(Reading time: 13 - 25 minutes)

"ஸ் மை டியர்" என குதூகலமாக துள்ளி எழுந்த ஜானின் முகத்தில் படாரென வந்து விழுந்தது அவன் கொடுத்த மலர்க்கொத்து. வலியால் துடித்தபடி கீழே விழுந்தான் ஜான். ஜெசிகா அங்கிருந்து வேகமாக தன் வீட்டிற்கு சென்றுவிட்டாள். அவனுடைய அலறல் ஜெசிகாவிற்கு கேட்டபடி இருந்தது.  .

ஜானின் நெற்றியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அதைப் பார்த்து திடுக்கிட்ட ஜான், "நான் கொடுத்த பூக்கள் இவ்வளவு வெயிட் இல்லையே. ரத்தம் எப்படி வருது?" என்று சுற்றும் முற்றும் பார்த்தான். பேப்பர் வெயிட் ஒன்று தரையில் கிடந்தது. .

கோபத்தோடு அதை எடுத்த ஜான் ஜெசிகாவின் வீட்டுக் கதவை அதிரும்படி தட்டினான். "கதவ திற! உன்ன இன்னைக்கு சும்மா விடமாட்டேன். உன் பிறந்தநாளை இறந்தநாளா மாத்தி உன் கல்லறைக்கு இந்த பூக்களை வைக்காம விடமாட்டேன். கதவை திற! " என்று கத்தினான்.

கதவு திறக்கப்பட்டது. ஜெசிகா, பெரிய பூந்தொட்டி ஒன்றை ஜானின் மேல் வீச தயாராக நின்றுகொண்டிருந்தாள். அவளது முகத்தில் கடுமையான உக்கிரம் தென்பட்டது.

அதைக் கண்ட ஜான் மிரண்டான், "உங்க பேப்பர் வெயிட் எப்படியோ என் வீட்டுக்குள்ள வந்திருக்கு. இந்தாங்க" என்று பணிவோடு கூறி அவளிடம் கொடுத்தான். கதவு படாரென சாத்தப்பட்டது.  "ரொம்ப நன்றி" என்று கூறிவிட்டு தன்னுடைய வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டான்.

ஜெசிகா தனது நண்பனான வசந்த்திற்கு போன் செய்தாள். முதல் அழைப்பு நிராகரிக்கப்பட்டது. மீண்டும் அழைத்தாள்.

தூக்கக் கலக்கத்தில், "ஹலோ!" என்றான் வசந்த்.

"டேய்! உன் நண்பனை வேற எங்கயாச்சும் வீடு பார்த்து போக சொல்லு..இல்லன்னா நிச்சயமா அவனை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிட்டு நிம்மதியா தூங்குவேன்"

"மொதல்ல அதை செய். என்னையும் இந்த நேரத்துல தொந்தரவு பண்ணமாட்டல்ல"

"அவனை கூட பொறுத்துப்பேன். ஆனா அவன் எழுதி இருக்க கவிதையை என்னால பொறுத்துக்கவே முடியல"

"நாளைக்கு பேசிக்கலாம். இப்போ தூங்க விடு" என்று இணைப்பைத் துண்டித்தான் வசந்த்.

மேலியா பயணக் களைப்பில் தன்னையறியாமல் உறங்கிக்கொண்டு வந்தாள்.

"மேடம்! மேடம்!" என அவளை எழுப்பினார் டாக்ஸி டிரைவர்.

திடுக்கிட்டு விழித்தாள் அமேலியா. ஒன்றும் புரியாமல் டிரைவரைப் பார்த்தாள்.

"நீங்க வர வேண்டிய இடம் வந்தாச்சு. இறங்குங்க" என்றபடி கார் கதவைத் திறந்துவிட்டார்.

அமேலியா இறங்கினாள்.

