(Reading time: 6 - 11 minutes)

ச்ச.. என்ன நினைப்பிது ? நாம் சென்னைக்கு வந்தது வேலை விஷயமாகத்தான். அதுவும் இன்னும் ஒரு வாரம் தான்! இந்த ஒரு வாரத்தில் எவனும் ஹீரோவாகிட முடியாது!” என்று வாய்விட்டு கூறினாள் அவள். அவள் வாய்மொழிந்த நேரம் வான்மகள் சிரித்தாள். சட்டென மழையும் பெய்யத் தொடங்கியது.

வானம் மனம் வைத்தால் சொற்ப நொடிகளில் மழைத்துளியின் வழியே நிலத்தை சேர்ந்திட முடியுமெனில், நம்ம சகி நினைச்சா டக்குனு ஹீரோவாகிட முடியாதா? என்று விதியும் சிரித்தது.

“ப்பா என்ன மாமா திடீர்னு இவ்வளவு மழை ?” ஆரத்தி கரைத்துக் கொண்டே அருணாச்சலம் தாத்தாவிடம் கூறினார் சாரதா.

“ உன் மூணு பிள்ளைகளும் பல நாட்களுக்கு அப்பறம் சேர்ந்து வராங்கன்னு வானத்துக்கே பொறுக்கலம்மா” என்று கூறிய அருண் தாத்தா வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“ இன்னும் அவங்கள காணோமேப்பா..மழையில மாட்டிக் கிட்டாங்களோ?” என்று வேணு தன் தந்தையிடம் சிறுபிள்ளை போல கவலையாய் கூறிட, மகனை முறைத்து பார்த்தார் அருண் தாத்தா.

“டேய் நீ திருந்தவே மாட்டியா? கொடுத்த காசை விட அதிகமாய் நடிக்கிற ஜூனியர் ஆர்ட்டிஸ் மாதிரி, சின்ன சின்ன விஷயத்துக்கே சிவாஜி கணேஷன் ஸ்டைலில் ஃபீல் பண்ணுற நீ! அவங்க என்ன சின்ன குழந்தைங்களா? வருவாங்க!” என்று அதட்டினார் அவர். இத்தனை வருடங்கள் ஆகியும் தந்தையை எதிர்த்து பேச பழகியிருக்கவில்லை வேணு! சட்டென தந்தையின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து மௌனமாகிவிட்டார் அவர்.

தாத்தா சொன்னது பொய்! தாங்கள் இன்னும் சின்ன குழந்தைகள் தான் ! என்பதை நிரூபிப்பது போலவே அபிநந்தன், சகிதீபம், விஷ்வானிகா மூவரும் அடைமழையில் ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக்கொண்டு நடந்து வந்தனர். பொதுவாக தம்பி தங்கையின் முன் கறாராய் இருக்கும் அபி கூட இன்று அவர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டான்.

“ அண்ணா என் ஐஸ் க்ரீம் முடிஞ்சிருச்சு.. “ என்று வினி கூறவும், தனது கையில் இருந்த பையில் இருந்து இன்னொரு ஐஸ் க்ரீமை எடுத்துக் கொடுத்தான் அபி.

“பார்த்தியா நான் மூணாவது ஐஸ்க்ரீம் சாப்பிடுறேன்” என்று அவள் சகியிடம் பீற்றிக்கொள்ள,

“ அய்யே லூசு! நான் நாலாவது சாப்பிடுறேன்!” என்றான் சகி.

“ அண்ணா நிஜமாவா இவன் நாலாவது ஐஸ்க்ரீமா சாப்பிறான்?” என்று விஷ்வானிகா கணக்கு கேட்க,

“ ஆமா டா.. இன்னும் ஒண்ணு சாப்பிட்டால் நாலாவது!” என்று தம்பியை காட்டிக் கொடுத்தான் அபி.

“ ஹ்ம்ம் பெரிய அரிச்சந்திரன் என்னைப் பத்தி போட்டுக் கொடுக்குறார்!” என்று சலித்துக் கொண்ட சகி அடுத்த ஐஸ் க்ரீமை சுவைக்க ஆரம்பித்தான்.

"மருமகளே ஆரத்தி கொண்டு வாம்மா"என்று தாத்தா குரல் கொடுக்க,

நந்திதா வேணுவும் வாசலில் வந்து நின்றனர்.

"என்ன இது விளையாட்டு!

இப்படியா வீட்டுக்கு வர்றது?

கார் எங்க ?

எனக்கொரு ஐஸ் க்ரீம் "

இப்படி ஆளுக்கொரு வசனம் பேச ஆரம்பிப்பதற்குள் இடையிட்டான் சகிதீபன்.!

அவன் என்ன சொன்னான்னு அடுத்த எபிசாட்ல சொல்றேன் ப்ரண்ட்ஸ் :) 

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.