(Reading time: 12 - 24 minutes)

"நாம சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு இங்கிருந்து கிளம்பனும்"

"இந்த இடத்தை விட நீ குடுக்குற பில்டப் தான் ரொம்ப பயமா இருக்கு" என்றபடி கீழே இறங்கினான் ஜான். பனி அதிகமாய் பெய்தது. கடற்கரையின் குளிர் காற்றும் ஒன்று சேர உடல் நடுக்ககத்தால் மிகவும் சிரமப்பட்டான். பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான். 

"வசந்த் வேகமா நடக்காத, மெதுவா போ. இருட்டுல நடக்க ரொம்ப கஷ்டமா இருக்கு"

"இன்னும் இந்த பழக்கத்தை நீ விடலையா?"

"முன்ன போல இல்ல, ஜெசிகா ஞாபகம் வந்தா மட்டும் தான்"

"இந்த இடத்துல கூடவா ஜெஸிகாவை நினைக்கிற? நிச்சயமா உன் காதலை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு. இப்போ ஏன் அவளை நினைச்சிட்டு இருக்க?"

"ரொம்ப கொடுமையானத நினைச்சாதான் இந்த இடத்தை பார்க்க  பயமில்லாமா இருக்கு"

"இதை மட்டும் ஜெசிகா கேட்டு இருந்தா, சைக்கோ கொலைகாரி போல உன்னை கொன்னுருப்பா"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"என்னை கொலை செய்ய பல முறை முயற்சி பண்ணா, நான் தான் எஸ்கேப் ஆயிட்டு இருக்கேன்"

இருவரும் பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தபோது, வசந்த் காலிடறி கீழே விழுந்து, "ஆஆ.." என அலறினான்..

"வசந்த்..வசந்த்..என்ன ஆச்சு?"

"கீழே விழுந்துட்டேண்டா"

"இதுக்கு தான் சொன்னேன், துப்பாக்கியை அங்கேயே போட்டுடலாம்னு. என்னவோ பெரிய தீவிரவாத செயலை செய்றது போல இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்திருக்க"

"சரி, துப்பாக்கிய குடு"

"என்கிட்டே எங்கே இருக்கு"

"போலீஸ் வந்தப்போ உன்கிட்ட தான குடுத்தேன்"

"ஐயோ, அதை கார்லயே விட்டுட்டேன்"

"முட்டாள், ஏண்டா நீயும் என்ன சித்திரவதை பண்ணுற. போடா, போய் சீக்கிரம் எடுத்துட்டு வா"

"நானா? ரொம்ப தூரமா இருக்குடா. பயமா இருக்கு"

"ஜான்! இப்போ நீ போக போறியா இல்லையா?"

"சரி, சரி, போய் தொலைக்கிறேன்.என்ன பாவம் பண்ணினேன்னு தெரியல. கடவுள் என் வாழ்க்கையை லீசுக்கு எடுத்து புட்பால் மேட்ச் ஆடுறான்" என்று புலம்பியபடி காரை நோக்கி நடந்தான் .ஜான்.

அவன் உடல் பயத்தில் நடுங்கியது. எப்படியோ காரை அடைந்த அவன், கதவைத் திறந்து துப்பாக்கியை எடுத்தான். திடீரென, தன்னருகே சப்தம் கேட்கவே திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவன், ஓர் உருவம் இருப்பதைக் கண்டு அலறியபடி மயங்கி விழுந்தான்.

ந்த உணவு விடுதி ஒன்றும் அவ்வளவு பெரிய கடை இல்லை. மிக மிக சாதாரண வசதிகளைக் கூட அந்த கடை கொண்டிருக்கவில்லை என்பது கடையின் உரிமையாளரான ஆல்போன்சிற்கு நன்றாகவே தெரியும். அவரால் மட்டும் என்ன செய்துவிட முடியும். தனது கடையை விரிவாக்கவோ வாடிக்கையாளர்களை கவரும் வகையில் திட்டத்தை தீட்டவோ அவர் விரும்பவில்லை.

அவர் கடை வைத்திருக்கும் பகுதி மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள பகுதி. அதனால், வியாபாரமும் மந்தம் தான்.உணவு விடுதியை விற்றுவிட்டு தனது மனைவியோடு வேறு எங்காவது சென்று பிழைத்தக்கொள்ளலாம் என்றும் அவர் நினைத்ததுண்டு.

 வேறு எந்த தொழிலும் தெரியாததாலும் இந்த உணவுவிடுதியும் இல்லையென்றால் அவருக்கு வேறு நாதி இல்லாததாலும் வேறு வழியே இல்லாமல் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். எப்போதாவது சுற்றலா செல்லும் பயணிகள் வருவார்கள். அந்நாளில் மட்டும் கணிசமான தொகையைப் பார்த்துவிடுவார்.

இரவு ஏழு மணி வரை வியாபாரமே இல்லாமல் வெறுமனே அமர்ந்திருந்தவர், கடையைச்  சாத்திவிடலாம் என்று நினைக்கையில், திடீரென வந்த அந்த மூன்று பேரால் மகிழ்ச்சி அடைந்தார். அதுவும் அவர்கள் கேட்ட உணவு ரொம்பவே விலை உயர்ந்தது. தொலைக்காட்சியை ஓடவிட்டு, "சிறிது இளைப்பாருங்கள். நீங்கள் கேட்ட உணவு சீக்கிரத்திலேயே வந்துவிடும்" என்று கூறி விட்டு அவர் சென்று பத்து நிமிடங்களைத் தாண்டிவிட்டது.

வந்தவர்கள் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். வசந்தும் ஜானும் கைதிகளைப் போல அமர்ந்திருக்க, எதிரில் உக்கிர பார்வையோடு ஜெசிகா அமர்ந்திருந்தாள்.

"ரெண்டு பேரும் அங்க என்னடா பண்ணிட்டு இருந்தீங்க?"

"முதல்ல, நீ எப்படி அங்க வந்தேன்னு சொல்லு" என்றான் வசந்த்.

"ஷூட்டிங்க்கு தனிமையான வீடு பார்க்க சொல்லி டைரக்டர் சொல்லியிருந்தார். வீடு தேடிட்டு இருக்கும்போது உன் காரை பார்த்தேன். நீயும் ஜானும் போயிட்டு இருந்திங்க .இந்த லூசோட எங்கே போறன்னு கேக்க போன் பண்ணேன். நீ பொய் சொன்ன . எதோ தப்பா தெரிஞ்சிது. அதான் நான் பின்தொடர்ந்து வந்தேன்"

"பெரிய சி ஐ டி சரோஜான்னு நெனப்பு" என்று ஜான் முணுமுணுத்தான்.

"ஹேய்! என்ன தனியா பேசிட்டு இருக்க?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.