(Reading time: 40 - 79 minutes)

ன்று காலை ரியாவுக்கு டாக்டரிடம் கவ்ன்ஸ்லிங் செஷன் முடியவும்…. “வா வா…. ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு வேலை இருக்கு உனக்கு” என்றபடி இவளை எங்கோ காரில் கூட்டிக் கொண்டு போனான் விவன்…..எவ்வளவு கேட்டும் ‘அதெல்லாம் சர்ப்ரைஸ் ஜிகே…’ என்ற ஒரே பதில்….

“ஜி கே வா அப்டின்னா….?” என்ற அடுத்த கேள்விக்கு…. “இதுக்கு பதில் சொன்னா நான் நிஜ டிடி எம்…..” என ஒரு முத்தான ரிப்ளை வேற….

இப்படி எல்லாம் அலப்பற செய்து அவன் போய் காரை நிறுத்தின இடம் இவங்களோட ஸ்கூல்……

அது இருக்கும் அந்த  தெருவுக்குள் நுழையும் வரையுமே இதுக்குத்தான் கூட்டிட்டுப் போறானோ என ஒரு சின்ன கெஸ் கூட இல்லாமல் வந்தவளுக்கு….ரியல் சர்ப்ரைஸ்….கூட ரொம்பவுமே சந்தோஷமாயும் இருக்கிறது…

கேட் அருகில் காரை நிறுத்திவிட்டு, அவனோடு ஸ்கூலிற்குள் நுழைய….  இவளுக்கு இதயத்தின் இடுக்குகளிலெல்லாம் மகிழம்பூ மலர்ந்தன….

நுழையும் இடம் முதல் மொத்த க்ரவ்ண்டிலும் கால் புதைய புதைய நடக்கும் வண்ணம் மணல் இருக்கும் இவர்களது பள்ளியில்…… அதில் ஒரு இடத்தில் சற்றாய் இவள் தடுமாற அதிலிருந்து  இவள் கையை வேறு பற்றிக் கொண்டு நடந்தான் அவன்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

படித்த பள்ளிக்கு திரும்பிப் போவதே பருவ காலம்……அதில் மணந்தவனுடன் போவதென்பது பால் மழைக் காலம்… ..அதிலும் அவனும் அவளும் அங்குதான் படித்தனர் என்பதும் இன்று இருவருமாய் அங்கு சென்று நிற்பதும்…. எப்படி இருக்கிறதாம்…?

காதலும் பால்யமும் கணவனோடான ஈர்ப்பும் எங்கோ எகிறி ஏறி வான் வீதி மண்டலத்தில் இரண்டாம் அடுக்கை தாண்டிக் கொண்டிருக்க…. ரியாவுக்குள் மொட்டவிழும் உற்சவம்…. தன்னைப் பற்றி இருந்த விவன் கையை தானும் பற்றிக் கொண்டாள்…..

ஸ்கூலில் உள்ளே நுழைந்த சற்று தூரத்தில் இருப்பது இவர்களது சைக்கிள் பார்கிங்…… இவளை நேராக அங்குதான் கூட்டிக் கொண்டு போனான் அவன்…

அந்த இடத்தைப் பார்க்கவும் எதுவும் பேசாமலே இருவர் முகத்திலும் சிரிப்பு அதுவாகவே வந்து ஒட்டிக் கொள்கிறது….

“எவ்ளவு சண்டை போட்றுப்போம்ல…?” இது இவள்…

“சண்டை போட்டன்னு சொல்லு….. நான் எங்க போட்டேன்…” இது அவன்…

“ஹான்…..ஏன் சொல்ல மாட்டீங்க…? என் சைக்கிள் ஏரெல்லாம் பிடுங்கி விட்டீங்களே அது என்னதாம்..?”

“அன்னைக்கு  என்ன சொல்லி திட்ன தெரியுமா நீ…? அப்ப கூட அடுத்து நீ அழவும்  ஒழுங்கா ஏரெல்லாம் ஃபில் பண்ணி கொடுத்தேனே…. ஆனா நீ என்ன திட்னதுக்கு சாரி கூட கேட்கலை… எப்பவும் நான் நல்ல பையன்தான்….. ..”

“ஓஹோ அப்ப நான் தான் ராங்கியா…?”

“இல்லையே அப்டின்னு நான் சொல்லலையே…” அந்த நானில் மட்டுமாய் அவன் அழுத்தம் கொடுக்க….

இப்போது அவனைப் பார்த்து புஸ் புஸ் என முறைத்தவள்….அவன் உதடுக்குள் அடங்கிய குறும்பு சிரிப்போடு சின்னதாய் கண் சிமிட்டுவதைக் காணவும் அதற்கு மேல் முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள்….

இவளோடு சேர்ந்து சிரித்த அவன் அடுத்து அவளை கூட்டிப் போனது அந்த இடத்திற்கு நேர் எதிரில் சற்று தொலைவிலிருந்த ஒரு வேப்பமரத்தடிக்கு…..

“இரு அது இருக்குதான்னு பார்க்கிறேன்….” என்றபடி அந்த மரத்தில் சற்று உயரத்திலிருந்த ஒரு மரப் பொந்துக்குள் கைவிட்டவன்….முதல் இரு முறை  காய்ந்த இலை…குச்சி என எடுத்தவன் மூன்றாம் முயற்சியில் கையில் எடுத்தது அந்த குட்டி க்ளிப்…

ஆக்சுவலி அது ஹேர்பின்…..தங்க நிறத்தில் இருக்கும் அதின் மேல் அலங்காரமாய் ரெண்டு வெள்ளை பாசிகள் இருக்கும்…. ஸ்கூல் டேசில் ஒரு நாள் கலர் ட்ரெஸ் போட்டு வந்திருந்த போது ரியா அதை முன் முடியில் வைத்து வந்திருந்தாள்…

 அன்னைக்குள்ள எதோ லடாயில் இந்த விவன் அதை சட்டென முடியிலிருந்து உருவிக் கொள்ள, இவள் துரத்த அவன் ஓட என..…அவன் ஓடுற ஸ்பீடில் இவ என்னைக்கு பிடிக்கவாம்…. போடா நீயே வச்சுக்கோ….. என விட்டுவிட்டுப் போனது…..

துரத்திக் கொண்டிருந்தவள் போனது தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த விவன்….கொஞ்ச நேரம் கழிச்சுதான் பொண்ணு போய்ட்டு என புரிந்து அதை அங்கு தூக்கிப் போட்டு வைத்திருந்தான்….. அடுத்து பார்க்கிறப்ப எடுத்து குடுக்கலாம் என…

ரெண்டு பேருமே அடுத்து அதை மறந்தேவிட்டனர்…. இன்னைக்குத்தான் சார்க்கு நியாபகம் வந்திருக்கு…..

“சாரி..” என்றான் அவன் அந்த கால நிகழ்ச்சிக்காக…..

“தேங்க்ஸ்” என இவள் அவன் கண்பார்த்து சொன்னது எல்லாவற்றிற்குமாக….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.