(Reading time: 14 - 27 minutes)

ன் பிராயசித்தத்தை நான் சித்தத்துடன் நிறைவேற்றுவேன் தந்தையே… இது எமது வாக்காகும்…”

சதி தீர்மானத்தோடு கூற,

“இன்னொரு நிபந்தனையும் இருக்கிறது…” என்றார் பிரஜாபதி…

அனைவரும் அது என்ன என்று யோசிக்கையிலே,

“எக்காரணம் கொண்டும், அந்த மகாதேவனை இனி நீ நினைக்கக்கூடாது… உன் மனதில் அவனைப் பற்றிய எண்ணங்கள் வந்திட நீ அனுமதித்திடவும் கூடாது… அவன் நாமம், அவன், எதுவுமே உன் சிந்தையில் இனி இருக்கக்கூடாது…”

“ஆகட்டும் தந்தையே… இனி அவரை நான் என் கனவிலும் நினையேன்….”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவள் உதட்டிலிருந்து இந்த வார்த்தைகள் வெளியேறியபோது, அவளது மனம் பெரும் சங்கடத்திற்கு ஆட்பட்டது ஏனோ… அப்போது அவள் இருந்த நிலையில் அதனை அவள் எண்ணமும் கண்டுகொள்ளவில்லை…

வேகமாக அந்த அரசவையை விட்டு அவள் வெளியேற, அவள் செல்லும் திசையையே பார்த்திருந்தவர், சிற்பியை அழைத்துவர சொன்னவர்களைப் பற்றி விசாரித்தார்…

“மன்னிக்கவும் பிரஜாபதி…. சிற்பி இந்த நாட்டை விட்டே ஓடி விட்டான்…”

பணியாட்கள் மெல்ல கூற,

“துரோகி…. அவனைச் சார்ந்தவர்கள் அனைவரையும் இங்கே அழைத்துவாருங்கள்… செல்லுங்கள்…” என உத்தரவிட்டார் அவர் ஆத்திரத்துடன்…

தே நேரம், அந்த அடர்ந்த வனத்திற்குள் சென்று கொண்டிருந்தாள் சதி…

தென்படும் மலர்களை எல்லாம் சேகரித்துக்கொண்டே வந்தவள், நடந்து சென்று கொண்டிருந்த போது, அதுநாள் வரை அவளது பாதசுவடுகளைக் கண்டிராத பாதைகள், விரிந்து கொடுக்க, முட்களோ, தன் பங்கிற்கு அவளை வரவேற்றது… தன் கூரிய பற்களோடு…

சுருக்கென்று காலில் வலி எடுக்க, ஆ… என்று கத்தியவளின் குரல் கேட்டு பணிப்பெண்கள் அவளருகில் வர, அவளது பாதத்தில் முள் ஒன்று தைத்திருக்க, அது அவளது குருதியை வெளிக்கொண்டு வந்திருந்தது உடனேயே…

மெல்ல அந்த முள்ளை, எடுத்த பணிப்பெண், சதியை பரிதாபமாக பார்க்க, சதியோ புன்னகைத்தாள்…

காடு, மேடு, தாண்டி குளம் குளமாக சென்று மலர்களை சேகரித்துக்கொண்டிருந்தனர் மூவரும்…

“இனி இங்கே கண்ணுக்கு எட்டிய வரை மலர்களே கிடையாது… பல மைல் தொலைவு சென்றால் இருக்கலாம்…’

பணிப்பெண்களில் ஒருத்தி மிகுந்த களைப்புடன் கூற, சதி அவளைப்பார்த்தாள்…

நேரமும் மாலையாக தொடங்கியிருக்க, “நீங்கள் இருவரும் அரண்மனைக்கு திரும்புங்கள்… நான் தொலைவில் உள்ள மலர்களையும் சேகரித்து வருகின்றேன்…”

“இல்லை இளவரசி… தாங்கள் இல்லாமல் நாங்கள் இருவரும் அரண்மனை செல்ல மாட்டோம்…”

பணிப்பெண்கள் இருவரும் உடனேயே மறுக்க,

“நான் தான் கூறுகிறேன் அல்லவா… இருவரும் செல்லுங்கள்… ஏற்கனவே உனக்கு முடியவில்லை… இதில் நீ அவ்வளவு தொலைவு வரவேண்டாம்…”

“இல்லை… தேவி… நான்….”

“மறுத்து எதுவும் பேசாதே… இது என் ஆணை… எனக்கு உதவி செய்யத்தானே வந்தீர்கள்… எனில் நான் வேண்டும் உதவியும் இதுவே… திரும்புங்கள் அரண்மனைக்கு…..”

அவள் உத்தரவிட, அவர்கள் இருவரும் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்தனர்…

“தேவி… சீக்கிரம் வந்துவிடுங்கள் தேவி… சற்று தாமதமானாலும் இருட்டி விடும்…”

“ஆகட்டும்… நீங்கள் செல்லுங்கள்…”

சரி என்று அவர்கள் நகர்ந்த போது, நடக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த பணிப்பெண்ணின் தோளில் இருந்த அந்த மூட்டையை சதி வாங்கிக்கொண்டாள், அந்த பெண் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல்…

ன்ன அக்கா இது?... நம் சதி இன்னும் அரண்மனை திரும்பவில்லையே….”

சதியின் சகோதரிகளில் ஒருத்தி புலம்பிக்கொண்டிருக்க,

“அவளைத்தான் நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்… நேரம் வேறு போய்க்கொண்டிருக்கிறது….” என்றாள் மற்றொருத்தி…

“இப்போது என்ன செய்வது?....” என்ற பயத்துடன் சதியின் சகோதரிகள் வாசலைப் பார்த்தபோது பணிப்பெண்கள் இருவரும் வந்து கொண்டிருந்தனர்…

“அக்கா… அங்கே பாருங்கள்… அவர்கள் வந்துவிட்டார்கள்…”

“இவர்கள் இருவரும் தானே வருகிறார்கள்… சதி வரவில்லையே….”

“ஆமாம் அக்கா… சதியைக் காணோமே…”

பணிப்பெண்கள் மரியாதையுடன் அவர்கள் இருவருக்கும் தங்களது வணக்கத்தை தெரிவிக்க,

“சதி எங்கே… நீங்கள் மட்டும் வந்திருக்கிறீர்கள்?...”

சதியின் சகோதரி கேட்ட கேள்விக்கு நடந்த நிகழ்வைக்கூறினர் பணிப்பெண்கள்…

அதனால் கோபமடைந்த சதியின் சகோதரி, அவர்களைத் திட்ட ஆரம்பிக்க,

“எங்களால் எதுவும் செய்ய இயலாது போயிற்று… மன்னித்துவிடுங்கள்… இப்பொழுதே ஆதவன் மறையத் தொடங்கி விட்டான் முற்றிலுமாய்…. இன்னும் சில கணங்கள் தாமதித்தாலும், ஆபத்து தான்… இளவரசி அங்கிருந்து கிளம்பியிருந்தால் இந்நேரம் இங்கு வந்து சேர்ந்திருப்பார்… இனி அவர் வந்தாலும் வரும் வழியில் அந்த இருளில் இங்கு வந்து சேருவது சாத்தியமன்று….”

பணிப்பெண்களில் ஒருத்தி, தன் பயத்தினை வெளிப்படுத்த,

“என்ன கூறுகிறீர்கள்?... என் சதி வரவில்லையா?....” என்று பதறியபடி வந்தார் பிரசுதி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.