(Reading time: 9 - 17 minutes)

09. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

".கே.!மெதுவா கண்ணைத் திற!"-விஷ்வாவின் கேசத்தினை கோதியப்படி,மெல்லியக் குரலில் கீதா கூற,மெல்ல கண் விழித்தான் அந்தப் பாலகன்.

"சொல்லு!உன் பெயர் என்ன?"

"விஷ்வா!"

"குட்!உன் அப்பா பெயர்?"

"ருத்ரா!"

"அம்மா?"-அங்கு சில நொடிகள் கனத்த மௌனம்!!

"சொல்லு!அம்மா பெயர் என்ன?"

"சரண்யா!"-அவன் மெல்லிய குரலில் கூற,அந்த தனியறையில் இருந்த அனைவரது முகத்திலும் பிரகாசம்!!

எனினும்,அந்தக்குழப்பத்தினை முழுதாக தீர்க்க விரும்பியவள்,

"நான் யாரு?"என்று வினவினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"டாக்டர்......கீதா!"

"வெரிகுட்!"-நிம்மதி அவள் முகத்தில் மட்டுமன்றி மனதிலும் படர்ந்தது.

"ஓ.கே!மெதுவா எழுந்திரி!கம் ஆன்!"-அப்பாலகனை மென்மையாக அமர வைத்தாள் அவள்.

அவன் எழுந்து அமர்ந்ததும் ஓடி வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டான் ருத்ரா.

"விஷ்வா.."-மனதில் எவ்வளவோ பேச வார்த்தைகள் சேகரித்தும்,அதரங்கள் அவற்றை வெளி விடாமல் தடுத்து நிறுத்தியது.

"ஸாரிடா!"-தந்தையையும்,தாயையும் தனிமையில் விட வேண்டி,அங்கிருந்து நகர நினைத்தவளை,

"தேங்க்யூ!"என்ற அவனது குரல் தடுத்தது.

"பரவாயில்லை...இனி,அவன் மனசுல எந்தக் கவலையும் வராம பார்த்துக்கோங்க!"

"ம்..!"

"முக்கியமா அம்மா பற்றிய கவலை!"-திடீரென்ற அவளது குறிப்பு மீண்டும் அவனை குழப்பியது.

"முயற்சி பண்றேன்!ஒரு தாய் ஸ்தானத்துல என்னால அவனை பார்த்துக்க முடியுமான்னு தெரியலை!"

"உங்களால அது முடியாது!"

"..............."

"அவனுக்கு இப்போ தேவை ஒரு அம்மா!"-அவளது அடுத்த புதிர் அவனை மேலும் குழப்பியது.

"வாட் டூ யூ மீன்?"

"வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க!"

"................"-அவன் திடுக்கிட்டு போனான்.

"உங்களுக்காக வேணாம்!அவனுக்காக.."

"................"

"ஒருத்தரோட கடந்தக் காலம் எப்படி வேணுமானாலும் இருக்கலாம்!ஆனா,அவங்க எதிர்காலம் அந்த ஒருத்தரை சுற்றி இருக்கிறவங்களை தவறான வழியில பாதிக்காம இருக்க வேண்டியது அவசியம்!உங்க கடந்தக்காலம் எவ்வளவோ வலிகளால் நிறைந்தது தான்!ஆனா,எதிர்காலம் நல்லப்படியா இருக்கணும்னா உங்க பையனுக்காக நீங்க வாழ வேண்டியது முக்கியம்!ஏன்னா,இனி உங்க எதிர்காலம் அவன் தான்!"

".............."

"இனி என்னோட உதவி உங்களுக்கு தேவைப்படாது!எல்லா பகையையும் விட்டுட்டு மற்றவங்களோட ஒண்ணா இருக்க முயற்சி பண்ணுங்க!உங்க வாழக்கையில,இன்னொரு பொண்ணு வர கடைசியா ஒரு வாய்ப்பு கொடுங்க!அதனால,உங்க பையன் முழுசா உங்களுக்கு திரும்ப கிடைப்பான்!யார் யாருக்கோ,எப்போதோ கொடுத்த வாக்கை நினைத்து வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்!சிலர் உங்க வாழ்க்கையை விட்டு நிரந்தரமா விலகிட்டாங்க!அந்த உண்மைை நீங்க புரிஞ்சிக்க முயற்சி பண்றது நல்லது!"-தன்னால் முடிந்த உபவாசத்தை கூறி நகர்ந்தாஏள் கீதா.அவன் மனதில் சுருக்கென தைத்தன அவளது வார்த்தைகள்!!

"ப்பா!"-விஷ்வாவின் குரலில் கலைந்தவன்,மீண்டும் அவனை இறுக அணைத்துக் கொண்டான்.

"ஏ...எங்கே கூட்டிட்டு போற?"-தன்னை தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றவளிடம் 5வது முறையாக வினவினான் சிவா.

"வாங்க மாமா!"-அவள் பதில் கூறுவதாய் இல்லை.

"ஓம்! ப்பூர் புவஸ்வஹா..."-என்று காயத்ரி மந்திரத்தை கூறியப்படி அவர்களின் எதிர் வந்தாள் தீக்ஷா.

"ஏ..ஏ...எங்கேடி சிவாவை இப்படி இழுத்துட்டு போற?"

"ம்..அமேசான் காட்டுக்கு!"-என்று அவள் மீண்டும் இழுக்க,அவளை தடுத்தான் சிவா.

"ஏ..இரு!இரு!"-என்றவன் தீக்ஷாவின் பாதம் பணிந்து,கரம் கூப்பி, கண்களை மூடினான்.அதன் பொருள் விளங்கியவள்,கரம் ஏந்திய ஆரத்தி தட்டில் இருந்த திருநீற்றை அவன் நெற்றியில் இட்டாள்.அவ்வளவு தான் தாமதம்!மீண்டும் அவனை இழுத்துக் கொண்டு சென்றாள் ஆராத்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.