(Reading time: 20 - 40 minutes)

நீண்டு பரந்திருந்த அந்த கோட்டைச்சுவரின் மீது மோதி பைரவ் கீழே விழ, அவன் எறியப்பட்ட தாக்கத்தில், அந்த சுவரோ கீறி, நொறுங்கி விழுந்தது அவன் மேலேயே…

ஆணவத்திலும், அகங்காரத்திலும், செருக்கு ஏறி போய் திரிந்தவன் விழுந்த தடம் தெரியாது, அவனை மூடி மறைத்திருந்தது அந்த சாதாரண பாறாங்கற்கள்…

பைரவினை தேடி வந்த குமார், தன் நண்பனின் அகோர மரணத்தினைக் கண்டு அப்படியே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழ, அவனும் சற்று நேரத்திலேயே தன் உயிரை விட்டான்…

பைரவைக் கொன்று முடித்துவிட்ட போதும், ஜெய்யின் கோபம் கொஞ்சமும் குறையவில்லை…

பற்களைக்கடித்தபடி, தன் கரத்தினை அவன் இறுக்க, அவனின் விரல்களின் அழுத்தத்தில் அவனது பொக்கிஷன் அவனது கவனத்தில் பதிந்தது…

மனம் எங்கும் தோன்றிய வலியுடன், அவன் அதை தன் கண்களின் முன் கொண்டு வர, இருதயம் செங்குருதியை சிந்திய அதே வேளை, அவன் விழிகள் கலங்கியது வேகமாக…

விழிகளில் நீர் திரண்டு அவனின் கன்னம் தொட்ட வேளை, அவன் உடைந்தான்…

ஒரு கையில் வைத்திருந்த ஆயுதம் “ணங்…………..” என்ற சத்த்த்துடன் கீழே விழ,

பட்டென்று உடல் தள்ளாட, அவனும் நிலத்தில் மண்டியிட்டு விழுந்தான்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

பொத்தி வைத்திருந்த கரம் கொண்டு அவன் நிலத்தில் ஓங்கி குத்தி, தன் ஆத்திரத்தை அவன் வெளிப்படுத்த, சுக்கு நூறாய் மனம் சிதற ஆரம்பித்தான் ஜெய்…

அவன் மனம் சின்னாபின்னமாகி போக, தலையைப் பிடித்துக்கொண்டான் இரு கரங்களாலும்…

இரு கண்களிலும் கண்ணீர் வழிந்தோட தயாராக, விழிகளில் கொண்ட சினம் மட்டும் இன்னமும் குறையாமல் தெறித்துக்கொண்டிருக்க,

கரத்தினுள் விரலால் அழுத்தி மறைத்து வைத்திருந்த தனது பொக்கிஷத்திற்கு விடுதலை கொடுத்தான் ஜெய்…

மடக்கிய விரல் பிரித்து, அவன் தன் பொக்கிஷத்தைப் பார்க்க, அவனது விழிநீர் சட்டென வழிந்து அதில் மோதி மீண்டும் அவனது முகத்தில் தெறித்த வேளை, சட்டென அவனுள் ஓர் அதிர்வு…

கண்கள் தானாக சொருக ஆரம்பிக்க, கைகளில் இருந்து அந்த பொக்கிஷமும் நழுவி மண்ணில் விழ,

அதை எடுக்கும் பொருட்டு அவன் குனிய, சட்டென அந்நேரம் தோன்றிய இடியும் மின்னலும் அவன் பார்வையை திசை திருப்ப, தூரத்தில் தெரிந்த நெருப்பும் அவன் கண்ணில் பட்டது…

அனைத்தும் முடிந்து நெருப்பு வைத்தவனே உயிரை பறிகொடுத்த நிலையில், அவன் வைத்த நெருப்பு மட்டும் இன்னும் அணையாமல் வீட்டின் பின்புறம் எரிந்து கொண்டிருக்க, அதனைப் பார்த்தபடியே இருந்தான் ஜெய்…

“ஜெ…….ய்………….”

