(Reading time: 21 - 42 minutes)

"வங்களுக்கு காதல் வந்தா சொல்லாம மறைச்சு வச்சிருப்பாங்களாம்...  நாங்க அதை புரிஞ்சிக்கனுமாம்... ஆனா எங்களுக்கு லவ் வந்தா அதை உடனே சொல்லிடனுமாம்... என்ன லாஜிக்கோ தெரியல..." என்று மனதில் தான் நினைத்துக் கொண்டான்... மனதில் நினைத்ததை அப்படியே வெளிய கேக்க முடியுமா..?? கேட்டா அவ இன்னும் முறுக்கிப்பா... அப்புறம் ராத்திரி போய் இவன் தானே சமாதானப்படுத்தனும்... அதுவும் இவ கர்ப்பமா வேற இருக்காளே... அதனால் அமைதியாக இருந்தான்... தன்னோட தாத்தா, அப்பா மாதிரி இவனும் பொண்டாடிக்கு அடங்கி போய் குடும்ப பெருமையை காப்பாத்தனுமே... அதனால் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து கவி அவனை திரும்பி பார்த்த போது அவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததை பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்தது..

"அப்படியே பொண்டாட்டிக்கு அடங்கின புருஷன் மாதிரியே நடிக்க வேண்டியது.." என்று அவள் சொல்ல...

"நீங்க மட்டும் புருஷனை மிரட்டற மாதிரியே நடிச்சா... அதான் நாங்களும் கொஞ்சம் நடிக்கிறோம்..." என்று சொல்லி அவன் கண்ணடித்தான்... உடனே அவனை முறைத்தவள் அவன் கைகளில் லேசாக கிள்ளினாள்... அவன் ஆ என்று அலறினான்... சுற்றி இருந்தவர்கள் உடனே அவர்களை பார்க்க.. அதை கவனித்தவள்... "என்ன மாமா இது.." என்று அவனிடம் செல்லம் கொஞ்சினாள்.

பின் யுக்தாவையும், பிருத்வியையும் ஒருமுறை பார்த்தவள்.. பின் திரும்பவும் தேவாவிடம் திரும்பி... "பிருத்வியை காதலிக்கிறத பத்தி சம்யூ ஃபர்ஸ்ட் என்கிட்ட சொன்னப்போ... எந்த விதத்திலேயும் அந்த காதலால அவ காயப்பட்டுடக் கூடாதுன்னு நினைச்சேன்... ஆனா நான் எப்போ அப்படி நினைச்சேனோ அதிலிருந்தே அவ ரொம்ப காயப்பட்டுப் போயிட்டா... அதான் என்னத்தான் அவ பிருத்வி கூட சந்தோஷமா இருந்தாலும்... அதை பார்க்க பார்க்க திகட்ட மாட்டேங்குது.." என்று அவள் அவர்களை பார்த்துக் கொண்டிருந்ததற்கான காரணத்தை அவனிடம் கூறினாள்.

சிறிது நாள் யுக்தாவை கூட இருந்து பார்த்த தேவாவும் அவள் நிலைமையை உணர்ந்தவன் தானே... அதனால் கவி சொன்னதை ஆமோதித்த அவனும் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்...

இவர்கள் மட்டுமல்ல, தங்கள் பிள்ளைகளின் வாழ்வில் மாற்றம் வராதா..?? என்று ஏங்கிக் கொண்டிருந்த, சுஜாதா, மாதவன், சாவித்திரி, செந்தில், வளர்மதி... இவர்களுக்குக் கூட அவர்களின் சந்தோஷமான வாழ்க்கையை பார்க்க திகட்டாத ஒன்றாகத்தான் இருந்தது... ஏன் தேவாவின் தாத்தா, பாட்டிக் கூட அவர்கள் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்...

ஆனால் யாருடைய பார்வையையும் பிருத்வியும், யுக்தாவும் உணரவில்லை... ஏன் அங்கு வந்த விருந்தினர்களை வரவேற்க நின்றுக் கொண்டிருந்ததை கூட இருவரும் மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.

"ஏன் யுகி... நான் உன்மேல அக்கறை காட்டலைன்னு சொல்றியே... நீ மட்டும் என்மேல அக்கறையாகவா இருக்க..." என்று இந்த முறை அவன் செல்ல கோபம் காட்டினான்..

