(Reading time: 25 - 50 minutes)

ன்ன ஆச்சரியம்!!!!!... சிலை எந்த வித இடையூறும் ஏற்படுத்தாது கோவிலுக்குள் பிரவேசிக்க, பிரஜாபதி தட்சரின் முகத்தில் புன்னகை ஜொலிக்க, சதியின் முகமோ, வாட்டத்தை பிரதிபலித்தது…

சிலை கோவிலின் உள்ளே நுழைந்து அதற்கான இடத்தில் நிறுத்தப்பட, மக்களும், அனைவரும் கையெடுத்து கும்பிட்டு கோஷங்கள் எழுப்ப,

மகிழ்வுடன் பரந்தாமனின் சிற்பத்தை பார்த்து வணங்கியவரின் கண்கள், சட்டென அதிர்ச்சியில் நிலைகுத்தி நிற்க,

“இல்லை……………..” என்ற கர்ஜனை அவரின் குரலாக வெளிவர, அனைவரும் திடுக்கிட்டு போயினர் ஒரு சில நிமிடங்கள்…

“யார் இந்த அனர்த்ததை புரிந்தது?... யார்?....”

அவர் குரல் கேட்டு அந்த இடமே அதிர, அனைவரும் பயந்து நடுங்கினர்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“கூறுங்கள்… யாரிந்த அனர்த்தத்திற்கு காரணம்?....”

அவர் குரல் மீண்டும் அதிர்ந்து ஒலிக்க,

“நான் தான் தந்தையே….” என்றாள் சதி….

குரல் வந்த திசையில் பார்த்தவர், தன் மகள் நிற்பதைப் பார்த்து புருவம் சுருக்கினார்…

“மகளே… சதி… என்ன கூறுகிறாய்?....”

“ஆம் தந்தையே… நான் தான்…”

“இல்லை……………………………………….”

பெருங்குரலெடுத்து அவர் கத்த, அவள் சட்டென அவரைப் பார்த்தாள்…

“பிரஜாபதி தட்சனின் மகளான என் சதி இந்த காரியத்தை செய்திருக்க சாத்தியமில்லை…. இந்த அனர்த்தத்தை செதுக்கியது அந்த சிற்பி தானே… அவன் தான்… அவன் தான் இதனைக்கொண்டு வந்து இதில் வைத்திருக்க வேண்டும்… அழைத்து வாருங்கள் அந்த சிற்பியை… அவனுக்கு தக்க தண்டனை காத்திருக்கிறது…”

“இல்லை தந்தையே… அவர் யாதொரு தவறும் செய்யவில்லை…”

“இல்லை மகளே… இந்த அனர்த்தத்தில் அவனின் கைவண்ணம் தான் தெரிகிறது… இதனை செதுக்கியது நிச்சயம் அவன் தான்… எனக்கு அதில் எந்த சந்தேகமுமில்லை… நீ அவன் செய்த தவறுக்கு பொறுப்பேற்க பார்க்கிறாயா மகளே…. யாரங்கே அவனை அழைத்து வாருங்கள்….”

அவர் கோபத்துடன் உத்தரவிட,

“தந்தையே… செதுக்கியது அவரா என்று எனக்குத் தெரியாது… ஆனால், இந்த சிவலிங்கத்தை நானே ஸ்ரீவிஷ்ணுவின் சிற்பத்தில் வைத்தேன்…. அதனால் தவறு அவருடை………”

அவள் சொல்லிக்கூட முடிக்கவில்லை…

“சதி……………………………………………………………………………………………………………” என அவர் கத்த, தேகம் பயத்தில் தூக்கிவாரிப்போட, முதுகுத்தண்டு சில்லிட்டது அவளுக்கு…

“அந்த பேரை இன்னொருமுறை கூறாதே… எப்படி அந்த பெயர் உனக்குத் தெரிந்தது?... உனக்கு அதை நான் கூறி வளர்க்கவில்லையே… பின்னே எப்படி நீ இந்த காரியத்தை செய்யத்துணிந்தாய்?... யார் கொடுத்த தைரியம் சதி?... என்னையே பலரின் முன்னிலையில் அவமானப்படுத்தியது என் சதியா?... நம்பமுடியவில்லை என்னால்……”

இருகரத்தினையும் விரித்து அவர் கூற, அவளின் விழிகளிலோ நீர் திரண்டுவிட்டது வேகமாய்….

“நிச்சயம்… இதனை நீயாய் செய்திருக்க வாய்ப்பில்லை…. யார் சொல்லி செய்தாய்?... கூறு சதி?... யார் இதற்கு காரணம்?.. உன் மனதில் இப்படி ஒரு நஞ்சை விதைத்து உன்னை மாற்றியது யார்?...”

அவர் கேட்க கேட்க, அவள் அமைதியாக இருந்தாள் கைகளை இறுக பிசைந்த வண்ணம்…

“கூறு………………………” அவர் கத்த, அவள் தனது கரங்களை சட்டென கீழே விட்டாள்…

மகளின் அந்த நிலை அவருக்கு ஒருபுறம் வேதனை தர, மறுபுறம் மகளின் மனதில் இப்படி ஒரு மாற்றத்தை விதைத்தது யார் என்று தெரிந்து கொள்ள எண்ணினார் அவர்….

அப்போது “பிரஜாபதி தட்சரே….” என்ற குரல் கேட்க, திரும்பி பார்த்த பிரஜாபதி ஒரு வெற்றுப்புன்னகை சிந்தினார் வந்தவர்களைப் பார்த்து…

“சதியின் மேல் கோபம் கொள்ள வேண்டாம்… உண்மை நிலையை நானே அவளுக்கு எடுத்துரைத்தேன்… அதனால் அவள் சத்தியத்தின் வழி நடந்து கொண்டாள்… அவ்வளவே…”

“வாருங்கள் தேவமகரிஷி…. தாம் எனது எதிரியின் ஆளாக இருந்த போதும், உங்களின் மேல் எப்போதும் எனக்கு ஓர் மரியாதை உண்டு… அது என்னவெனில், என்றும் தாங்கள் நான் செய்யும் காரியங்களில் தலையிட்டதோ, குறுக்கிட்டதோ கிடையாது.... ஆனால் இன்றோ…….”

என பிரஜாபதி சொல்ல, தேவமகரிஷியின் முகத்திலோ புன்னகை தவழ்ந்தது…

“இந்த பிரஜாபதி தட்சன் மகளின் மனதை கலைத்தது தாம் தானா?... எதற்காக இப்படி ஒரு துர்தூபத்தை என் மகளின் மனதில் விதைத்தீர்கள்?...”

“எதைத் தாம் துர்தூபம் என்கிறீர்கள் பிரஜாபதி?... சத்தியத்தை உரைத்ததையா?... இல்லை இறைவனின் ஸ்தானத்தைப் பற்றி கூறியதையா?...” என்று கேட்டதும், கோபத்தின் உச்சிக்கே சென்றார் பிரஜாபதி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.