(Reading time: 39 - 78 minutes)

திருமணமாகி சில வருடமாவது கணவனுடன் வாழ்ந்து குழந்தைக்கும் பெரிதாய் ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கே இந்த ஸ்கேன் எப்படி இருக்குமோ….? குழந்தைக்காக என தாங்க முடியுமாய் இருக்கலாம்…..

இவளோ கன்னியல்லவா…..? உடை மாற்றும் முன்  ஒன்றுக்கு இரண்டு முறை ஜன்னல் கர்டெயின்ஸ் ஒழுங்காக இழுத்துவிட்டிருக்கிறதா என சோதித்துவிட்டு….தன்னை தானே கூட பார்க்காது செயல்படும் ஒழுக்க முறை மனது வேறு…..

இதில் ஸ்கேன் என்ற பெயரில்  ஸ்கேனின் ட்ரான்ஸ்ட்யூசர் கருவியால் அவள் கன்னிமை கோடு தாண்டப்பட… முற்றிலும் இதை எதிர்பாராதவள் தானே தனக்கு அனுமதித்துக் கொண்ட இந்த பலவந்தத்தை மனதளவில் எப்படி அனுபவிக்க எனவும் தெரியாமல், அலறி தவிர்க்கவும் முடியாமல் முழு மொத்த அதிர்ச்சியோடு மானசீகமாய் கழுவிலேறிய நேரம்….

“கல்யாணம் ஆகாத பொண்ணாமா நீ…?  அப்டின்னா நம்ம நாட்ல இந்த டெஸ்ட் செய்யவே மாட்டோமேமா…..அப்டி என்ன எமெர்ஜென்சி இது செய்ய…?” என  ஸ்கேன் செய்த டாக்டர் வேறு கேட்க….

செய்யக் கூடாத ஒன்றை செய்துவிட்டதாக  இவள் இன்னுமாய் உணர்ந்து மிரண்டாள்….

அந்த டாக்டர்  இப்போது இவள் மெடிகல் ஃபைலை எடுத்துக் கொண்டு விலகிச் சென்றார்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்..

அடுத்து யாருக்கோ  ஃபோன் செய்து…. எதோ கொஞ்சம் பேசிய பின் அவர் சொன்ன “மேரிட்னா கூட ஓகே…..இது பார்க்கவே பாவமா இருக்கு…..இவள நாளைக்கு யார் மேரேஜ் செய்துப்பா….. டெலிவரி ஆனதெல்லாம் மறச்சா மேரேஜ் செய்ய முடியும்…?” இவள் காதில் விழுகிறது…

ரியாவின் மொத்த உலகமும் இடிந்து விழுந்தது இங்கு….

எது எப்படியானாலும்… எதிர்காலத்தில்  அவளுக்கே அவளுக்கென வரப் போகும் கணவனும் குழந்தைகளும்தான் இந்நாள் வரை அவளது ஒரே  நம்பிக்கை… கனவு.. ஆசை…  லட்சியம் எல்லாம்….. அவளது முழு உரிமையுள்ள குடும்பம்….. அதுவே இல்லாமல் போக போகிறதா? ஆம் ஒரு படித்த டாக்டரே……இது என்ன என தெரிந்த டாக்டரே இப்படி யோசிக்கிறப்ப….யார் இதெல்லாம் புரிஞ்சு இவள ஏத்துப்பாங்களாம்? இதெல்லாம் இவ ஏன் சம்மதிக்கும் முன்னால யோசிக்கவே இல்ல….?

அழக் கூடாது என இவள் ப்ரயத்தனம் செய்து அடக்கி இருந்ததையும் மீறி கண் ஓரம் வழிந்த ஒற்றைக் கோட்டு நீரோடு “ இந்த ப்ரெக்னென்சிய எல்லோரும் தப்பாதான் நினைப்பாங்களா டாக்டர்? “ என்று இவள் கேட்ட கேள்வியில் டாக்டர் முகத்தில் தாய்மையோடு புன்னகை…

