(Reading time: 9 - 17 minutes)

நேராக அவனை தோட்டத்திற்கு இழுத்து சென்றாள்.

"ஓய்!நில்லு!"-அவன் தனது நடையை நிறுத்த,அவனது பலத்திற்கு கட்டுப்பட்டு அவளும் நின்றாள்.

"என்னாச்சு உனக்கு?"

"அங்கே பாருங்க!"

"எங்கே?"

"அங்கே!"-என்று எதிர் நின்ற மாமரத்தை சுட்டினாள்.

"ஐயே!இதைக் காட்ட தான் இப்படி இழுத்துட்டு வந்தியா?ப்பே..!"-என்று நகர முயன்றவனை தடுத்தாள் அவள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"மாமா!"

"என்ன?"

"அங்கே பாருங்க!"

"என்ன?"-அவள் சுட்டிய திசையில் கிளையில் ஒரு பட்டம் தொங்கிக் கொண்டிருந்தது.

"அது என் பட்டத்தை தர மாட்டுது!"-அவள் கூறியதும்,அவன் மேலும் கீழுமாக அவளை பார்த்தான்.

"என்ன?"

"நல்லா தானே இருக்க?"

"மாமா!"

"எனக்கு மரமெல்லாம் ஏற தெரியாது போ!"-அவன் மீண்டும் நகர பார்த்தான்.

"மாமா!உங்களை நம்பி இவ்வளவு பெரிய வேலை கொடுத்தா,முடியாதுன்னு போறீங்க?"

"இப்போ என்ன பண்ண சொல்ற?"

"எனக்கு அது வேணும்!"

"ம்..எப்படி எடுக்கிறது?"-சில நொடிகள் மரத்தையே உற்றுப் பார்த்தான் சிவா.

சற்று தொலைவில் அமர்ந்துக் கொண்டு அவர்கள் இருவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் கீதா.

"என்ன செய்ய போகிறான்?"-என்பது அவள் பார்வையின் பொருளாக அமைந்தது.

"உன் ரப்பர் பேண்டை கழற்றி கொடு!"

"ஆங்?"

"என்ன?சொத்தையா எழுதி கேட்டேன்?ரப்பர் பேண்ட் தானே?கழற்றிக் கொடு!"-அவள் சுணுங்கியப்படி தன் கேசம் கட்டுப்படுத்திய வஸ்துவை கழற்றி தந்தாள்.

நிலத்திலிருந்து சிறு கல்லை எடுத்தவன்,ஆராத்யா அளித்த வஸ்துவை வில்லாக்கி,அச்சிறு கல்லை அம்பாக்கி இர நொடிகள் குறிவைத்து இலக்கை நோக்கி கல்லை எய்த,அது,சரியாய் அப்பட்டத்தை மரத்தின் சிறைவாசத்திலிருந்து விடுவித்து நிலம் விழ வைத்து சுதந்திரம் அளித்தது.

"ஐ....யோ....!சூப்பர் மாமா!இன்னொருமுறை பண்ணுங்க!"

"ம்!"-என்று மீண்டும் ஒரு கல்லை எடுத்தவன்,

"ம்..எதை அடிக்கலாம்?"

"ம்..ஆ!அந்த சுவரில் வரைந்திருந்த பூ மேலே அடிங்க!"-கலைநயத்தோடு செதுக்கப்பட்டிருந்த சுவரை சுட்டினாள் அவள்.

"ம்..டீல்!"-என்று ஒரு விழியை மூடி அம்மலருக்கு கூறி வைத்தான் சிவா.

சில நொடிகள் கடந்தப்பின் கல்லை செலுத்தினான்.சரியாய் சீரான விசையில் பயணித்த சிறுக்கல் இலக்கை அடையும் முன் குறுக்கே வந்தார் ஒருவர்.அது சரியாய் அவரது நெற்றியை தாக்கியது.

"முருகா!"-வீடே அதிரும்வண்ணம் கத்தினார் அவர்.

"அப்பா!"-சட்டென திகைத்துப் போனான் சிவா.

இவற்றை சற்று தொலைவிலிருந்து கவனித்த கீதா சட்டென சிரித்துவிட்டாள்.

இரு நொடிகள் தான்,நிலை உணர்ந்தவளின் முகம் மீண்டும் இறுகியது.

"ஐயயோ!இப்படி மண்டையை உடைச்சிட்டீங்களே!"-மெல்ல நழுவினாள் ஆராத்யா.

"அம்மாடி!பெரிசா மாட்டிக்கிட்டேனே!"-விழி இமைக்காமல் திகைத்தவனை முறைத்தார் அவன் தந்தை.

"டேய்!"-முறைப்போடு கார்த்திகேயன் முனக,சிறு பிள்ளையை போல் முகபாவனையை மாற்றினான் சிவா.

"இங்கே வாடா!"-அவர் அழைக்க,இவன் மறுத்தான்.

"மாட்டேன்!"

"வாடா!"-மெல்ல அடிகளை எடுத்து வைத்து முன்னேறினான் அவன்.

"அப்பா!"

"ஏன்டா!உன் தொல்லை தாங்க முடியலைன்னு தானே இங்கே துரத்திவிட்டேன்.இங்கே வந்தும் உன் அட்டூழியம் அடங்கலையா?"

"அது..வந்துப்பா!"

"வந்து இறங்குன அன்னிக்கே என்னை கொல்ல பார்க்கிறீயே,என்ன பாவம்டா பண்ணேன் உனக்கு?"

"இல்லப்பா!நான் எங்கேயோ குறி வைத்தேன்.நீங்க தான் குறுக்கே..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.