(Reading time: 11 - 22 minutes)

லையும் இல்லாமல் வாழும் இல்லாமல் ப்ரனிஷ் கேட்க, ஒன்றும் புரியாது விழித்தாள் ப்ரியா. அவள் பார்வையைக் கண்டு, “நான் வந்ததிலிருந்து பார்க்கிறேன். நீ நீயா இல்லை. என்ன பிரச்சனை?”

“ஒன்னுமில்லை” என்று கூறி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் ப்ரியா.

:சரி. உன் இஷ்டம். சொல்றதுன்னா சொல்லு” என்றவன் பாதையில் பார்வையைப் பதித்தான்.

ஓரிரு நிமிடங்கள் கடந்தபின் வாய் திறந்தாள் ப்ரியா. “நாளைக்கு காலைல ஊருக்கு போறேன்.” ப்ரனிஷ் மேற்கொண்டு எதுவும் கேட்காமலிருந்ததே ப்ரியாவைக் கூற வைத்தது.

“அதுக்கு எதுக்கு நீ இவ்வளவு கவலையா இருக்கனும்? உன் வீட்டுக்குத் தான போகப்போற? ஆஃப்கானிஸ்தானுக்கா?” என்று கேட்டான் ப்ரனிஷ்.

“ப்ப்ச்ச்… கிண்டல் செய்யாதே ப்ரனிஷ். From what I got to know, I think, அப்பா எனக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.”

“வாவ்… கங்ராட்ஸ்டா… எவ்வளவு சந்தோசமான விஷயத்தை ஏன் இவ்வளவு சோகமாக சொல்ற?”

“ஏன்னா, எனக்கு சந்தோஸம் இல்ல” என்று அவனைப் பார்த்து பதில் சொன்னாள் ப்ரியா.

“ஏன்?” என கேட்டான் ப்ரனிஷ்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“இரண்டு காரணங்கள். முதல் காரணம், எனக்கு இப்போது செய்யனும்னு தோனலை. நான் என் கம்பனியில ஒரு நல்ல போஸ்டிங்க்கு வரனும் ப்ரனிஷ். அதற்கு இந்த திருமணம் ஒரு தடையா இருக்கும்னு தான் தோனுது. அது ஏனோ, சிறு வயதிலிருந்தே பல பெண்கள் திருமணத்திற்குப் பின் தங்கள் அடையாளத்தை இழந்ததைப் பார்த்ததனாலோ, இங்கேயும் அதே போல் பலரைப் பார்த்ததினாலோ, எனக்கு அதில் இஷ்டமில்லை” என்று உணர்ந்து கூறினாள் ப்ரியா.

“ரியா… எல்லாருக்குமே நீ சொல்ற மாதிரி நடக்கிறதில்லை. சில விதிவிலக்கும் இருக்காங்க. மேரி கியூரி, கல்பனா சாவ்லான்னு கல்யாணத்திற்குப் பின்னும் சாதித்த பல பெண்கள் இருக்காங்க” என்று வாதிட்டான் ப்ரனிஷ்.

“நீ சொல்றது ஆயிரத்தில் ஒன்னு ப்ரனிஷ். அது எல்லாருக்கும் கிடைக்காது” என்றாள் ப்ரியா.

“இது நெகட்டிவ் திங்கிங்” என்றான் ப்ரனிஷ்.

“இல்லை….. நிதர்சனம். அது மட்டுமில்லாமல் இன்னொரு ரீசனும் இருக்கு” என்றாள் ப்ரியா.

“என்ன அது?”

“எனக்கு என்னமோ, என் அப்பா எனக்கு திருமணம் செய்ய அவசரப்படுவதைப் பார்த்தால், ஏதோ காரணம் இருப்பது போல தோணுது”

“இதுல என்னம்மா காரணம்?” என்று ப்ரனிஷ் கேட்க, “உனக்குப் புரியாது. விளக்கியும் இப்போ என்னால சொல்ல முடியாது” என்று ப்ரியா கூறவும், அபார்ட்மென்டினுள் கார் நுழையவும் சரியாக இருந்தது.

“ஓகே ப்ரனிஷ். நான் கிளம்பறேன். அக்காவுக்கு வாழ்த்துக்கள் சொல்லீறு” என்று ப்ரியா அவனிடம் விடைபெற்று இறங்கிச் சென்றாள்.

ப்ரனிஷ் காரை ஸ்டார்ட் செய்து சில அடிகள் சென்றவன், காரின் டேஷ்போர்டில் ப்ரியாவின் பர்ஸைக் கண்டான். அவளிடம் கொடுக்கவென்று வெளியில் தேடிய போது அவளைக் காணாததால், மேலேயே சென்று கொடுத்துவர முடிவு செய்து காரை விட்டு இறங்கி லிஃப்டை நோக்கி நடந்தான். அப்போது, எங்கிருந்தோ இரு சிறுவர்கள் ஒருவரை ஒருவர் வண்ணப்பொடிகளைத் தூவியவாறு ஓடிவர, அவர்களில் ஒருவன், முன்னே சென்றவன் மீடு கலரை எறிய, அந்த சிறுவன் விலக, அவன் பின்னே வந்துகொண்டிருந்த ப்ரனிஷின் மேல் முழுவதும் விழுந்தது.

ப்ரனிஷின் மேல் பொடி விழுந்தவுடன் அவன் கோபமாக அவர்களைப் பார்க்க, இருவரும் “சாரி அண்ணா… சாரி அண்ணா… தெரியாம பட்டுடுச்சு. ரொம்ப சாரி” என்று மன்னிப்பு கேட்டு, பயத்தில் நிற்காமல் பறந்தனர் இருவரும். அழகான சட்டையைக் கறை செய்ததற்காக அவர்கள் மீதான கோபத்துடனேயேப்ரியாவின் வீட்டில் சென்று சட்டையை அலாசிக்கொள்ளலாம் என்று நினைத்து லிஃப்டினுள் நுழைந்தான் ப்ரனிஷ்.

அங்கு தனக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ் பற்றி அறியாமல் ப்ரியாவின் வீட்டை வந்தடைந்தான் ப்ரனிஷ்.

மை டியர் ஃப்ரெண்ட்ஸ்… இந்த அப்டேட்டை சிறியதாக கொடுத்ததற்கு மன்னிக்கவும். சென்ற பகுதியை படித்து கருத்தைப் பகிர்ந்துகொண்டவர்களுக்கு நன்றி. இப்பகுதிக்கும் நிறை குறைகளை கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்துடன் புதிய ஆண்டில் அனைவரையும் சந்திக்கிறேன். அனைவருக்கும் என் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்!!

தொடரும்

Episode 05

Episode 07

{kunena_discuss:1075}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.