(Reading time: 40 - 79 minutes)

ரு வகையில் இந்த புரிதல் அவளுக்கு சந்தோஷத்தையே தந்தது…. கண்டிப்பா விவன் இவளுக்கு எதிரா எதுவும் செய்துறுக்க மாட்டான்னு இப்ப இன்னுமே நம்ப முடியுதுதானே….. அதோட பிறக்க இருக்கும் குழந்தைக்கு விவன் will be the best father.

தன் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்ட ரியா இப்போது விவன் கதையை கேட்கும் முன் அவளுக்குள் வீசிக் கொண்டிருந்த சந்தோஷ காற்றை மீண்டுமாய் வீச வைக்க முயல….  விவனது குழந்தைகாலத்தை நினைத்து கணத்திருக்கும் மனது அதற்கு உடன்பட மறுக்க…..

அதே நேரம் சின்னதாய் ஒரு காற்று வீச…. அதில் இவள் பார்த்துக் கொண்டிருந்த அவளவனது  முடி அதாக கலைய….இயல்பாய் அவன் கை முடி கோத….அதற்கும் முன்பாக நீள துடிக்கிறது இவளது கரம்….

 தாய்மையாய் இளகுகிறது கணத்திறுந்த இவளது இதயம்…… சட்டென புரிகிறது….. இழப்புக்காய் அழுவதை காட்டிலும் அதை ஈடு செய்வது நலம்…..

இதுவரைக்கும் எப்படியோ இனி அவனுக்காக இவள் அதையாவது செய்வாள்….. I’ll care for him…. அந்த நினைவே மனதில் ஒரு நிர்சலனத்தை உண்டு செய்ய இவளுக்குள் வந்து நிறைகிறது நிம்மதி கூட்டம்…….

அந்நேரம் அந்தப் பக்கமாய் வந்தார் அவர்…. முத்தழகன் சார்… இவளோட சைன்ஸ் டீச்சர்….. ஏற்கனவே வயதான அவர் முன்பிருந்ததற்கும் வயது கூடி தெரிந்தார்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

பார்க்கவும் இவளும் விவனும் விஷ் செய்ய…. அதை ஏற்றுக் கொண்ட அவர்  ” வாப்பா…..நீதான அந்த புட் பால் பையன்…. இது தான் உன் வொய்ஃபா…?” என்றார்..

இவள் வேகமாக எதையும் சொல்லும் முன்….”ஆமா சார்…இவளும் இங்க படிச்ச பொண்ணுதான்…” என க்ளாரிஃபிகேஷன் கொடுத்து பின் “கேட்டிறுந்தனே சார்…” என எதையோ நியாபகபடுத்தினான்…

“ஆமா  சொன்னல்ல…. அங்க ஆஃபீஸ்  ரூமுக்கு வா….” என்றபடி நடக்க துவங்கினார் அவர்…. பேரு தான் சைன்ஸ் டீச்சர்….. இவங்க ஸ்கூலைப் பொறுத்தவரை ஆஃபீஸ் வொர்க்குக்கு முழு இன்சார்ஜும் எப்பவும் முத்தழகன் சார்தான்…

அவர்ட்ட இவன் என்னத கேட்டான் என்பதை விடவும்…… என்ன மறந்துட்டாரே சைன்ஸ் டீச்சர்…… என்பதே முக்கிய விஷயமாக பட்டது அவளுக்கு….

  முத்தழகன் சார் கூட்டிப் போன ஆஃபீஸ் ரூமின் ஸ்ட்ரோரைப் பார்க்கவும்…… “நீ வெளிய வெயிட் பண்ணு ரியு….கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன்” என்ற விவனது வார்த்தைக்கு உடனடியாக ஓபே செய்தாள் பெண்….