வார்த்தைகள் மெலிதாக இஷானிடமிருந்து வர,

எதையும் உணரும் நிலையில் இல்லை ஜெய்…

ஜெய்யை நோக்கி அவன் சில அடிகள் எடுத்து வைக்க, அவனை தடுத்தார் பிரம்மரிஷி…

இஷானை தடுத்து நிறுத்திவிட்டு, ஜெய்யின் முன் வந்து அவர் நிற்க, விழிகளில் ஆங்காரத்துடன் அவரை ஏறிட்டான் ஜெய்…

“உன் உயிருக்கு ஒரு சோதனை காத்திருக்குன்னு அன்னைக்கே நான் சொன்னேனே சிவா…”

அவர் சொன்னதும், அவன் விழிகளில் ஆத்திரம் இன்னும் பரவியது…

“உன் உயிர்ன்னு நான் சொன்னது சதியைத்தான்… அவ உயிருக்கு வந்த ஆபத்தெல்லாம் நீங்கிட்டுன்னு சொன்னது, நீ மலையில இருந்து விழுந்து எழுந்து வந்தது, நாகம் தீண்டி பிழைத்தது இதெல்லாம் தான்…”

அவரின் பதில் கேட்டு, அவன் விழிகள் மேலும் கலங்க, அவரின் விழிகளிலும் கண்ணீர் வழிந்தது…

“சதியை நீ பார்த்த நாள் முதல் நீ கண்ட காட்சிகள் அனைத்தும், சதி நெருப்பில் தன்னையே அழித்துக்கொள்ளும் காட்சியே… அது உன்னைக்கொல்லாமல் கொன்று புதைத்ததை நான் அறிவேன்… அதனால் அவளை அணுக்ஷணமும் நீ காத்து வந்ததும் எனக்கு தெரியும்… எனினும் இன்று அனைத்தும் உன் கை மீறி விட்டது… உன் பொக்கிஷம் உனக்கு சில சேதிகளை உணர்த்த காத்திருக்கிறது… அத்தருணமும் இதுவே…”

பிரம்மரிஷி சொல்லி முடித்ததும், அதை ஆமோதிப்பது போல், வானில் இடி முழக்கங்கள் படபடவென்று பொழிய ஆரம்பிக்க,

“உன் உயிர் சதி என்பது எவ்வளவு நிதர்சனமோ, அதே அளவு நிதர்சனம் உன் உயிர் இந்த பொக்கிஷமும் என்பது…”

அவர் சொல்லிக்கூட முடிக்கவில்லை… நீண்டு வந்த மின்னல் கீற்று, ஜெய்யின் கரத்திலிருந்த பொக்கிஷத்தின் மேல் பட்டு அனைவரின் பார்வைக்கும் தென்பட்டது…

அதை அவரிடம் காட்டி, “என் ச………………………..தி……………………………………………” என ஜெய் சொல்ல, பிரம்மரிஷிக்கு இதயமே ஒரு நிமிடம் நின்றுவிட்ட உணர்வு கிட்டியது…

என்ன சொல்ல முடியும் அவரால்?... அவனுக்கு ஆறுதலா?... இல்லை இதற்கு சொந்தமான என்னவள்!!!!!! என அவன் அதற்கும் மேல் சொல்ல முடியாமல் தவித்து போய் அனைத்தும் இழந்து போனவனாய் நிற்கும் அவனிடம் அவளுக்கு என்ன நேர்ந்தது என்று கணிக்க முடியாமல் போனதையா?...

அவர் வாய்மூடி மௌனமாக இருக்க, தூரத்தில் தெரிந்த நெருப்பு அவன் பார்வை வட்டத்திற்குள் வந்த வேளை, தன்னவளை நோக்கி புறப்பட தயாரான போது,

தனலை மட்டுமே கக்கிக்கொண்டிருந்த அவன் விழிகள், மேலும் தகிக்க, நெருப்பு சூழ அவனின் சதி தெரிந்தாள் அவன் கண்களுக்கு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.