(Reading time: 21 - 42 minutes)

"வி... நம்ம குட்டீஸும் நம்மள மாதிரி 3மாசம் இடைவெளியில பிறக்கப் போறாங்க... அது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..??"

"ஆமாம் சம்யூ... நான் கூட தேவாக்கிட்ட அதை தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்..."

"கவி நம்ம குட்டீஸ்.. நம்மள மாதிரி ரெண்டும் பொண்ணாவோ... இல்லை ரெண்டும் பையனாவோ இருக்கக் கூடாது.. ஒரு பொண்ணு, ஒரு பையனா இருக்கனும்... அது அண்ணன், தங்கச்சியா இருந்தாலும் பரவாயில்ல... இல்லை அக்கா, தம்பியா இருந்தாலும் பரவாயில்லை... என்ன.."

"ஹே.. என்ன சொல்றீங்க ரெண்டுப்பேரும்... உங்களை மாதிரியே ஒரே குழந்தையோட நிறுத்திக்கலாம்னு பார்க்கறீஙளா.. எப்படியோ ரெண்டு குட்டீஸாவது எங்களுக்கு வேணும்... என்ன பிருத்வி அப்படிதான.." என்று தேவா கேட்டதும்... ஆமாம் என்று பிருத்வியும் தலையாட்டினான்.

"அய்யோ அதில்ல மாம்ஸ்... எத்தனை குழந்தை வேணாலும் பெத்துக்கலாம்... இருந்தாலும் இந்த ரெண்டு குட்டீஸும் எங்களைப் போல ஸ்பெஷல் இல்லையா..?? அதைத் தான் சொன்னேன்..."

"ஆமாம் ஒரு சம்யுக்தா, சங்கவியையே எங்களால சமாளிக்க முடியல.. இதுல அதேபோல இன்னும் ரெண்டா.." என்று தேவா நொந்துக் கொண்டான்...

"ஆமாம் ஆமாம்... அப்படிப்பட்ட சம்யுக்தா, சங்கவியையே கலங்கடிச்சவங்க தானே இந்த பிருத்வியும், தேவாவும்.. இல்லையா சம்யூ.." என்று கவி சொன்னதும் இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டார்கள்.

"சரி சரி... நாம உள்ளேப் போகலாமா..??" என்று தேவா கேட்டதும்..

"ஆமாம் கவி.. ரெண்டுப்பேரும் உள்ளேப் போய் வரூன், பிரணதியைப் பாருங்க... நான் கொஞ்ச நேரத்துல வரேன்..." என்று யுக்தா அவர்களை அனுப்பி வைத்தாள்.

மேடையேறி வரூனையும், பிரணதியையும்... தேவாவும் கவியும் வாழ்த்த... பதிலுக்கு இவர்கள் இருவரையும் அத்தை, மாமாவாக ஆக்க.. ப்ரோமோஷன் கொடுக்கப் போகும் குட்டிக்காக கவியையும், தேவாவையும் இவர்கள் வாழ்த்தினர்...

நிகழ்ச்சி இனிதாக நடைப்பெற்றுக் கொண்டிருக்க... இன்னும் விருந்தினர்கள் வந்தப்படி இருக்க... யுக்தா அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாள்... வந்தவர்களை பிருத்வி உபசரித்துக் கொண்டிருந்தாலும்... அவன் பார்வையோ அவன் மனைவியிடம் தான் இருந்தது...

ஏற்கனவே அவன் மனைவி அழகு... இதில் தாய்மை இன்னும் அவளுக்கு அழகு கூட்டியிருந்தது... ஐந்து மாத கருவை சுமந்துக் கொண்டிருக்கும் அவளின் லேசான மேடிட்ட வயிறும்... முன்பை விட கொஞ்சம் பூசினாற் போல தேகமும் அவளை இன்னும் அழகாக காட்டியது...

அவள் நிறத்திற்கு எடுப்பாக மெரூன் நிற புடவையும், அவனுக்கு பிடித்தாற் போல் ஒற்றைப் பின்னலிட்டு தலையில் மல்லிகைப் பூவும் சூடியிருந்தாள்... நெற்றியில் முன்பை விட கொஞ்சம் பெரிய பொட்டும்... அதன் கீழ் குங்குமமும், அதே போல் நெற்றி வகிட்டில் குங்குமமும் வைத்திருந்தாள்... காதில் அழகாக ஜிமிக்கி ஆடிக் கொண்டிருந்தது... கழுத்தில் தாலி செயினோடு.. இவன் பரிசளித்த தங்க செயினும், அத்தோடு ஒரு ஆரமும் அணிந்திருந்தாள்... கைகளில் ஐந்து மாதம் ஆகிவிட்டதால் இவன் அம்மாவும், சுஜாதா அத்தையும், சாவித்திரி அத்தையும் சேர்ந்து ஐந்து வகை சாதம் செய்து எடுத்து வந்து பூ முடித்திருந்தனர்... அப்போது அணிந்த கண்ணாடி வளையல்களை தான் இப்போதும் அணிந்திருந்தாள்... இத்தனை அழகோடு அவள் நின்றிருந்தாலும்... அதையும் மீறி அவள் முகத்தில் ஒரு சோர்வு...

