(Reading time: 40 - 79 minutes)

கார் அருகில் செல்லும் வரையுமே இவனைவிட்டு விலகாமல் அணைத்த வண்ணமே வந்த  ரியா….  இவன் திறந்துவிட்ட கார் கதவின் வழியாக ஏறும் போதுதான்….சற்றாய்  சுதாரித்தாள்…. ஆனாலும் அவளுக்கு தவறு செய்துவிட்டோம் என்ற எண்ணம் கூட வரவில்லை….. எதோ அம்மாவின் கையெழுத்தை தொட்டதே அம்மாவை தொட்ட உணர்வை தர…..அந்த உணர்வு சுனாமியில் இருந்தவளுக்கு  மற்ற எதையும் பெரிதாய் கண்டு கொள்ள தோன்றவில்லை அந் நேரம்…..

அவள் காருக்குள் ஏறியதும்…..தன் கையிலிருந்த கார்ட்ஸை அவளிடம் கொடுத்துவிட்டு ட்ரைவர் சீட்டில் போய் அமர்ந்து காரை கிளப்பிய விவனும் சரி….  ரியாவும் சரி……

இந்த ஒரு செயல் தங்கள் இருவரின் வாழ்க்கையையும் எந்த அளவில் பாதிக்கப் போகிறதென அப்போது அறிந்திருக்கவில்லை….

அடுத்தும் கார் கிளம்பி சற்று நேரம் வரை மௌனமாய் இருந்த ரியா இதற்குள் ஓரளவு சமனப்பட்டிறுந்தவள்…..

“எப்படி இந்த ஐடியால்லாம் வந்துச்சு விவன்….? ரியலி ரொம்பவுமே சந்தோஷமா இருக்கு … தேங்க்ஸ்” என்றாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

“சந்தோஷங்களா  எஜமானியம்மா…..ரொம்பவும் நன்றி… நீங்க சொல்லித்தான் தெரியுது….” என்று  மார்க்கமாய் வந்தது பதில் அவனிடமிருந்து…

“ஏன் விவன் கோபமா…? அழுததுக்கு சாரி…பட் நிஜமாவே சந்தோஷமா இருக்குது….”

“ஹேய்….” என்றான் அவன் இப்போது….. “சாரில்லாம் சொல்லிட்டு…..” என்றவன்

“என்ன….. அப்டியே நீ சர்ப்ரைஸ் ஆகி…….சந்தோஷமாகி…. நரனே உன் சர்ப்ரைஸை கண்டு மனம் மகிழ்ந்தேன்……என்ன வேண்டும் குழந்தாய் …? தயங்காமல் கேள்… அப்டின்னு வரம் கொடுக்க முன் வருவ….நான் லபக்குன்னு அந்த ஆப்பர்சுனிடிய கேட்ச் பிடிச்சு….அந்த டிடிஎம்க்கு மட்டும்  விளக்கம் சொல்லிறுங்க தேவின்னு கேட்கலாம்னு நினச்சுறுந்தேன்…… ஆனா all my plans அம்சமா சொதப்பிடுச்சு…..அழவச்சுட்டு டிடிஎம்க்கு மீனிங் வேற கேட்டா..…அடி பின்னிட மாட்ட….?” என்று சலித்துக் கொள்ளவும்…

வாய்விட்டு சிரித்தாள் ரியா…..

அவன் சொன்ன விதத்தை விடவும் ….அந்த டிடிம் ன்றதே ஒரு திட்டு….அதைக் கேட்க ஒருத்தன் இவ்ளவு ப்ளான் போடுவானாமா என்பதுதான் முக்கியமாய் சிரிப்பை வர வைத்தது….. கூடவே மனதுக்கு சந்தோஷமாவும் இருக்கிறது….

கமிஷன் தாரேன்னு அவன் எதுவும் ஜ்வெல்லோ இல்ல காஸ்ட்லியான எதுவோ கிஃப்ட் செய்துறுந்தான்னா இவள் நிச்சயமாய் மனம் நொந்து போயிருப்பாளே…… அதோடு பூர்விக்கா சைனை தேடி எடுத்து வாங்கி தர நினைத்திறுக்கிறான் என்றால்…..அக்கா ஃபேமிலிய இவன் அக்சப்ட் செய்றான்னு தானே அர்த்தம்….. அபவ் ஆல் அவனோட இந்த எல்லா எஃப்ஃபொர்ட்டுமே இவள சந்தோஷ படுத்த மட்டும்தானே….

“தகர டப்பா மண்டையன்…”

இப்போது இவள் இதை சொல்ல….. காரை ஓட்டிக் கொண்டிறுந்தவன்  ஜெர்க் ஆகி இவளை திரும்பிப் பார்த்தான்……அடுத்த கணம் அதுதான் அந்த ஆனானப்பட்ட டி டி எம்மின் மீனிங்க் என புரியவும்…… வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்…..

“விடிஎம் னா வெத்து டப்பா மண்டையன்…” இனாமாக அடுத்த வார்த்தைக்கும் இவள் மீனிங் சொல்ல….. சிரிப்பில் கார் குலுங்கியது….

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.