"என்ன ரித்வி சொல்றீங்க... உங்க மேல அக்கறையில்லாம தான்... உங்களோட போன பர்த்டே கொஞ்சம் சொதப்பிடுச்சுன்னு... இப்போ வரப் போற உங்க பர்த்டேக்கும்... அப்புறம் நம்ம கல்யாண நாளுக்கும் ஸ்பெஷலா யோசிச்சு வச்சிருக்கேனாக்கும்..."

"அதெல்லாம் ஸ்பெஷல் அகேஷன் செல்லம், அதெல்லாம் நீ ப்ளான் பண்ணலன்னாக் கூட நானே அதை ஸ்பெஷலாக்கிடுவேன்... நான் சொன்னது வேற.."

"என்ன ரித்வி.."

"நீ என்ன சொன்ன... கவி, பிரணா கல்யாணம் முடிஞ்சதும் உங்கக் கூட ஆஃபிஸ்க்கு வரேன்னு சொன்ன... இப்போ நம்ம குட்டிப் பொறந்து அதுக்கு ரெண்டு வயசாகற வரைக்கும் வீட்ல தான் இருக்கப் போறேன்னு சொல்ற... அப்போ என்னைவிட நம்ம குட்டியையும் சேர்த்து மத்தவங்கெல்லாம் தான் உனக்கு முக்கியமில்லை... நான் உனக்கு முக்கியமே இல்ல... என் மேல உனக்கு அக்கறையே இல்ல..."

"ஆமாம் பிருத்வி அவங்கல்லாம் தான் எனக்கு முக்கியம்... ஆனா நீங்க எல்லோரோடவும் ஸ்பெஷல் தெரியுமா..??"

"சும்மா சொல்லாத... உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்னு கேட்டா ஃபர்ஸ்ட் கவியை தானே நீ சொல்லுவ..."

"இன்னும் உங்களுக்கு இந்த பொறாமை குணம் போகலையா...?? ம்ம் நீங்க சொல்ற மாதிரி யாராவது உனக்கு யாரு பிடிக்கும்னு கேட்டா... கவியை தான் பிடிக்கும்னு சொல்லுவேன் தான்... ஆனா அவளை விடவும் நீங்க தான் எனக்கு ஸ்பெஷல்..."

"......."

"ஆமாம் ரித்வி... அதுதான் உண்மை... நான் நியூயார்க் போனப்போ ஆரம்பத்துல உங்க ரெண்டுப்பேரையும் ரொம்ப மிஸ் பண்ணியிருக்கேன்... ஆனா அப்புறம் கவியோட நான் பேசிக்கிட்டு இருந்தேன்... ஆனா அப்போதிலிருந்தே உங்களுக்காக தான் நான் ரொம்ப ஏங்கியிருக்கேன்...

அப்புறம் இங்க வந்ததுக்குப் பிறகு கூட நீங்க ரெண்டுப்பேருமே என்கிட்ட கோபப்பட்டீங்க... அப்போக் கூட கவி பேசலையேன்னு ஃபீல் பண்ணியிருக்கேனே தவிர... அவளை விட்டு விலகிப் போய்ட்டதா எனக்கு தோனல... ஆனா நீங்க என்னோட பக்கத்துல இருந்தும் எங்க உங்களை திரும்பவும் மிஸ் பண்ணிடுவேனோன்னு ஒரு தவிப்போடவே இருந்தேன்...

இப்போ சொல்லுங்க... அப்போ நீங்க எனக்கு ஸ்பெஷல் தானே... இதை கவிக்கிட்ட கூட நான் நேராவே சொல்லுவேன்... பிருத்வி தான் எனக்கு ஸ்பெஷல்ன்னு..." என்று அவள் சொன்னதும்...

"ஹே... என்னோட யுகிக்கு நான் தான் ரொம்ப ஸ்பெஷலாம்னு இந்த மண்டபத்துக்கே கேக்கும்படி எனக்கு கத்தனும் போல இருக்கு செல்லம்..." என்று அவன் மகிழ்ச்சியோடு சொல்ல... அவனை யுக்தா காதலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.