(Reading time: 40 - 79 minutes)

ங்க அம்மா…..அப்பா…. நீங்க கடை..” எதை எப்படி கேட்கவென தெரியாமல் திக்கியது ரியாவின் குரல்….

அவளை அழ வைத்துக் கொண்டிருக்கல்லாம் அவனால் முடியாது…..ஆனால் அதே நேரம் அவன் அம்மா அப்பாவைப் பற்றி அவளிடம் சொல்லிவிடவும் ஆயிரம் ஆசை இருக்கிறது….சரி சொல்றது தேவையான வகையில் சொல்லி முடிச்சுடலாம்…..முடிவு செய்து கொண்டவன்..

“என் அப்பா மரக்கடை வச்சிருந்தாங்க ரியு….” என தொடங்கினான்….

“வீடு கடை ஷோரூம்கெல்லாம் வுட் வொர்க் செய்து கொடுக்கிறதோட சேர்ந்து, பெரிய ஷாமில்ட்ட இருந்து சப் ஆர்டர் எடுத்தும் வொர்க் செய்து கொடுக்கிற ஒரு மீடியம் சைஸ் கடைனு வச்சுகோயேன்…...  என்னாச்சுன்னு தெரியலை…… சாதாரணமா தூங்கபோன அப்பா மறுநாள் எழும்பவே இல்லை…. அம்மா அதுல ரொம்பவே அஃபெக்ட் ஆகிட்டாங்க…..நிமு வேற அப்ப அவங்க வயித்ல இருந்தா…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அடுத்து பெரியப்பா ஃபேமிலிதான் எங்களுக்கு ஃபுல் சப்போர்ட்…. ஆதம்பாக்கத்துல இருந்த பெரியப்பா உடனே வீடை மாத்திட்டு எங்க வீட்டுக்கு அடுத்த வீட்டுல குடி வந்துட்டாங்க….

கடைல வேலைக்கு முன்ன இருந்த அதே ஆட்கள்தான்…..அம்மா ஜஸ்ட் மேனேஜ் செய்துக்கனும்…… டெய்லி நைட் வந்து பெரியப்பாவும் கடை கணக்கு வரவு செலவுன்னு எல்லாம் பார்த்து ஹெல்ப் செய்வாங்க…… அப்பவே அம்மாக்கு துணைக்குன்னு ஈவ்னிங் டைம் நானும் கடைல இருப்பேன்….

இதுல கண்மணிக்கு 6 வயசில் அம்மாவும் நோமோர்..…அவங்க இம்பேலன்ஸ்ட் எமோஷன்ஸ் அவங்க ஹெல்த்தை ரொம்பவுமே அஃபெக்ட் செய்துட்டு போல…..

அப்றம் முழுக்க பெரியப்பா ஃபேமிலிதான் எங்களுக்கு……. ரொம்ப நல்லா பார்த்துகிட்டாங்க பெரியப்பாவும் பெரியம்மாவும்… சேம் டைம் எங்க கடையையும் மூடலை….. பெரியப்பாவுக்கு ரெண்டு பொண்ணுங்க……கூட நாங்க ரெண்டு பேர்…..நாலு பேரை செட்டில் செய்ய பெரியப்பாவோட சிங்கிள் ஏர்னிங் எப்படி போதும்…?

சேம்டைம் கடையில இருந்து ஓரளவு இன்கம் இருந்துது……கூடவே அங்கயும் 5 பேர் வேலைக்கு இருந்தாங்க….அவங்களுக்கும் வேலை தேவை…. இப்டி நிறைய ரீசன்ஸ்காக  கடை ஓடிச்சு……

டே டைம்ல கடை ஆட்களே கடைய ஓரளவு சமாளிச்சுடுவாங்க…. ஈவ்னிங் போய் நான் பார்ப்பேன்…..அப்ப நான் செவன்த் படிச்சேன்... அதோட அதுக்கு முன்னயும் டெய்லி கடைலதான ஈவ்னிங் இருப்பேன்…..சோ ஓரளவு எல்லாம் புரியும்…… அப்றம் அப்டியே பழகிட்டு… கக்ஷ்டம்னு எதுவும் கிடையாது….

இதுல எனக்கு பிடிக்காத ஒரே விஷயம் ஒரு இடத்துல உட்கார்றதுதான்…. ஸ்கூல்லயும் P.T பீரியட் தவற எல்லா டைமும் உட்கார்ந்திருக்கனும்…..அங்க கடையிலும் என் வேலை  கணக்கு டேலி செய்றது….. பில் புக் செக் பண்றது….ஆர்டர் வெரிஃபை செய்றது…. டிசைன் வரையுறதுன்னு எல்லாம் உட்கார்ந்து செய்ற வேலை…. 8. 30 க்கு கடை மூடிறுவோம்தான்….ஆனா அடுத்தும் உட்கார்ந்து மலை மலையா இவங்க குடுக்ற ஹோம்வொர்க்க எழுதனும்னா கடி ஆகும்….

ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப எழுதினா புரியாத லெசன் கூட புரிஞ்சுடும்ன்றதுல்லாம் எனக்கு செம முட்டாள்தனமா இப்ப கூட தோணுது…… நான்லாம் குழந்தைய ஹோம்வொர்க்கே இல்லாத ஸ்கூல்லதான் சேர்ப்பேன்….”

