(Reading time: 25 - 50 minutes)

றைவன் முதன் முதலில் உயிர்களைப் படைத்து உருவாக்கிய உலகம் தான் அது…

படைக்கும் செயல் பிரம்மனுக்குரியது என்பார்கள்…. ஆம், அதன்படி உயிர்களை உருவாக்க ஆரம்பித்தார் மூம்மூர்த்திகளுள் ஒருவரான அந்த பிரம்மா…

பிரம்மனும் தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை திறன்பட செய்து ஓர் உலகத்தினை உருவாக்கி, உயிர்களை அதில் படைத்திட, மெல்ல மெல்ல உயிரினங்கள் பெருகியது அங்கே….

அதன் பின்னர் மனிதர்களையும் தோற்றுவித்து சந்ததிகளை நீள வைத்தார் பிரம்மா…

அப்போது, தனது அம்சத்தினையே அவர் படைத்திட, அவருக்கு பிரம்மதேவன் என்ற பெயரையும் சூட்டி, தன் திறன் யாவையும் அவருக்கும் கொடுத்திட்டார்…

மூம்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவின் பூரண அருளைப் பெற்றிருந்தார் பிரஜாபதி தட்சனின் தந்தை பிரம்மதேவன்….

மூம்மூர்த்தி பிரம்மதேவர் வேறு, தமது தந்தை பிரம்மதேவன் வேறு என்று ஒருநாளும் எண்ணியதில்லை பிரஜாபதி தட்சன்…

தட்சனின் தந்தையாகிய பிரம்மதேவனுக்கு ஓர் நகரத்தை உருவாக்கும் ஆற்றல் இருந்தது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அந்த படைப்பு திறனை அவர் தனது மகனுக்கு கற்றுக்கொடுக்க,

பிரம்மாபுரம் என்ற ஒரு தனி ராஜ்ஜியத்தை உருவாக்கினார் பிரஜாபதி…

அதில் ஓர் கர்வம் எப்போதும் உண்டு பிரஜாபதிக்கு… அந்த பிரம்மாபுரம் உலகத்தினை உருவாக்கியவன் தான் தான் என்ற அகங்காரமும் அவருக்கு உண்டு….

எனினும், காக்கும் கடவுளான விஷ்ணுவை தன் முழுமுதற்கடவுளாக பாவித்து வணங்கிடும் பிரஜாபதிக்கு ஏனோ நினைவு தெரிந்த நாளிலிருந்து சிவனை பிடித்ததில்லை…

சிவபெருமான், மூம்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மதேவரின் ஐந்தாவது தலையை கொய்தவர் என்ற காரணத்தினாலும்,

தான் தான் எல்லாம் என்ற அகங்காரம் கொண்டவன் தான் சிவன், அவனை நான் ஏன் வணங்க வேண்டும் என்ற கோபத்தினாலும், அவருக்கு சிவபெருமானின் மீது வெறுப்பு ஏற்பட்டது…

அது மட்டுமின்றி, சிவபெருமானை வணக்கத்திற்குரியவராக தனது தந்தை பிரம்மதேவன் போற்றுவதும் பிரஜாபதிக்கு பிடித்தமான ஒன்றாக இல்லை… அதனால் முடிந்த மட்டும் சிவ நாமங்களை உச்சரிப்பதையும், ஈசன் என்ற சக்தியையே மறந்தவனாய் அவர் செயல்பட ஆரம்பித்து தன் உலகத்தை உருவாக்கினார்…

எனினும், மூலப்பொருள் இன்றி எதுவும் கிடையாதே… அதை உணராதவராய் அகங்காரத்துடனும், தலைக்கணத்துடனும் வாழ்ந்து கொண்டிருந்தார் பிரஜாபதி….

