(Reading time: 9 - 17 minutes)

"ண்றதை பண்ணிட்டு பழியை என் மேலே போடுறீயா?உன்னை..."-எதையோ கூற வந்தவர்,வார்த்தைகளை விழுங்கிவிட்டு,

"உன்னை தனியா கவனிச்சிக்கிறேன்."-என்று மீண்டும் முறைத்தார்.

அவன் அருகிலிருந்த ஆராத்யாவின் குறுகுறு பார்வை அவர் கவனத்தை ஈர்க்க புன்னகை பூத்தார்.

"ஆரா!எப்படிம்மா இருக்க?"-அவளோ பதில் அளிக்காமல் அவர் நெற்றியையே பார்த்தாள்.

"என்னம்மா?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"ரத்தம் வரலையே அங்கிள்!"-சட்டென அந்த வினாவால் தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டான் சிவா.

"கொலைக்கார பசங்க!ஏன் பேச மாட்ட?ஆயிரத்தெட்டு இருந்தாலும் என் நண்பனோட வளர்ப்பாச்சே!அவனை மாதிரி தானே குண்டக்க மண்டக்க புத்தி யோசிக்கும்!"

"ஆ...அப்பா!நீங்க டயர்டா இருப்பீங்க!நீங்க போய் முதல்ல ரெஸ்ட் எடுங்களேன்!"-என்ற தன் புதல்வனை மீண்டும் முறைத்துவிட்டு ஏதும் பேசாமல் நடந்தார் கார்த்திகேயன்.

"தெய்வமே!நல்லா கோர்த்து விடுற!"

"விடுங்க மாமா!எல்லாம் பழக்கப்பட்டது தானே!வாங்க போங்க!"-என்று அவனை சமாதானம் செய்து உள்ளே அழைத்து சென்றாள் ஆராத்யா.

ன்றிரவு...

தனது அறையில் அமர்ந்துக்கொண்டு தனக்கு பிடித்தமான பாடலை கேட்டுக் கொண்டிருந்தான் சிவா.

மனம் அமைதியடைய இசையின் பங்கு அவசியமானது.பெரும் தவசிகள் தவம் செய்து பெரும் அமைதியை இந்த இசை நொடியில் தந்துவிடுகிறது.கோபம்,தாபம்,ஏக்கம்,சோகம் அனைத்தையும் கடந்து இசை மனதிற்கு நிர்மூலமான நிம்மதியை அளிக்கிறது.எவருமற்ற நிலையில் மனிதனுக்கு உற்ற துணையாகவும்,சில சமயங்களில் மனித மனதில் நம்பிக்கையை விதைத்து பெரும் சரித்திரத்தை இயற்றவும் இசையானது தூண்டுக்கோலாக அமைகிறது.

விழிகள் மூடியப்படி அமைதியாக அப்பாடலின் துளிச்சுவையையும் விடாமல் இரசித்துக் கொண்டிருந்தான் சிவா.சில நொடிகள் சென்றிருக்கும் யாரோ தன் அனுமதியின்றி தன் ஹெட்செட்டை கழற்ற திடுக்கிட்டு விழி திறந்தான்.

"மா!"-ஆம்...!அது அவனது தாய் தான்!அவரை எந்த பெயர் கூறி அறிமுகப்படுத்துவது??அக்ஷயா என்றா??அல்லது பாரதி என்றா??(என்றோ சில பிரிய சகாக்கள் கார்த்திகேயனின் காதல் கரம் சேர்ந்ததா என்ற வினாவிற்கு விடை இதுவே!)

"என்னப்பா?இன்னும் தூங்கலையா?"-அவர் கேட்டது தான் தாமதம்,உடனடியாக அவர் மடிமேல் சிரம் பதித்தான் சிவா.

"தூங்கப் போறேன்!"-பாரதியின் கரம் தன்னிச்சையாக தன் புதல்வனின் சிரத்தை கோதியது.

"கீதாவை பார்த்தியா?"

"..............."

"பிடித்திருக்கா?"

"................"

"சொல்லுப்பா!"-என்னவென்று கூறுவான் அவள் மேல் கொண்ட காதலை??

"பிடிச்சிருக்கும்மா!"-ஒரே வரி பதில் மட்டுமே அளித்தான்.

"பேசுனீங்களா?"

"இல்லைம்மா!"

"ஏன்?"

"லைப் லாங்க் கூட தானே இருக்கப் போறா!அப்பறம் பேசிக்கிறேன்!"-பாரதியிடம் மெல்லியப் புன்னகை.தான் எப்படி வாழ்ந்தாரோ அப்படி ஒரு வாழ்வைக் குறித்து சிந்திக்கக்கூட தன் புதல்வனை அவர் அனுமதிக்கவில்லை.

"நிச்சயம் பண்ணிடலாமா?"

"............."

"சொல்லு!"

"கீதாவிடமும் கேட்டுக்கோங்க!"-அவன் கீதாவின் முடிவிற்கு முக்கியத்துவம் வழங்கினான்.

"சரி...நாளைக்கே இதைப் பற்றி கேட்கிறேன்!"

"திரும்ப ஆஸ்ரேலியா எப்போ போவோம்?வொர்க் எல்லாம் பென்டிங்ல இருக்கு!"

"இனி இந்தியா தான்!"

"மா??"

"ஆமா!அப்பா பர்மனன்ட்டா இந்தியா வந்துட்டார்!"-அவன் எழுந்தமர்ந்தான்.

"ஆனா...என்னால எப்படிம்மா??அங்கே எவ்வளவு வேலை இருக்கு?குறைந்தத ஆறு மாதமாவது ஆகுமே!"

"தெரியும்!கல்யாணம் முடிந்ததும் நீயும்,கீதாவும் கொஞ்ச நாள் ஆஸ்ரேலியாவுல இருங்க!எல்லா வேலையும் முடிந்ததும் இந்தியா வாங்க!"

"நீங்க இல்லாம.."

"என் இடத்துல கீதா இருப்பா!"-அவன் மறுப்போ,பதிலோ ஏதும் கூறவில்லை.நிம்மதியாக விழிகளை மூடிக்கொண்டான்.

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1070}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.