“அப்டில்லாம் எதுவும் இல்லமா….. இதுல தப்பா என்ன இருக்குது…? ஆனா உடம்பு போய்டுமே…. ப்ரசவம்ன்றது மறு பிழைப்புன்னு சொல்லி கேட்டதில்லையா…..என்னதான் பார்த்துகிட்டாலும்…..குழந்தை பிறக்கிறதுக்கு முன்ன இருந்த உடம்பு கண்டிப்பா டெலிவரிக்கு அப்றம் வர போறது இல்லையே….. அப்டிபட்ட பொண்ண மேரேஜ் செய்றவங்களும் யோசிப்பாங்கல்ல…” என  சமாதானம் சொன்னார் அவர்… அவர் ஃபோனில் பேசியது இவள் காதில் விழும் என அவர் எதிர்பார்க்கவில்லை போலும்…

“அதெல்லாம் எதுக்கு யோசிக்க…..இப்ப எதுக்கு இந்த ப்ரசவத்துக்கு ஒத்துகிட்ட…… ? வீட்ல உன் அம்மா அப்பா அண்ணானு யாருக்கும் உடம்பு முடியலையா…? இல்ல அக்கா கல்யாணகடன், வரதட்சணை இது போல எதாவதா?..... இப்ப அந்த ப்ரச்சனை எப்படியும் முடிய போகுதே அதை நினச்சு சந்தோஷப்படு…. மத்த எதையும் நினச்சு மனச குழப்பிக்காத…. இந்த நேரம் மனச அலட்டிக்க கூடாது….” அந்த டாக்டர் சொல்ல சொல்ல எதற்காக ஏழைப் பெண்கள் இந்த வாடகை தாய் எனும் சந்தைக்கு வருகிறார்கள் என்பது புரிய….

பூர்விக்கா என் அக்காதானே அவளுக்காகதான நானும் செய்றேன் என இவள் தன்னை சமாளித்துக் கொள்ள முயல தொடங்கினாள்….

[Friends நான் வரும் paragrahpஇல் குறிப்பிட இருப்பது ஒரு சரகோட் மதர் அனுபவிக்கும் மெடிகல் ப்ரொசீசர்களின் நூற்றில் 1 பங்கை…..சரோகசி எந்த அளவு கஷ்டமானது என்ற விழிப்புணர்விற்காக கோடிட்டு காமிக்க இந்த ஒரு பங்கையாவது குறிப்பிட தோன்றுகிறது……படிக்கும் உங்களுக்கு மன கஷ்டமாக இருக்கலாம்……எழுதும் போது நான் அனுபவித்த வேதனை அதிகம். மொத்த ப்ரொசீசரும் படிக்கும் போது உயிர் வரை கசந்து வலித்தது…. இதை தவிர்க்க நினைப்பவர்கள் மூன்று பேரக்ராஃபை மட்டும் தாண்டிப் போய்விடுங்கள்…. நன்றி…]

ஏற்கனவே பிடிக்காத விஷயங்களை வெளியில் சொல்லி பழகாத குணம் வேறு….. அதோடு ஆரம்பித்தபின் எப்படி நிறுத்த என்றும் தெரியாத குழப்பம்…..ஆக  அடுத்து சில நர்ஸ்களும் உபகரணங்களும் இவள் அசையாத வண்ணம் அழுத்திப் பிடிக்க…..

“இங்க பாரும்மா அசைஞ்சன்னா யுட்ரெஸயோ இல்ல யூரினரி ப்ளாடரயோ ஹர்ட் செய்திடும்…அப்றம் உனக்குத்தான் ரொம்ப ப்ரச்சனை…..வலிக்கும்தான் ஆனா தாங்கிக்கனும்…..”  என்ற எச்சரிக்கையுடன் இவளது கருப்பைக்கு முந்திய வாசலில் ஈட்டி  முனை அளவும் வடிவுமான இரும்பு ஸ்பெக்குலத்தை  இவள் துடிப்பு மறுப்புகளை சட்டை செய்யாது பலநிமிட நேர முயற்சியில் முறைப்படி டாக்டர் குடியேற்ற….

அடுத்தும் அதன் வழியாய்  கருப்பைக்குள் குழாய்களையும் கத்திடர்களையும் கண்காணிப்பு கருவியையும் திரவங்களையும் செலுத்தி என டாக்டர் தன் தொழிலை கவனிக்க……அனைத்தையும் அக்றிணையாய்  இவள் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை….  

அடி வயிறு சுண்டி சுண்டி அன்று வலித்த வலி அவளுக்கு ஒன்றுமாயும் தோன்றவில்லை……மனதில் அத்தனை ரணம்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.