்மாவிடம் குமுற..…..

“அப்பா…” அலறி விட்டாள் பவிஷ்யா….. இதுநாள் வரை இந்த அளவு கூட தன் மனதை குடையும் விஷயங்களை அப்பா வெளியிட்டது கிடையாது……அவரது பயம்  இன்செக்யூரிட்டீஸ் எதையும் இவர்களிடம் பேசியதும் கிடையாது….

இதில் அவர் இன்று  அவர் கடைசி காலத்தை குறித்த பயத்தை சொல்லி கூடவே இப்படியும் சொல்லவும்  தவித்துப் போனாள் பவிஷ்யா…..அவளது தங்கையும் தான்….

பெற்றோரை பார்க்காமல் விட வேண்டும் என்று இருவருமே நினைத்ததே இல்லையே……அதோடு இருவரும் சொல்ல வருவதும் அது இல்லையே….

“ஆமா ஒன்னு உங்க மாமா கூட கல்யாணம் நடக்கனும் இல்லைனா என்னை இப்பவே தூக்கி புதைச்சுடுங்க…. செத்தாலும் சாவளாம் பெத்து வளத்தவங்கள பார்க்க மாட்டாளாம்…..” அப்பா போய் அவர் அறைக்குள் நுழைந்து கதவை பூட்டிக் கொள்ள…..

 ப்ரதி ஒடிப்போய் “ஐய்யோ அப்பா…நீங்க சொல்றத செய்றேன்பா…… ஒன்னும் செய்துகிடாதீங்கப்பா…..” என கதவை தட்டியபடி கதற…..அம்மா தலையில் அடித்து அடித்து  அழ…..

சண்டையும் கூப்பாடுமாய் வளர்ந்த குடும்பங்களில் இதுவும் ஒரு நிகழ்வு என்று தோன்றி…….அடுத்து மற்றவரும் நாலு கத்து கத்திவிட்டு  கடந்து போய்விடுவராய் இருக்கலாம்……

ஆனால் இங்கோ ஒற்றை வார்த்தை மகராஜா போல….செய்ய வேண்டிய தன் கட்டளையை மட்டும் வாய் திறந்து பேசும் அப்பா…..அவருக்கு  தனிமையில் குழை அடிச்சாலும்…..பிறர் முன்பு எப்போதும் ஆமாம் சாமி போடும் அம்மா எனப் பார்த்து பழகிய பவிஷ்யாவிற்கு இது எளிதாய் தாண்டிப் போகும் ஒரு நிலையாய் இல்லை…..

அவள் பெரிதாய் சரிக்கினாள் இதில்….

அந்த நிகழ்வுக்குப் பின் சற்று நேரம் வீட்டில் யாரும் யாரோடும் பேசிக் கொள்ளவில்லை….. மாடியிலிருந்த பவி அறையில்…..இவள் மடியில்  படுத்து அழுது கொண்டிருந்தாள் ப்ரதி….பவியோ மொத்தமாய் செயலிழுந்து கொண்டிருந்தாள் உள்ளுக்குள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.