(Reading time: 14 - 27 minutes)

ம்… அன்னையே… நம் சதி வரவில்லை… எனக்கு பயமாக இருக்கிறது அன்னையே…”

பெற்றவளின் உள்ளமும் பதறத்தான் செய்தது… இருள் பரவ தொடங்க ஆரம்பிக்க, அவரது அடிநெஞ்சில் பயம் ஆக்கிரமித்தது முழுமையாய்…

“உடனடியாய், பிரஜாபதியிடம் இந்த தகவலை கூறுவோம்… வாருங்கள்…”

பிரசுதி தன் மகள்களை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கே அரண்மனையில் ஒருவித கோபத்துடன் அமர்ந்திருந்தார் பிரஜாபதி…

“தாங்கள் இழைத்தது தான் மாபெரும் தவறு பிரஜாபதி… தேவி என்ன தவறு செய்துவிட்டாள் என்று தாங்கள் இப்படி ஒரு தண்டனையை அவளுக்கு இப்படி ஒரு தண்டனையை வழங்கி இருக்கிறீர்கள்?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

தேவமகரிஷி சினத்துடன் பிரஜாபதியிடம் கேட்டுக்கொண்டிருக்க,

அப்போது அங்கே வந்த பிரசுதி, எப்படி அந்த தகவலை அரசரிடம் கூற என்று திணறிக்கொண்டிருந்த போது,

எதேச்சையாக தட்சேஷ்வர் மனைவியைப் பார்க்க,

“சுவாமி…. நம் மகள் சதி….” என்று ஆரம்பித்தவர், தட்சேஷ்வரின் பார்வை செல்லும் திசையை உணர்ந்து அங்கே பார்த்தார்…

பார்த்ததும் உயிரே அற்றுப் போனது பிரசுதிக்கு… சதி தன் தோளில் இருந்த சுமையை தாங்கிக்கொண்டு முகம் எங்கும் சோர்வுடன், உடல் எங்கும் அசதியுடன், மெதுவாக நடந்துவர,

தட்சேஷ்வருக்கு மனம் கலங்கியது… எனினும் அவர் அமைதியாக இருக்க,

“பிரஜாபதி தட்சரே… தாங்கள் செய்வது மாபெரும் கொடுமை… அறியாமல் செய்த ஒரு செயலுக்கு தேவி பொறுப்பில்லை என்பதனை தாங்கள் எப்போது தான் உணரப்போகிறீர்கள்?... உடனடியாக தங்களின் நிபந்தனைகளை தளர்த்துங்கள்…”

தேவமகரிஷி ஆற்றாமையுடன் கூற,

“என் தந்தை செய்தது முற்றிலும் சரியே… அதில் யாதொரு தவறும் இல்லை… தாம் எனது தந்தையை குறை கூறுவதை யாம் அனுமதிக்கமாட்டோம்…”

சதி குரலில் களைப்புடன் கூற, அதைக் கேட்ட தட்சேஷ்வருக்கோ, மனம் ஒருநிலையில் இல்லை…

“இந்த நிலையிலும் தங்களை விட்டுக்கொடுக்காமல் பேசும் மகளை இந்த நிலையில் பார்க்க எப்படி தங்களுக்கு மனம் வந்தது பிரஜாபதி தட்சரே…”

“அவள் செய்த செயலின் பலனைத்தான் அவள் அனுபவித்துக்கொண்டிருக்கிறாள்… சிலரின் துர்தூபம் இனி என் மகளின் செவிக்கு எட்டிடாமல் இருக்கவே, அவள் இத்தனை வேதனைகளையும் தாங்க நேர்கிறது… இது அனைத்துமே என்னால் அல்ல… தங்களால் ஏற்பட்டவை தான்…”

“நீங்கள் மட்டும், சிவலிங்கத்தினை ஸ்ரீவிஷ்ணுவின் சிலையில் முன்பே பிரதிஷ்டை செய்திருந்தால், இது எதற்குமே இடம் இருந்திருக்காதே… ஆகவே அனைத்தும் தங்களால் தான்… அதைத் தாம் மறந்திட வேண்டாம்…”

“அனைத்துமே என்னால்… நான் செய்யப்போகும் செயல், என் தந்தையின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தாது என்றெண்ணியே நான் அதனை செய்தேன்… எனினும், என் தந்தையின் மனதிற்கு நான் தீராத காயத்தை ஏற்படுத்திவிட்டேன்… அதனை சரி செய்யும் பணியிலேயே, நான் இன்று இந்த மலர்களை சேகரித்து வந்தேன்… இனி வரும் நாளும் இதுபோல சேகரித்து, என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்கினை நிறைவேற்றியே தீருவே………..ன்…………..”

சொன்னவள் சட்டென நிலத்தில் தன்னிலை மறந்து வீழ, அவள் சேகரித்து வந்திருந்த மலர்களும் அவளைப் போலவே நிலத்தில் விழுந்தன…

பிரஜாபதி இருக்கையிலிருந்து எழுந்துகொள்ள, பிரசுதியோ அதிர்ச்சியிலிருந்து மீளாதவராய் இருந்திட,

தேவமகரிஷி மட்டும் சதியின் பக்கம் விரைந்து செல்ல முயன்ற போது,

“அங்கேயே நில்லுங்கள்… யாருடைய உதவியும் எனக்கு தேவையில்லை…” என கண்களைத் திறக்க கடினப்பட்டவளாய், மெல்ல மெல்ல திறந்து, எழுந்து கொண்டவள், தனது மலர்களையும் எடுத்துக்கொண்டு, மெல்ல அங்கிருந்து வெளியேற, அவையில் அப்படி ஒரு அமைதி நிலவியது…

தனதறைக்கு வந்தவள், அப்படியே நிலத்தில் தன் உடலை சாய்க்க, களைப்பு வந்து அவளின் கண்களை மூட உதவியது சட்டென…

சுயநிலை அடைந்த பிரசுதி, மகளின் அறைக்கு ஓடிவர, அங்கே அவர் கண்ட காட்சியில் அவரின் மனம் சொல்லொணாத்துயரம் கொண்டது அதிகமாய்…

Episode 36

Episode 38

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.