(Reading time: 12 - 24 minutes)

"ன்கூட தான பேசக்கூடாது, எனக்கு நானே பேசக்கூட உன்கிட்ட பெர்மிஷன் வாங்கணுமா?" என்றான் ஜான் கோபமாக.

"எதுக்காக அந்த கடற்கரைக்கு போனீங்க?"

"அது எங்க தனிப்பட்ட விவகாரம், அதை ஏன் நீ கேக்குற?" என்றான் ஜான்.

"நீ எக்கேடு வேணும்னாலும் கெட்டுப்போ. எனக்கு வசந்த் முக்கியம். உன் மேல இருக்க அக்கறைல கேக்குறேன் வசந்த், என்ன பண்ணிட்டு இருந்திங்க? உனக்கு சொல்ல விருப்பம் இல்லைனா பரவால்ல"

"அது ஒண்ணும் இல்லை ஜெசிகா, காலைல சொன்னேன்ல"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"டேய்! டேய்!" என்று பதறிய ஜான் வசந்தை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்தான். "அவ கிட்ட எதுவும் சொல்லாத, என்னை ஏதாவது ஒரு விஷயத்துல சிக்க வைக்கணும்னு ரொம்பநாளா அலைஞ்சிட்டு இருக்கா. கண்டிப்பா நம்மள போலீஸ்ல மாட்டிவிட்ருவா"

"ஹேய்! அவன் சொல்ல வரத நீ ஏன் தடுக்குற?"

"எனக்கு வசந்த் மேல அக்கறை இருக்கோ இல்லையோ, என் மேல ரொம்ப அக்கறை இருக்கு. அதனால, சொல்லமுடியாது"

"முடியாதா" என்று கூறியபடி தன் கைப்பையில் இருந்து, வசந்தும் ஜானும் எந்த துப்பாக்கியை மறைத்து வைக்க எண்ணினார்களோ அதே  துப்பாக்கியை வெளியே எடுத்தாள் ஜெசிகா.

வசந்தும் ஜானும் வாயடைத்துப் போனார்கள்.

அந்த துப்பாக்கியை நன்றாக தடவிப் பார்த்த ஜெசிகா, அதை ஜானின் தலையில் வைத்து அழுத்தினாள்.

"இப்போ கூடவா சொல்லமுடியாது?"

"சொல்லிடுறேன்! சொல்லிடுறேன்! ஜெசிகா, முதல்ல உன்கிட்ட ஒண்ணு சொல்லிக்கிறேன். நீ வச்சிருக்கிறது பொம்மை துப்பாக்கி இல்லை"

"அப்படியா? அப்போ உன்ன இங்கேயே சுட்டு தள்ளட்டுமா?"

"உன்ன நான் ரொம்ப கொடுமை பண்ணிருக்கேன். எனக்கு புரியுது. அதுக்கெல்லாம் இப்போ மன்னிப்பு கேக்கணும்னு நினைக்குறேன்" என்று பயந்தபடி கூறினான் ஜான். அவனது கண்கள் அங்கும் இங்கும் ஓடி இதயத்துடிப்பு எகிறியது.

"பைத்தியம் மாதிரி ஒளறிட்டு இருக்காத. நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன?"

"அதை நானே சொல்லுறேன் ஜெசிகா" என்றான் வசந்த்.

"வசந்த், ப்ளீஸ், இது என் உயிர் சம்மந்தப்பட்டது. நானே சொல்லிக்கிறேன்" என்று ஜெஸிகாவை பார்த்தான் ஜான்.

"சீக்கிரம் சொல்லு, என் மூட் மாறிட்டு வருது"

"முதல்ல என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு"

"நேரத்தை கடத்தாத ஜான், விஷயத்துக்கு வா"

"இது ரொம்ப முக்கியமான ரகசியம்"

"சொல்லு"

"நாங்க புதையலை தேடி வந்தோம்"

"புதையலா?"

"ஆமா. நாங்க யாருக்கும் தெரியாம ரொம்ப நாளா புதையலை பத்தி ஆராய்ச்சி செஞ்சிட்டு இருக்கோம். எங்க ஆராய்ச்சி முடிவுல அந்த கடற்கரை பகுதில புதையல் இருக்கிறதை கண்டுபிடிச்சு அதை எடுக்க தான் போனோம்"

"அப்படியா, சரி. எதுக்கு இந்த துப்பாக்கி?"

"புதையலை பூதம் காவல் காக்கும்ல, அது கிட்ட இருந்து தப்பிக்க தான் இந்த துப்பாக்கி"

"இப்போ நீ உண்மையா சொல்லலைனா உன் தலை பீஸ் பீசா சிதறிடும்"

"மை பெஸ்ட் பிராண்ட் வசந்த்! நான் கவர்மெண்ட் கையிலயே கௌரவமான முறையில சாகலாம்னு முடிவு பண்ணிட்டேன். நடந்ததை நீயே சொல்லிடு"

நடந்தவைகளை எப்படி தொடங்குவது என வசந்த் திணறினான்.

"சீக்கிரம்டா! ட்ரிக்கரை அழுத்தி தொலைக்கபோறா"

சிறிய தயக்கத்தோடு அமேலியாவைப் பற்றி நடந்த அனைத்தையும் மெல்லிய குரலில் கூறி முடித்தான் வசந்த்.

"டேய்! நீங்க என்ன காரியம் பண்ணிட்டு இருக்கீங்கன்னு தெரியுமா?"

"நிச்சயமா நீ என் தலைல வச்சிருக்க துப்பாக்கியை விட மோசமான காரியம் தான். அதான் எல்லாம் தெரிஞ்சிடுச்சுல்ல, துப்பாக்கியை எடு" என்று கூறினான் ஜான்.

ஜெஸிகாவும் துப்பாக்கியை எடுத்து கைப்பையில் மறைத்துக்கொண்டாள்.

"வாழ்நாள் முழுக்க ஜெயில்ல இருக்கிறதா முடிவு பண்ணிட்டிங்களா?"

"எங்களுக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல ஜெசிகா. இந்த விவகாரத்தை எப்படி கையாளுறதுனே தெரியல" என்று வசந்த் கவலையோடு கூறினான்.

அப்போது, அவர்கள் கேட்ட உணவை அல்போன்ஸ் சிரித்த முகத்தோடு எடுத்து வந்து பரிமாறினார், அவர்களின் உரையாடல்கள் தற்காலிகமாக தடைபட்டன

பசியால் தவித்த ஜான் முதலில் உணவை எடுத்து புசித்தான்.

"என்ன பாக்குறீங்க? கவலையா இருந்தா சாப்பிடக்கூடாதா என்ன? ரொம்ப பசிக்குது"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.