"100 டாலர் ஆச்சு மேடம்"

அமேலியா அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் பணம் கேட்கிறார் என்று மட்டும் புரிந்தது. தன்னிடம் இருந்த பர்ஸை அவரிடம் நீட்டினாள்..

"என்னங்க மேடம் மொத்தமும் என்கிட்டயே கொடுத்திட்டீங்க. எனக்கு 100 டாலர் மட்டும் போதும்" என்று கூறி தனக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, ."நீங்க போகவேண்டிய வீடு இது தான்" என்று கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

எதற்காக இந்த வீட்டை நோக்கி கை காட்டினார் என்று புரியாமல் கையில் இருந்த விசிட்டிங் கார்டை அமேலியா பார்த்தாள். இந்த வீட்டின் உரிமையாளரோட விலாசம் தான் போலும் என்பதை ஒருவாறு ஊகித்துக்கொண்டாள். தன்னிடமிருக்கும் பர்ஸை அந்த வீட்டிலுள்ளவரிடம் கொடுத்துவிடலாம் என்று அவளுக்குத் தோன்றியது. அதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று தடுமாறினாள்.

அந்த வீட்டின் கேட் திறந்திருந்தது. அமேலியா மெல்ல உள்ளே நுழைந்து புல் தரையில் நடந்து சென்றாள். புற்களின் நடுவே ஓர் ஊஞ்சல் இருப்பதைக் கண்டு அதையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தாள். புற்களின் வாசம் அவளுடைய மனதை சுகப்படுத்தியது. தான் தவறான இடத்திற்கு வரவில்லை என அவளின் மனது கூறியது..

இதுவரை கடந்து வந்த பாதையில் இது போன்ற அமைதியை அவள் உணர்ந்ததில்லை. தன் நிலை என்னவென்று கூட அவள் மறந்து போனாள். தன்னையறியாமல் ஊஞ்சல் அருகே நடந்து சென்றாள். இதை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று அவள் எண்ணினாள். அவளுக்கு ஞாபகம் வரவில்லை.

இருளில் மூழ்கி இருந்த வீட்டை நோக்கினாள். சிலையென அங்கேயே நின்றாள். எதற்காக இப்படி நிற்கிறோம் என்று கூட அவளால் உணர முடியவில்லை.

அப்போது வீட்டின் விளக்கு திடீரென எரிந்தது. அமேலியா சகஜ நிலைக்குத் திரும்பினாள். 

வயதான பெரியவரும் சிறுமியும் வெளியே வந்தார்கள். அமேலியா பயந்து அருகில் இருந்த கார் ஷெட்டிற்குள் தன்னை மறைத்துக் கொண்டாள்.

பெரியவர், திறந்திருந்த கேட்டை மூடிவிட்டு சிறுமியோடு மீண்டும் திரும்பினார். அமேலியா மெல்ல தன் தலையை நீட்டி அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டிற்குள் நுழையப் போகும் சமயத்தில் சிறுமி கார் ஷெட்டில் இருந்த அமேலியாவைப் பார்த்து அலறினாள்

அமேலியா பதறினாள்.

"தாத்தா அங்க பேய் இருக்கு"

"எங்கே?"

"கார் ஷெட்டுக்குள்ள"

"ஹாலோவீன் கொண்டாடுற இந்த நேரத்தில உனக்கு எல்லாமே பேயா தெரியுது. விளையாடாம போய் தூங்கு" என்று சிறுமியை அதட்டி வீட்டிற்குள் அழைத்துச் சென்றுவிட்டார் பெரியவர்.

அமேலியா நிம்மதிப் பெருமூச்சை விட்டெறிந்தாள். பசி வயிற்றைக் கிள்ள கையிலிருந்த ரொட்டிப் பொட்டலத்திலிருந்து ரொட்டிகளை எடுத்து சாப்பிட்டாள். பின்னர், களைப்பில் மெல்ல தூங்கத் தொடங்கினாள்.

தொடரும்...

Episode # 07

Episode # 09

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.