(Reading time: 40 - 79 minutes)

டுத்து அவன்  “ஹேய் ரியு நியாபகம் இருக்கா…?” என்றபடி  சற்று தொலைவிலிருந்த அடுத்த மரத்தைப் பார்க்க, அவள் பார்வையும் அந்த திசையைப் பார்க்கிறது…..

அந்த  மரத்தை சுற்றிலும் மூன்று வரிசையாக சிமெண்ட் பெஞ்ச்கள் அமைக்கப் பட்டிருக்கும்….. அவைகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்….

அவன் நினைப்பதே இவளுக்கும் நியாபகம் வருகிறது….

வழக்கமாக இவள் ஸ்கூல் சின்ன வகுப்பு பிள்ளைகள் அதில் ஒரு உலக பிரசித்தி பெற்ற கேம் விளையாடுவார்கள்…

ஷூ டச்…

ஷூ கூட சேர்ந்துதான போடுறோம் சாக்‌ஸ்…..சோ அதுவும் ஷூதான்….இதுதான் கேமோட முதல் ரூல்…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அடுத்த ரூல் என்னனா அந்த ஷூவாகிய ஷூ சாக்‌ஸை….தொட வர்ற பாயோ கேளோ தன் ஷூவால மட்டும்தான் அதை தொடனும்….. ஹி ஹி மிதிக்கிறதுன்னு சொல்றதவிட ஷூ டச்னா டீசண்டா இருக்குல்ல…….அப்டி தொட்டா அவ்ட்….

 இன்னொரு இம்பார்ட்டென்ட் ரூல் என்னனா தொட வர்றவங்கட்ட மாட்டிக்காம நாம ஓடுறது அந்த  பெஞ்ச் மேலயா மட்டும்தான் இருக்கனும்…. நோ கீழே இறங்கிஃபையிங் பிசினஸ்… இறங்கிட்டாலும் நாம அவ்ட்….

இதை குட்டீஸ் விளையாடுறதை பார்க்கவே க்யூட்டா இருக்கும்….இதில் அப்பப்ப கொஞ்சம் பெரிய அண்ணா அக்காவுக்கும்  ஜாய்ன் செய்துக்க குட்டியார்களின் கூட்டம் பெர்மிஷன் கொடுக்கும்…

அப்படி ஓரிரு முறை இவள் விளையாடும் போது  விவனுமே சேர்ந்து விளையாடியது உண்டு…. அதுவும் குட்டீஸ் இவனை அந்தப் பக்கம் பார்த்தாலே கூப்டும்….

அதை நினைத்து இவள் எதோ சொல்ல தொடங்கிய இந்த நொடி ரிங்ங்ங்ங்ங்ங்காகிறது ஸ்கூல் பெல்……

ஹேய் என கத்தியபடி ஓடிவரும் குட்டீஸ்தான் முதலில் வெளி வந்தது…..

ஓ இன்ட்ரவெல்…

இவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சில பஞ்சு மூட்டை குட்டி பாப்பாஸ் வந்து அந்த சிமெண்ட் பெஞ்சில் ஏற…..”ஏய் ப்ரியா நாங்க ஷீ டச் விளையாடப் போறோம் நீயும் வா” என ஒரு குட்டி இன்னொரு குட்டிப் ப்ரியாவை விளையாடக் கூப்பிட…

இவள் இருந்த சந்தோஷ மூடில்…. தானும் போய் அந்த பெஞ்சில் ஏறிக் கொண்டாள் ரியா…

“ஹேய் நானும் ப்ரியாதான்பா….நானும் ஜாய்ன் செய்துக்கலாமா ப்ளீஸ்…..” இவள் தான்…

அப்றமென்ன குட்டீஸ் ஈ என்ற சிரிப்போடு பெர்மிஷன் குடுக்க….விவனோ… “ஹேய் ரியு….என்ன இது… இப்டி டைம்ல….. பெஞ்ச் மேலெல்லாம் ஏறி ஓடின்னு….ரிஸ்க்” என சத்தம் குடுக்க…. பதிலுக்கு இவளோ ஒரு முறைப்பை கொடுக்க….குட்டீஸ் கொல்லென சிரித்து வைக்க…

‘பின்னே குட்டீஸே ஓடுதாம்….இவள இப்டி சொன்னா…?’

‘நான் பேஷண்ட் இல்ல….’ உதடை மட்டும் சத்தமின்றி அசைத்துக் காமித்தாள் ரியா அவனுக்கு…

சிரித்தபடி “என்னையும் சேர்த்துகுவீங்களாம்…ப்ளீஸ்…” என்றபடி இப்போது தானும் வந்து சேர்ந்தது விவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.