ஏன்னா அங்க இருந்த தூசி அப்டி…. இவளுக்கு டஸ்ட் அலர்ஜியாக வாய்ப்பு ரொம்பவும் அதிகம்……

இவங்க ஸ்கூல்ல ஒரு பழக்கம் உண்டு…..வருஷம் வருஷம் ஆனுவல் எக்‌ஸாமுக்கு முன்னால் அந்த வருட ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை வாங்கி வைத்துக் கொள்ளும் பள்ளி நிர்வாகம்… அது வருஷ வாரியாக, வகுப்பு வாரியாக கட்டி பண்டில் பண்டிலாய் கிடந்தது முத்தழகன் சார் கூட்டிப் போன ஆஃபீஸ் ரூமின் ஸ்டோர் ரூமில்….

அதிலிருந்து தேடி எடுத்து அவளுக்கான அத்தனை வகுப்பு ரிப்போர்ட் கார்டுகளையும் எடுத்து வந்து நீட்டினான் இவளிடம்…. “பூர்விக்கா அவங்க அப்பா சைனெல்லாம் இருக்குது “ என்றபடி….

ஒரு கையால் தன் வாயை மூடியபடியேதான் கை நடுங்க அவைகளை வாங்கினாள் ரியா….

இத்தனை நாள் இது இவளுக்கு தோன்றவில்லையே……ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்ட் ரிப்போர்ட் கார்டில் இவளது அம்மாவும் சில முறை அவளது அப்பாவும் கையெழுத்திட்டது கூட இருந்தது….. ஒற்றை விரலால் மெல்ல அந்த கையெழுத்துக்கு வலிக்குமோ என்றபடி மீண்டும் மீண்டுமாய் தடவிப் பார்த்தவள்…..

தான் அமர்ந்திருந்த சேரிலிருந்து எழுந்து, அருகில் நின்றபடி இவளைப் பார்த்துக் கொண்டிருந்த விவனை இறுக கட்டி அவன் மார்பில் புதைந்து குலுங்க ஆரம்பித்தாள்….

இவள்தான் அணைத்துக் கொண்டாளே தவிர அவனிடம் அதற்கு பதிலணைப்பு  இல்லை என்பது அப்போதைக்கு அவளுக்கு உறைக்கவே இல்லை…..

ஆமாம் விவனும்தான் என்ன செய்வான்….? அந்த இடம் அவங்க ஆஃபீஸ் ரூம் வாசல்…. பக்கத்தில் நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தது முத்தழகன் சாரும்….தியாகராஜன் சாரும்…. இவனோட டீச்சர்ஸ்…..இதில் சட்டென அவள் அணைக்க…… இவனுக்கு என்ன செய்யவென திகைப்பு…

அவள் உணர்வு இவனுக்கு புரிகிறதுதான்…..ஆனால் தன் ஓன் டீச்சர்ஸ் முன்னால…..என்பதில் அவன் தொக்கி நிற்க…

அதே நேரம்….இவனுக்கு இந்த கார்ட்ஸை எடுக்க ஹெல்ப் செய்த ஆஃபீஸ் அசிஸ்டெண்ட் அமல் அண்ணா வேற…” சும்மா நீயும் வச்சுக்கோ….. உன்னோட கார்ட்ஸையும் எடுத்துட்டேன் ஜெரோம்” என்றபடி அங்கு வந்தவர்…

இந்த இவர்கள் கோலத்தைக் கண்ட ஷாக்கில்…. அவர் எடுத்து வந்திருந்த கார்ட்ஸை அருகிலிருந்த சேரில் வைத்துவிட்டு அப்படியே அப்ஸ்காண்டாக….

எதை யோசிப்பான் இவன்? ஆக அவரைப் போல சீனிலிருந்து அப்ஸ்காண்ட் ஆகிறதுதான் இவர்களுக்குமே இப்போது சரி என…… இவனோட கார்ட்ஸ் அவளோட கார்ட்ஸ் என எல்லாவற்றையும் ஒரு கையால் எடுத்துக் கொண்டு…… அவளை மறுகையால் சற்றாய் பிடித்தபடி  காரை நோக்கி விடுவிடென நடந்துவிட்டான்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.