(Reading time: 40 - 79 minutes)

வள் அக்காதலர்களை பார்வையால் அளவெடுக்க அவனோ இவர்கள் இருவர் மீதும் மேலும் கீழுமாய் தன் பார்வையை ஓட்டியவன்…. முகமெங்கும் சந்தேக சாயை படர…. தன் வலபாதத்தை சற்றாய் அசைத்தது போல்தான் தோன்றியது….. அவ்வாடவன் காலருகில் தரையில் கிடந்தது போலும் அக்கழி….மின்னலென அது இந்நேரம் அவனது கரத்தில் வந்தமர்ந்தது….

பிரமித்துப் பார்த்தாலும் வரவிருக்கும் சண்டையின் வாசம் ருயம்மாவின் நாசியில்….

அடுத்த கணம் கையிலெடுத்த கழியுடன் ஒரு விதமாய் தலைசாய்த்து சற்றே அலட்சியமாய் ஆனால் படு ஆராய்தலாய் பராக்கிரமனைப் பார்த்த அவன்….

.“அயலூர் வணிகன் எவனும் ஊரின் இவ்வளவு ஒதுங்கிய பகுதிக்கு வரபோவதில்லை…. ஆக நீ வணிகன் இல்லை…. நீ உள்ளூர்காரனும் இல்லை…. அயலூர்காரனுக்கு இங்கென்ன வேலை?....யார் நீ…?”

என்றபடி தன் கையிலிருந்த கழியை நீட்டி வந்திருப்பவன் தன் மன்னன் என அறியாமல் மானகவசன் மார் மீது அக் கழியின் முனையால் சின்னதாய் இடித்தான்….

இதில் மானகவசன் வதனத்தில் ரசனையான ஒரு பெருமித புன்னகை மொட்டவிழ்கிறது என்றால்….. ருயம்மாவுக்கோ கடல்கோளுக்கு உட்படுகிறது அவளது இதயம்…. புயலாய் ஆவேசம்…சீறுகிறது அவள் சுவாசம்…

இதற்குள் அக் காதல்காரன் யாரும் எதிர்பார்க்கும் முன்னம் “இந்த அந்நியனோடு உளவா பார்க்கிறாய்?” என்றபடி மானகவசனை இடித்தது போல் இவளையும் இடிக்கவென தன் கழியை நீட்டினான் ருயம்மாவின் மார் நோக்கி….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

அவ்வளவுதான் மின்னல் தோற்கும் வேகத்தில் சரேலென தன் உடைக்குள் வைத்திருந்த அந்த ஷிஷ்பரை உருவி ஒரே வெட்டு…..ருயம்மாவின் அனிச்சை செயல்….பொளிச்…..

எதிரானவன் கையிலிருந்த கழி இரண்டு துண்டாய் போய்விழுகிறது….

இப்போதோ ஒரு விரல் அளவு உருண்டும் இரு முழ நீளம் நீண்டும்….. அதன் முனைக்கு சற்று மேலாக சுண்டு விரல் அளவில் பொருத்தபட்டிருந்த பல கத்திகளை உடையதுமான இவள்  வாளை கண்ணிமைக்கும் நேரம் கூர்ந்து பார்த்த அந்த கழிகாரன்….

“டெல்லி சுல்தானியர்களின் போர்கருவி…..ஆக நீங்கள் உளவாளியேதான்….” என கூவியபடி தன் வலக்கையால் தன் பின்னிருந்த மரத்தை ஒரு தட்டு ஓங்கி தட்ட….. மேலிருந்து விழுகிறது மற்றொரு கழி அவன் கையின் மீதே….. எப்போது அது அவன் கைக்கு வந்தது என்றும் எக்கணம் அவன் அதை சுழற்ற துவங்கினான் என்றும் சொல்வதற்கில்லை….. அசுர வேகம்…

ஆனால் அதற்கும் முன்பாக ருயம்மா தன் வாளால் அக்கழிகாரனின் கழியை வெட்டிய நொடியே…..வாயு வேகத்தில் அவள் தலையைப் பற்றி தரை புறமாக அமிழ்த்தியபடி தானும்  கால் மடக்கி அமர்ந்த பராக்கிரமன்,

வெட்டபட்டு தரையில் கிடந்த கழியின் இரண்டு துண்டுகளையும் கைக்கொன்றாய் எடுத்துக்கொண்டு, மனோ வேகத்தில் அவைகளை சுழற்றவும் துவங்கினான்….

மின்னல் வேகத்தில் பொளிச் பொளிச் என்ற சத்தங்களுடன் மூண்டது சிலம்ப சண்டை….

மெல்ல கண்விழித்த ரியாவின் காதில் இன்னும் கூட விழுகிறது அந்த க்ளிஞ் க்ளிஞ் சத்தம்….. சுற்று முற்றும் பார்க்க…..அங்கிருந்த வின்டோ கர்ட்டென்ஸில் அலங்காரத்திற்காக சேர்க்கப்பட்டிருந்த சில மெல்லிய இரும்பு வளையங்களின் சத்தம் அது என புரிகிறது….

மனதில் மீண்டும் அன்றைய கனவே வட்டமிடுகிறது…. ‘கனவு போற டைரக்க்ஷன பார்த்தா மானகவசருக்கு இந்த ருயம்மா பொண்ணுதான் மாறுவேஷத்துல வந்திறுக்குன்னு தெரியும் போலதான் இருக்கு….. ஆனா அதையும் நேருக்கு நேரா கேட்காம சுத்தி வளச்சு அவளாவே சொல்ல வைக்க ட்ரைப் பண்றார்னு தோணுது….’ நினைத்துக் கொண்டே எழுந்தவளுக்கு நேற்றைய விவனது பூரிக்கட்டை சண்டை நியாபகம் வருகிறது….

‘அந்த கால ராஜாக்கள்ளாம் சிலம்பம் போட்டு…… ஏன் போரே பண்ணி பொண்ண இம்ப்ரெஸ் செய்ய பாடா படுறாங்களாம்…. இங்க இந்த விவன் பாண்டியர் வெறும் பூரிக்கட்டைய வச்சே சமாளிக்க நினைக்கிறார்……சரியான பூரிகட்ட பார்ட்டி…..PKP …’ இப்படியாய்  மனதிற்குள் அவனை கமன்ட் செய்தபடி இவள் எழுந்து கொள்ள…. சின்ன புன்னகையுடனே அவளுக்கு துவங்கியது அந்நாள்…..

அன்று இரவுக்குள் அப்புன்னகையை என்னதாய் மாத்தினானாம் விவன்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.