(Reading time: 20 - 40 minutes)

ற்று நேரத்திற்கு முன்பு,

திருமணஞ்சேரிக்கு மீண்டும் செல்ல வேண்டுமென சதி கெஞ்ச, அவளது கெஞ்சலுக்கு செவி சாய்த்து அங்கே அவளை அழைத்துச் சென்றான் ஜெய்…

ஏனோ மனம் மட்டும் ஏதோ ஒரு சங்கடம் நிகழ விருப்பதை அறிந்து கொண்டது போல் துடித்து தவிப்பதையும் அவனால் எளிதாக ஒதுக்கிவிட முடியவில்லை…

காலையில் கண்ட கனவு வேறு அவனை வதைத்துக்கொண்டிருக்க, மன சஞ்சலமும் அவனை வாட்டி எடுத்துக்கொண்டிருந்த வேளை, அவனின் கவலையை ஊர்ஜிதப்படுத்துவது போல் அவனுக்கு ஒரு போன் வந்தது…

“சார்… பைரவும், குமாரும் தப்பிச்சிட்டாங்க….”

“வாட்…………… எப்போ?...............”

“நேத்து ராத்திரி சார்….”

“ஷிட்…. நேத்து ராத்திரியே சொல்லுறதுக்கு என்ன?...”

“அதில்லை சார்… எப்படியும் தேடி பிடிச்சிடலாம்னு நினைச்சோம்….”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“பச்… காரணம் சொல்லாதீங்க… போனை வைங்க…” என்றவன் சதியிடம் உடனே கிளம்ப வேண்டும் என அவசரப்படுத்த, அவளும் அவனுடன் கிளம்பினாள் மறுபேச்சு எதுவும் பேசாமல்…

காரில் ஏறி அமர்ந்த சில நிமிட்த்திலேயே அவள் தூங்கிவிட, அவன் யோசனையுடன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்…

அந்த நேரத்தில் சட்டென கார் பழுதாகிவிட, அவனின் யோசனை ஒரு முடிவை எட்டியது…

இறங்கி என்ன ஏது என்று பார்க்க, வயர் ஒன்று கட் ஆகி இருப்பது தெரிந்தது… பழுதை அவன் சரி செய்யும் போதே அவன் மனதும், இது யாருடைய வேலையோ தான் என்று உறுதிபடுத்திக்கொண்டது…

ஆனால் அவன் எதிர்பார்க்காதது, உறங்கிக்கொண்டிருந்த சதி திடீரென காணாமல் போனது தான்…

ஏதோ ஒரு குழப்பத்திலேயே இருந்த சதிக்கு, ஆழ்ந்த உறக்கத்தில் சில காட்சிகள் தென்பட, அவளுக்கு வியர்த்து போனது…

பதட்டம் அவளை முழுவதுமாய் ஆட்கொள்ள, சுற்றும் முற்றும் அவள் பார்க்க, கார் நின்றிருப்பது புரிந்தது அவளுக்கு…

மெல்ல கார் கதவைத் திறந்து அவள் ஜெய்யைத் தேட, அவன் சற்று தூரத்தில் அவள் கண்ட காட்சியுடன் அவளை வா என விழிகளில் தவிப்புடன் அழைப்பது போல் தோன்ற, மெல்ல அவனை நோக்கியே தன் பயணத்தை தொடர்ந்தாள் அவள் சற்றும் தாமதிக்காமல்…

அவள் அவனை தொடர்ந்தே சென்று கொண்டிருக்கையில், ஜெய்யைக்கொன்றே தீர வேண்டும் என்ற வெறியில் காரில் வந்து கொண்டிருந்த பைரவின் கண்களில் அவள் தட்டுப்பட, அவன் அதரங்களில் புன்னகை வந்திருந்தது….

காரைக்கொண்டு அவள் முன் சென்று அவன் நிறுத்துவதற்குள் அவள் மயங்கி விழுந்து விட, அந்த வழியே காட்டு வேலைக்கு சென்று திரும்பி கொண்டிருந்த ஐந்தாறு பெண்கள் அவளை எழுப்ப முயற்சிக்க, அவள் கண் திறக்கவில்லை…

பைரவ் வந்து அவள் தன் நண்பனின் தங்கை எனவும், மருத்துவமனைக்கு தான் அழைத்து செல்வதாகவும் கூற, அவர்களும் அவளைத்தூக்கி காரில் படுக்கவைத்துவிட்டு, விரைந்து மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்றும் கூறிவிட்டு செல்ல, அவன் பார்வை பின்சீட்டில் மயக்கத்தில் இருந்த சதியின் மேல் படிந்தது கூர்மையாய்…

அவள் மயக்கத்தில் இருந்து எழும் வரை காத்திருந்தவன், அவள் சற்று தெளிந்து வேறொரு காரில் தான் இருப்பதை அறிந்து விழி விரிய எழுந்து அமரவும், அவள் முன் வந்தான்…

“என்னடா நாம மட்டும் தனியா வந்திருக்குறோம்னு பார்க்குறீயா?...”

“……………………”

அவள் பார்வை சற்றும் முற்றும் அலைந்து கொண்டே ஒரு தேடுதலுடன் தவித்திருக்க,

“உன் ஜெய்யைத் தேடுறீயா?... அவன் இதோ இந்த வீட்டுக்குள்ள தான் இருக்குறான்…” என ஒரு பாழடைந்த வீட்டை கைகாட்டினான் பைரவ்…

அவன் சொன்னதும், அவள் பார்வை அதனிடத்தில் திரும்ப,

“வா… நான் கூட்டிட்டு போறேன்… அவன் உன்னைத் தேடிட்டிருக்குறான்…”

அவன் சொல்லிக்கூட முடிக்கவில்லை… கார் கதவைத் திறந்து கொண்டு அந்த வீட்டை நோக்கி ஓடினாள் சதி…

வீடுவரை சென்றவளுக்கு அவனைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க, வீட்டு வாசலில் கால் வைத்த்தும், சற்று முன்பு அவளின் கண்களுக்குள் ஜெய்யைப் பார்த்த கோலம் நினைவு வர, சற்றும் யோசிக்காமல் உள்ளே சென்று அவனைத் தேட ஆரம்பித்தாள் அவள்…

அவள் உள்ளே சென்றதும், அவள் பின்னாடியே சென்றவன், அவள் ஒரு அறைக்குள் நுழையவும், வெளியேயே நின்றான் அவளைப்பார்த்தபடி…

“அவர் எங்க?....”

அவள் கோபத்துடன் அவனிடம் கேட்க, அவனோ சிரித்தான்…

“சொல்லு… அவர் எங்க?... என்ன செஞ்ச அவரை?....”

“அதுக்கெல்லாம் அவசியமே இல்லை… நீ செத்துட்டா அவனும் செத்துடுவான்… ஏன்னா அவன் உயிர் இப்போ எங்கிட்ட….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.