(Reading time: 6 - 11 minutes)

தெல்லாம் வேண்டாம்மா..... அந்தப் பக்கமெல்லாம் தகராறு நடக்குதாம்.... அம்மன் கோவில் பக்கத்துலதானே நேரு நகர் இருக்குது அதனால நீங்க அங்க போக வேண்டாம்......”

“இதெல்லாம் ரொம்ப அதிகம்டா..... நேரு நகர்ல இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தள்ளிக் கோவில் இருக்குது...... அதுக்கு என்னை போக வேண்டாம்ன்னு சொல்ற.... ஆமாம் உனக்கு எப்படித் தெரியும்..... நீ வர்ற வழியில பார்த்தியா.....”

“இல்லைம்மா காலேஜ்ல பேசிட்டாங்க...... அதனால நான் கூட இன்னைக்கு அந்த வழியா வரலை..... சுத்திட்டுத்தான் வந்தேன்......”

“நல்ல பிள்ளைப் போ..... ஏன்தான் இப்படி ஒரு பயந்தவனா இருக்கியோ தெரியலை...... சரி நான் ஆட்டோல போயிட்டு அதுலயே வந்துடறேன்.... அதுக்கும் தடை சொல்லாத....”, என்று கூறி அடுத்து ராஜா பேசுவதற்குள் மடமடவென்று வெளியில் வந்துவிட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

இதுதான் ராஜா..... எதற்கெடுத்தாலும் பயம்..... அவன் பேராசிரியர் துறையைத்  தேர்ந்தெடுத்த காரணமே எந்த வித தொல்லையும் இல்லாத வேலை என்பதால்தான்..... மாணவர்களிடம் கூட அதிகம் வைத்துக் கொள்ள மாட்டான்.... எங்கே பிரச்சனை பண்ணிவிடுவார்களோ என்று..... அவன் உண்டு..... அவன் வேலை உண்டு என்று இருப்பவன்..... கர்நாடகாவில் தமிழர்களை அடிக்கிறார்கள் என்றால் இவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் வசிக்கும் கன்னடர்களைக் கூட தவிர்த்து விடும் அளவிற்கு பயம் கொண்டவன்....

ராஜாவும் அவன் அம்மாவும் அவன் வீட்டில் வழக்காடிக்கொண்டிருந்த அதே நேரம்..... நேரு நகரில் மிக மும்முரமாக இரு கோஷ்டியினரிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது...... அப்பொழுது இரு சக்கர புல்லட் வகை வாகனம் ஒன்று சண்டை நடந்த இடத்தின் மையத்தில் கூட்டத்தை கலைத்தபடி வந்து நின்றது......

அதிலிருந்து இறங்கிய உருவம் அங்கிருந்தவர்களைப்  பார்த்து, “நான் மூணு எண்றதுக்குள்ள சண்டைய நிறுத்திடுங்க..... இல்லைனா அப்பறமா ஏற்படற  விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.....”,என்றபடியே விரலை சொடுக்கி ஒன்று, இரண்டு என்று  எண்ண ஆரம்பித்தது.

தொடரும்

Episode 02

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.