அவன் வார்த்தைகள் வழியாக அவனையே தனக்குள் வாங்கிக் கொண்டிருந்த ரியா அவனது கடைசி வாக்கியத்தில் சற்றாய் இலகுவாகிப் போனது நிஜம்….சின்னதாய் சிரிப்பு கூட வருகிறது….

‘எப்படியும் ஹோம்வொர்க் செய்யப் போறதுல்ல இவ பிள்ளைங்க…..அதானே அவன் ப்ளான்….’

ஆனால் அவன் மற்ற பேச்சின் தாக்கமும் இன்னும் இவளில் இருக்கிறதே….

“உங்க பெரியப்பா ஃபேமிலி  இப்ப எங்க இருக்காங்க… அவங்க பொண்ணுங்கல்லாம்…?”  அவன் குடும்பம் பற்றி பேச்சை தொடரவே விரும்பினாள் இவள்…

“ஸ்வீட்லின் மெர்லின் ரெண்டு பேரும் இப்ப மேரேஜாகி யூஎஸ்ல இருக்காங்க…..  பெரியப்பாவும் பெரியம்மாவும் அங்க போய்ருக்காங்க….மெர்லின்க்கு இப்பதான் டெலிவரி….சோ ஸ்வீட்லினும் பெரியப்பாவும் வந்தாங்க நம்ம மேரேஜுக்கு…..

இங்கயும் பெரியம்மாவுக்கு சென்னை வெதர் எப்பவும் ப்ராப்ளம்தான்…. சோ பெரியப்பா ரிடையர்மென்ட்க்கு பிறகு…. நானும் இங்க எஸ்டாப்ளிஷ் ஆகிட்டேன்ல….. கொடைக்கானல்ல செட்டில் ஆகிருக்காங்க பெரியப்பா…..” அவன் சொல்லி முடிக்க…

“கண்மணிக்கு நேம் வச்சது நீங்களா…..?” அதுதான் ரியாவின் அடுத்த கேள்வி…. அதை இவள் கேட்டதில் அவன் முகத்தில் அப்படி ஒரு ப்ரகாச பல்ப்….

“ம்….ஆமா….ஆனா எப்டி கண்டுபிடிச்ச?…?”

“ஸ்வீட்லின் மெர்லின் ஜெரோம்னு வீட்ல எல்லா கிட்ஸ் நேமும் anglicized ஆ இருக்கப்ப கடைகுட்டிக்கு மட்டும் கண்மணினு பேர் வச்சுறுக்குதே….. அதோட கண்மணி பிறந்தப்ப வீட்டு சிச்சுவேஷன் எப்டி இருந்திருக்கும்னும் கொஞ்சம் புரியுது….”  ரியாவின் பதிலில் விவன் முகம் சற்றாய் மாறுகிறது…

“நீ சொன்னது 100% fact ரியு…. அம்மா அந்த டைம்ல ரொம்ப இமோஷனலா இருந்தாங்க…. யாரும் நேம் வைக்க எஃபெர்ட் எடுத்தது போல தோணலை….சோ நானே வச்சுட்டேன்….” என்றவன் இபோழுது ஒரு அழுத்த பார்வை இவளைப் பார்த்தான்… பின் சுற்றிலுமாய் ஒரு கணம் பார்வையை ஓடவிட்டவன்…

“ அவ வயித்ல இருந்தப்ப அம்மா டிஸ்டர்ப்டாவே  இருந்ததாலதானோ என்னவோ நிமு பிறந்த பிறகு எல்லோரும் அவட்ட நல்லா இருந்தாலும்கூட அவ எப்பவும் டிஸ்டர்ப்டா, ரொம்ப இன்செக்யூர்டா இருப்பா…… இப்ப இருக்க மாதிரி மாறுவதுக்குள்ள அவ எவ்ளவு கஷ்டப்பட்றுப்பான்னு எனக்குத்தான் தெரியும்……. அதான் சொல்றேன்……நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம எப்பவும் ஹேப்பியா இரு ரியு……

நீ சந்தோஷப்படுறப்ப உன் பாடில செக்ரீட் ஆகுற ஹேப்பி ஹார்மோன்ஸ் உன் blood வழியா பேபிக்கு போகும்….அப்ப ரீஸனே இல்லைனாலும் பேபி சந்தோஷத்த ஃபீல் பண்ணும்….சேம் வே…..உன் ஆங்கர் டிப்ரஷன் எல்லாத்தையும் பேபியும் கோத்ரூ செய்யும்….. so please be happy always…… அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்ய ரெடியா இருக்கேன்….” அவன் சொல்லிக் கொண்டு போக…..அவன் கருத்துக்கள் அவளுக்கு முழுவதுமே ஒத்துக் கொள்ளும்படியாய் இருந்தாலும் அவள் மனதில் வந்த முதல் விஷயம்…..

‘கண்மணி மேல் உள்ள  எக்‌ஸ்ட்ரீம் பாசத்தில்… என் வயித்ல உள்ள குழந்தை மேல இரக்கப்பட்டு அதுக்காக என்னை மேரேஜ் செய்துறுக்கான்…’ என்பதே….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.