"சொன்னா கேக்கறாளா... எவ்வளவு நேரமா நின்னுக்கிட்டு இருக்கா... அதுவும் இந்த மாதிரி நேரத்துல.." என்று நொந்துக் கொண்ட பிருத்வி... அந்த மண்டபத்தின் இன்னொரு வழியாக சென்று அவளுக்கு பிடித்த மாதுளம் பழச்சாறை வாங்கி வந்தவன் அவள் அருகில் சென்றான்...

"என்ன சார்... தூரமா நின்னு சைட் அடிச்சது போதாதுன்னு... இப்போ கிட்ட வந்து சைட் அடிக்கப் போறீங்களா..??"

"ஆமாம் நான் சைட் அடிச்சது உனக்கு எப்படி தெரியும்... அப்போ நீயும் என்ன சைட் அடிச்சியா...??"

"அய்ய.. நீங்க இங்கப் பார்த்துக்கிட்டே ஒருத்தருக்கு கூல்ட்ரிங்ஸ் கொடுத்த அழகை நான் மட்டுமா பார்த்தேன்... இந்த மண்டபமே பார்த்துச்சு... அந்த ஆள் மேல கூல்ட்ரிங்ஸை கொட்டியிருக்கனும்... அப்போ தெரிஞ்சிருக்கும்..."

"நாங்கல்லாம் ஒரே டைம் ரெண்டு வேலையையும் கரெக்டா பார்ப்போமில்ல... சரி இந்தா இந்த ஜூஸை குடி... நீ ரொம்ப டையர்டா தெரியற.." என்று அவளிடம் ஜூஸை கொடுத்தான்... அவளும் வாங்கிக் குடித்தாள்.

"ஆமா இன்னும் எதுக்கு இங்க நின்னுக்கிட்டு இருக்க நீ... போதும் எல்லோரையும் வரவேற்றது... இப்போ நீ கொஞ்ச நேரம் உட்காரு வா.."

"என்ன ரித்வி... இது நம்ம வீட்டு விஷேஷம்... நாம தான எல்லோரையும் வரவேற்கனும்..."

"அதுக்கு தான் அப்பா, அம்மா இங்க நிக்கட்டும்னு சொன்னேன்... நீதான் கேக்கல..."

"ரித்வி நீங்க ஏதாவது புரிஞ்சு தான் பேசறீங்களா...?? அத்தை, மாமா கல்யாணத்தப்போ அவங்களுக்கு துணையா பெரியவங்க யாரும் இல்ல... அதனால அவங்க மேரேஜ் ரொம்ப சிம்பிளா நடந்திருக்கும்... நம்ம மேரேஜும் சிம்பிளா தான் நடந்தது... பிரணதி மேரேஜும் அப்படித்தான்... இப்போ இந்த ரிஸப்ஷன் தான் நம்ம வீட்ல நடக்குற பெரிய ஃபங்ஷன்...

இதுக்கு உறவுக்காரங்க நிறைய பேர் இல்லன்னாலும்... தெரிஞ்சவங்க, ஃப்ரண்ட்ஸ் எல்லோரையும் அத்தை, மாமா கூப்ட்ருப்பாங்க... அவங்களை வாசல்ல நின்னு வரவேற்கறதோட முடிஞ்சிடுமா..?? இப்போ பாருங்க அத்தை, மாமா அவங்கக் கூடல்லாம் எப்படி பேசிக்கிட்டு இருக்காங்க... அதுக்குதான் நான் இந்த பொறுப்பை எடுத்துக்கிட்டேன்..."

"சரி நான் கொஞ்சம் நேரம் இங்க இருக்கேன்... நீ போய் எல்லார் கூடவும் உட்காரு.." என்று அவன் சொன்னதும் சிரித்தாள்.

"எதுக்கு இப்போ சிரிக்கிற...??"

"இல்லை இங்க நீங்க நின்னுக்கிட்டு எல்லோரையும் வரவேற்கறத நினைச்சேன் சிரிப்பு வந்துடுச்சு..."

"அதுல சிரிக்க என்ன இருக்கு...??"

"இல்லை நீங்க அங்க இருக்க என்னைப் பார்த்துக்கிட்டே  இங்க வர்றவங்க மேல பன்னீர் தெளிக்காம... அவங்க போனதும் தெளிக்கிற மாதிரி நினைச்சுப் பார்த்தேன்.. அதான் சிரிப்பு வந்துடுச்சு..." என்றதும் அவன் அவளை முறைத்தான்.

"யுகி... நான் ஏன் இப்போ இதெல்லாம் சொல்றேன்னு தெரியலயா..?? நீ இந்த சமயத்துல இப்படி நின்னா... காலெல்லாம் வீங்கிடும் தெரியுமா..??"

"அதானே பார்த்தேன்... என்னடா சாருக்கு நம்ம மேல இவ்வளவு அக்கறைன்னு... இப்போ தானே தெரியுது... இது என்மேல இருக்கற அக்கறையில்லை... நம்ம குட்டி மேல இருக்கும் அக்கறைன்னு.." என்று செல்ல கோபம் காட்டினாள்.

"யுகி செல்லம்... என்ன அப்படி சொல்லிட்ட.. எனக்கு உன்மேல எப்பவும் அக்கறை இருக்கு... KU க்கு முன்னாடி அதை நான் காட்டினதில்ல... KU க்கு அப்புறம் உன்மேல ரொம்ப அக்கறையா இருக்கேன் தெரியுமா..??"

"அதென்ன KU..?? கி.மு, கி.பி மாதிரி??"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.