(Reading time: 7 - 14 minutes)

"துவரைக்கும் ஃப்ரண்ட்ஸா இருக்கலாம்!"-அவன் முயற்சி செய்தான்!அவன் மனதை மறைக்க எவ்வளவோ முயற்சித்தான்!ஆனால்,அவையாவும் தோல்வியடைந்தன.அவள் அவனது மனதினை சுலபமாக படித்துவிட்டாள்.

"சி..சிவா!ஐ..ஆம் ஸாரி!"

"எதுக்கு?"-அவள் பேசவில்லை.மௌனமே சரணமாய் நின்றாள்!!

"ஏ..கம் ஆன்!நான் ஆஸ்ரேலியாவுல வளர்ந்தவன்!எனக்கு இதெல்லாம் சாதாரணமாக தெரியுது!நான் எதுவும் வருத்தப்படலை!ம்...ஒரு மூணு மாசம் வெயிட் பண்ணு!ஜெஸ்ட் த்ரி மந்த்ஸ்!அப்பறம்,நீ சுதந்திரமா வாழலாம்!ஓகே.??"-அவள் மெல்ல கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

அவள் அறிவாள்!அவனைக் குறித்து,அவன் மனநிலையைக் குறித்தும் அவள் நன்கறிவாள்!!இப்போது அவன் கூறும் கலாச்சார சமாதானம் வெறும் பொய் என்றும் அவள் அறிவாள்!!எனினும்,உபாயம் வேறில்லை!!இருக்கட்டும்!!இன்னும் மூன்று மாதக் காலம் அவகாசம் இருக்கிறதே!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

றுநாள் காலை....

தனது உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் சிவா.

"மாமா!நீங்க அவசியம் போகணுமா?நேற்று தானே கல்யாணம் ஆச்சு?"

"ஆமாதான்!அதுக்காக என் பேஷண்ட்ஸ் சும்மா இருப்பாங்களா?இரண்டு பேர் சீரியஸா இருக்காங்களாம்!நீ உடனே வந்தாகணும்டான்னு போன் வந்துடுச்சு!நான் என்ன செய்யட்டும்?"

"ப்ச்..அக்காவை ரொம்ப மிஸ் பண்ணுவேன்!"

"வேணும்னா!உன் அக்காவை இங்கேயே விட்டுட்டு போறேன்!"

"ம்..வேணாம் வேணாம்!உங்க பாவம் எனக்கு எதுக்கு?நீங்க கூட்டிட்டு போங்க!"-என்றாள் வேண்டா வெறுப்பாக!!

"பேசாம நீ அங்கே வந்துடு!"

"வேணாம்!"

"வேற என்ன பண்ணலாம்?"

"சீக்கிரம் இங்கே வந்துடுங்க!"

"அங்கே சிட்டிசன்ஷிப் கேன்சல் ஆன உடனே வந்துடுறேன்!சரியா?"

"ம்..."

"குட் கேர்ள்!"

"ப்ச்...சரி!இன்னிக்கு அப்போ என் கூட வந்து ஊர் சுற்றுங்க!"

"ஊர் சுற்றணுமா??நான் வரலை தாயி..!"

"வாங்க மாமா ப்ளீஸ்...!"

"ம்...சரி இரு!பேக் பண்ணிட்டு வந்துடுறேன்!"-எவ்வளவு அழகாக நடிக்கிறான்??தன் மனவலிகளை உள்ளடக்கி வெளியே ஆனந்தமாக திரியும் மார்க்கம் ஆண்களுக்கான தனச்சிறப்பு தான் போலும்!!

"ச்சீப்!விக்ரம் சார் ரிட்டையர் ஆகிட்டதால,அடுத்ததா மேனேஜர் போஸ்ட்க்கு 4 பேர் இருக்காங்க!"

"யார் யாரு?"

"இந்த ஃப்பைல்ல டிடைல்ஸ் இருக்கு ச்சீப்!"-ஒரு கோப்பையை ருத்ராவிடம் நீட்டினான் மனோ.

அதை வாங்கி சில நொடிகள் திருப்பியவன்,பின்,அதை மூடி வைத்தான்.

"ராம்குமார் தான் இதுல எக்ஸ்பிரியன்ஸ் அதிகமானவர் ச்சீப்!"

"மேனேஜர் போஸ்டிங்கை....பார்வதிக்கு கொடு!"-பட்டென அவன் கூறியதும் உரைந்துப் போனான் மனோ.

"ச்சீப்??"

"வொர்க்ல அவ இன்வால்மண்ட்டை நோட் பண்ணிருக்கேன்!எக்ஸ்பிரியன்ஸை விட இன்வால்மண்ட் பெரிசுன்னு நிருபிச்சிட்டா!மேனேஜர் போஸ்ட்டை அவளுக்கே கொடு!லெட் மீ வாட்ச் அவ் ஷி பர்பார்ம்!"

"ஓ.கே.ச்சீப்!"-என்றவன் வெளியே நகர்ந்தான்.

மனோ பிரிந்ததும் தனது கணினியில் கவனம் பதித்தான் ருத்ரா.

சில நிமிடங்கள் தான்...

அவனது கைப்பேசி அலறியது!!

"ஹலோ!"

"அப்பா!"

"என்னப்பா?"

"எப்போ வீட்டுக்கு வருவீங்கப்பா?"

"இதோ பத்தே நிமிஷம்!அப்பா வந்துடுவேன் சரியா?"

"ம்..ஓ.கே.!"-அவ்வளவு தான் அனைத்து வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு இல்லத்திற்கு கிளம்பினான் ருத்ரா.

மிக பெரிய மாற்றம் தான்!!இயந்திரமாய் உழன்றுக் கொண்டிருந்த அவன் இருதயத்தில் ஈரம் சுரந்தது உண்மையில் மிகப்பெரிய மாற்றமே!!

"பார்வதி!"

"சார்?"

"வீட்டுக்கு கிளம்புறேன்!கொட்டேஷனை மெயில் பண்ணிடு!"

"எஸ் சார்!"-என்றும் இல்லாமல் சமீப காலமாய் அவன் முகம் கொள்ளும் புத்துணர்வு,பொறுமை அவள் மனதில் எதையோ ஆழமாய் விதைத்துக் கொண்டிருந்தது.

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1070}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.