(Reading time: 49 - 98 minutes)

ப்போது அந்த  புறமாக வந்த ஒருவர்….இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த கிணறை நிர்வகிக்கும் ஊழியரைப் பார்த்து “ஏல  நம்ம  ஆளுங்கள தவிர யாரும்  ஊர் கிணத்துல வாளி போட கூடாதுன்னு தெரியும்ல…..இங்க அசலூர்காரன் வந்து வாளி போட்டுகிட்டு நிக்கான்…. நீ விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு நிக்க..? என அதட்ட

கொண்டல்புரத்தில் இப்படி ஒரு முறை உண்டுதான்…. கிணற்றின் தண்ணீரை எல்லோரும் பயன்படுத்தலாம் ஆனால் இரைக்கும் உரிமை சில குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உண்டு….முன்பானால் இரைக்கும் உரிமை இல்லாதவர் தங்களுக்கு நீர் வேண்டுமானால் அங்கு வந்து தங்கள் குடத்தை வைக்க வேண்டும்……வாளியிட்டு நீர் இரைத்துக்  கொண்டிருக்கும் பெண்கள் இவர்கள் குடத்தையும் இரைத்து நிரப்ப வேண்டும்……இது இந்த மோட்டர் வரும் வரை இருந்த முறை…….மோட்டர் வரவும் யாருமே இரைப்பதே இல்லை என்றான பின் இது ஒரு விஷயமாய் இல்லாதிருக்கிறது….

இதில் இன்று இவர் இப்படி பேச

நிலவினிக்கு சுர்ரென கோபம் வருகிறதென்றால்……. அனுவுக்கு முகம் சுண்ட….அதற்குள் சட்டென வந்து விழுகிறது பதில் எதிர்பாரா இடத்திலிருந்து….

“நானேம் யுங்க ஆல்தேன் அங்கிள்…..இந்தே யூர்தான் ……நீங்க தான் எங்கே யூர் போல….” நீர் இரைத்த அந்த பையன்தான் பதில் கொடுத்தான்….தமிழ் உச்சரிப்பு ஊஞ்சலாடிய போதும் புரியத்தான் செய்தது…..

நிலவினிக்கு இப்போது ஆச்சர்யம்  வந்து நிற்கிறதென்றால்…… அந்த கிணத்து ஊழியர் சற்றாய் வாய் பொத்தி சிரிக்க…..

கேள்வி கேட்டவருக்கோ தாறுமாறாய் ஏறுகிறது கோபம்……பின்னே அவருக்கு மூக்குடைப்பாய் இருக்காதாமா….?

“என்னடா எங்க ஊரு…..? ” அவர் எகிறலாய் ஆரம்பிக்க…..வினி இதற்குள் அந்த பையன் பக்கத்தில் விரைந்திருக்க…..அனுவும் அவள் பின்னே….

இப்போது வினியைப் பார்த்த அந்த பையன்…. “Please tell him” என இவளை ட்ரான்ஸ்லேஷன் செய்ய அழைத்தவன்…..

“நான் இந்த ஊர் அதிபனோட ப்ளட் ரிலடிவ்….” என்றான் ஆங்கிலத்தில்……

ஹான்….அசந்து போய் நின்றாள் வினி….. இதை கேட்க இவளுக்கே எப்படி இருக்கிறதாம்…..இதை சொன்னால் இந்த ஊர்காரர்  என்னவென்று எடுப்பாராம்…? பே என முழிக்கும் மோடுக்கு போனாள் வினி…

இதற்குள் தொடர்ந்தான் அவன்…. “நான் அதிபனோட மகன்னு வச்சுகோங்க…”  விக்கித்துப் போய் பார்த்தாள் வினி….

‘டேய் ஏன்டா இருக்ற குழப்பம் பத்தாதுன்னு நீ வேற….’ பே பே மோடில் அவள்…. அவசர அவசரமாக அனுவை வேறு அரைக் கண்ணில் பார்த்துக் கொண்டாள்….

அவ இன்னும் என்னல்லாம் நினச்சு வைப்பாளோ? அதி சார் உங்களுக்கு ஏன் ஆப்பு எப்பவும் எக்‌ஃஸாக்ட் டைம்ல வந்து எக்கு தப்பா அடிக்குது….?

ஆனால் பார்க்க அனு முகம் கசங்கிப் போயெல்லாம் தெரியவில்லை….சொல்லப் போனால் முன்பைவிட தெளிவாய் ….ஏதோ ஒரு வகையில் மறைந்திருக்கும் மலராய்…..பெருமிதமா?? விஷயத்தை முழுதாய் தெரிந்து கொள்ள விரும்பும் முழு ஆர்வமாய்…

‘அடங்கோஓஓ…. இந்த அனு எதுக்கு அப்பீட் ஆகும்…எதுக்கு எக்‌ஃஸைட் ஆகும்டா….’ ஒன்னுமே புரியல உலகத்தில மோடிற்கு மாறினாள் நம்ம வினி….

“நீங்க அவங்கட்ட சொல்லுங்க மேம்….” இப்போது இவள் முகம் பார்த்த பையன்… இவள் இன்னும் எதுவும் சொல்லாததை பார்த்து “ உங்களுக்கு இங்க்லீஷ் தெரியும்தான?” என அடுத்த சந்தேகத்தை வேறு கேட்டு வைத்தான்….

‘டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்……’ வினி மனதிற்குள் கத்த….. பாவம் இவன் என்னமோ சொல்ல வர்றான் இந்த அனுவுக்கு வேற எதோ பல்ப் எரியுது….இடையில புகுந்து நாம ஆட்டத்தை கலச்சுடக் கூடாதே…..அதுக்காக அந்த பையனை எதுவும் வாய்விட்டு திட்டாமல் இவள்…..

“அவங்களுக்கு நல்லாவே தெரியும்….” இப்போது இவளுக்கு சப்போர்ட் செய்தது அனு…. “நீங்க சொல்லுங்க….முழுசா விஷயத்தை கேட்டுட்டு அவங்க பேச வேண்டிய விதமா பேசிப்பாங்க” அவளே தொடர்ந்தாள்…

“தீபன உங்களுக்கு எப்படி தெரியும்…?” அனு விசாரித்தாள்.

“யூ மீன் அதிபன்… உங்களுக்கு அங்கிள தெரியுமா…?” பையன் விளக்க தொடங்கினான்…..

அதிபனும் அபயனும் ரஷ்யா சென்றிருந்த சமயம் நீராவோடு ஹாஃஸ்பிட்டலில் காத்திருந்தனரே அப்போது நடந்த சம்பவம் இது….. அதே மருத்துவமனையில் அவசரமாய் A1B2 வகை ரத்த தேவையுடன் இருந்தவன் இந்த பையன் நோயல்…

நீராவுக்குமே பெரிதாய் ரஷ்யன் தெரியாதாகினும் அது அவள் படித்த மெடிகல் காலேஜல்லவா….அங்கு இருந்த ஒரு குறிப்பிட்ட நோட்டீஃஸ் போர்ட் ரத்த தேவையை  அறிவிக்க என தெரியும்…..அதில் சிகப்பு எழுத்தில் குறிக்கப் பட்டால் எமெர்ஜென்சி எனவும் தெரியும்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.