அதை ஈசன் உணர்த்த எண்ணினாரோ….. இல்லை, பிரம்மாவும், திருமாலும் அவரை வேண்டிக் கேட்டுக்கொண்டனரோ…

சில வருடங்களுக்குப் பிறகு, கயிலாயபுரம் என்ற நகரை ஆண்டு வந்த மன்னன் கயிலாதநாதன், ஊரின் எல்லையில் இருக்கும் ஆளுயர சிவனின் சிலைக்கு அர்ச்சனைக்கு செய்ய மலைக்கு சென்ற வேளை, அங்கே ஓர் பச்சிளங்குழந்தை ஆளுயர சிவனின் சிலையின் அடியில் கிடக்க, ஈசனே தனக்கு குழந்தையை அருளினார் என்று உள்ளம் மகிழ்ந்து போனார் அவர்…

குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்த அவருக்கு வயது இருபத்தைந்து தான்… இளம் வயதிலேயே, திருமணத்தில் பற்றில்லாமல் இருந்தவரின் கைகளில் குழந்தை கிடைத்ததும், திருமண எண்ணத்தையே கைவிட்டுவிட்டார் அவர்…

குழந்தையை சிரத்தையுடன் வளர்த்தவர், அவனையே தான் வணங்கும் ஈசனாகவும் வணங்க, மக்களும் அக்குழந்தையை ஈசனாகவே பாவித்தனர்…

யாரின் மனதில் துன்பம் இருந்தபோதும், அக்குழந்தையின் மழலை பேச்சும், தொடுகையும், அதனை இருந்த இடம் தெரியாமல் அகற்றிடும்….

ஈசனே குழந்தை ரூபத்தில் அவதரித்ததாகவே எண்ணினர் கயிலாயபுரத்தின் மக்கள்…

அது பிரஜாபதியின் காதுகளிலும் விழத் தவறவில்லை… எனினும் அதனை செவி கொடுத்து மேற்கொண்டும் கேட்டிட அவர் விரும்பவும் இல்லை…

ஆனாலும் சிவனின் மீது கொண்டிருந்த வெறுப்பு, சிவனின் அம்சமாக போற்றப்படும் அக்குழந்தையின் மீதும் அவருக்கு இருந்தது தான் உண்மை எனலாம்…

அதனாலேயே தன் விரோதியாகவும், எதிரியாகவும் கயிலாயபுர இளவரசனை பாவித்தார்…

சதிக்கு சிவன் என்ற ஒரு கடவுள் இருப்பதையே மறைத்து ஸ்ரீவிஷ்ணுவின் நாமத்தையே புகட்டினார் அணுதினமும்…

அவளும் அதனோடே வளர, இன்று அவள் செய்த செயலை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை….

ஒரு கோபத்தில் வேண்டு என்று அவர் கூற, நிஜமாகவே மகள் வேண்டிடுவாள் என்று அறியாது திணறி நின்றார் அவர்….

அவள் மனமுருகி வேண்டிட, சற்று நேரத்திலேயே, காற்று பலமாக வீச ஆரம்பிக்க, அனைவரும் திகைத்தனர்…

சில நாழிகைகளுக்குள் புகையாக புழுதி எழும்ப, வாசலை பார்த்தனர் மக்கள் அனைவரும்…

பிரஜாபதியோ நடப்பதை சினத்துடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் வெறுப்புடன்…..

குதிரை கனைக்கும் சத்தம் கேட்டதும், தேவமகரிஷியின் முகத்தில் புன்னகை தவழ அவர் விழிகளை திறக்க,,. அவரது சீடர்களோ சந்தோஷத்துடன் கோஷங்களை எழுப்பினர்….

சத்தம் கேட்டு, கண்களைத் திறந்த சதியின் பார்வை வாசலில் நிலைக்க, அங்கே வெள்ளை பனி போன்று புழுதியின் மத்தியில் நின்று கொண்டிருப்பவனை காண, மெல்ல அங்கே சென்றாள் அவள்… ஆடிப்பாடிக்கொண்டிருந்த தேவமகரிஷியின் சீடர்களை கடந்து சென்று….

புழுதி மறைந்து, இடையிலிருந்து முழங்கால் வரை நீண்டிருந்த ஆடையும், மார்பின் குறுக்கே வீற்றியிருந்த ஓர் லேசான ஆடையும், நீண்டிருந்த தலைமுடியும், கழுத்தில் சர்ப்பத்தினையும், கைகளில் திரிசூலத்தினையும் தாங்கி, முகம் எங்கும் நிறைந்திருந்த தேஜஸுடனும் நின்றிருந்தவனின் விழிகள் சட்டென திறக்க, சதியின் விழிகளிலோ நீர் திரண்டு கன்னம் தொட, அவளது மனக்கதவோ பட்டென திறந்து கொண்டது வேகமாய்…

Episode 34

Episode 36

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.