(Reading time: 39 - 78 minutes)

 ரியாவை வேறு ஊருக்கு கொண்டு போய் கூட ப்ரசவம் பார்க்க பூர்விக்கு ஆசைதான்….அது ரியா மனநிலைக்கும் அவளுள் வளரும் தன் குழந்தைக்கும்  எத்தனையோ வகையில் நன்மையாக இருக்கும் என்பது அவள் எண்ணம்……ஆனால் ப்ரசவம் வரைக்கும் இந்த மருத்துவமனையும் இந்த கருதரிப்பை செய்வித்த டாக்டரும் வேண்டுமே… என்ன செய்யலாம் என அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரம்தான் இந்த செபின் வந்து நின்றது,….ஆக செபினிடம் மட்டுமல்ல யாரிடமும்  அக்கா இதைப் பற்றி மூச்சு விடவில்லை….. அவன் போன பிறகு ப்ளான் செய்துக்கலாம் என்றாள் அவள்…..இவளையும் எதையும் காண்பித்துக் கொள்ள அனுமதிக்கவில்லை…..

ஏற்கனவே அக்கா சொல்வதை மீறி இவள் எதுவும் செய்பவள் அல்ல….அப்படி இருக்க இந்த நிலையில்….அவள் உட்கார் என்றால் உட்காரவும் படு என்றால் படுக்கவும்…இதப் படிக்காத…அதை கேட்காத…..வேலையை விட்டுடு  என்ற எல்லாத்திற்கும் இவள் அடிமையாய் ஆட….  செபின்க்கு அதுதான் இவளை இழுத்த இழுப்பிற்கு வளைக்கலாம் என தோன்றிவிட்டது போலும்….

எது எப்படியோ…. அக்காவின் ஒவ்வொரு செயலும் அக்கறையும் இவள் கருவுற்றிருக்கிறாள் என நியாபகபடுத்த…..அதை சற்றும் அனுமதிக்காமல் ‘யாரோ ப்ரெக்னன்ட் நான் இல்ல அது’ என தன்னில் இருந்து தானே இவள் கழன்று கொள்வது வழக்கமாக….

அப்பொழுதுதான் அக்காவும் மாசி அண்ணாவும் எதிர்பாராமல் விபத்தில் இறந்து போனது….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ரியாவின் அதிர்ச்சி எத்தகையது என்பதை சொல்ல வார்த்தைகளே இல்லை……இடி விழுந்து இரண்டு நொடிக்குள் இல்லாமல் போனது போல் ஆகி இருந்தது அவள் வாழ்க்கை….இல்லாமல் போனவைகள் என்னவெல்லாம் என்பதை பட்டியலிட கூட படியவில்லை அவள் இதயம்….முழு கோர ஸ்தம்பிப்பில் அது….

இன்றுவரை அவளுக்கென இருந்த அக்கா குடும்பம் இல்லாமல் போனதோடு…..போகிற போக்கில் இவளது எதிர்காலத்தையும் அல்லவா அது உருவிக் கொண்டு போயிருக்கிறது……? நாளை வாழ்வு தனக்காக என்ன வைத்திருக்கிறது என அறியாமல் இந்த மானிட மனம் ஆடிவிடும் கோர தாண்டவங்கள் எத்தனை?

 இனி இவள் மற்றும் இவளது  வயிற்றில் இருக்கும் குழந்தையின் எதிர்காலம்…?????

அதீத மன உளைச்சல்….. அகோர ஏமாற்றம்…. கொடூர பயம் ….எதிர்காலம் குறித்த ஏகோபித்த நம்பிக்கையின்மை….. தன் வழக்கத்தின்படி  வெகு வெகு தீவிரமாக தான் கர்ப்பமாகவே இல்லை என நம்பிக் கொண்டிருக்கும் அவள் மனம்..... இவையெல்லாம் சேர்ந்தோ என்னவோ ஆம் அவள் அனுபவித்த மன உளைச்சலில் இருந்து தப்பிக்க அவள் வழக்கப்படி மாயைக்குள் நுழைந்து கொண்டது அது….. ஆனால் சற்று அதீதமான மாயை…. .

இந்த ப்ரெக்னென்சி சம்பந்தமாக நடந்த எதுவும் நடக்கவே இல்லை என்றது அது….அவைகளை அப்படியே மறந்து போயிருந்தது அவள் மனம் அந்த நொடியே…..

இம்முறை அவள் கருவுற்றிருக்கிறாள் எனவோ சரோகசி பத்தியோ எதையும் நினைவு படுத்த யாருமில்லை எவருமில்லை….. விவரம் தெரிந்த காலத்தில் இருந்து பழகி வைத்திருந்த பழக்கம் வேறு  Live in the present…  பிடிக்காத ஒன்றை நினைக்கவே செய்யாத மனப்பான்மை அதுவும் இவளுக்கு கை கொடுக்க…… சாத்தியம் போல் தோன்றவில்லை என்றாலும் அடுத்து அது எதுவும் அவளுக்கு நினைவிற்கே வரவில்லை….

திரும்ப இவள் செபினுடனான திருமணம் நின்ற நேரம் ப்ரெக்னென்ட் என கேள்விப்படும் போது….அது முற்றிலும் புதிய தகவலாகவே தெரிந்ததே தவிர அப்பொழுதும் கூட இது எதுவும் அவள் நியாபகத்திற்கு திரும்பவில்லை….ஆனால் இன்று இப்பொழுது இது ஏனோ வெடித்துக் கொண்டு வெளி வருகிறது மன அறையில்….

விஷயம் புரிந்த அதிர்ச்சியில் இப்பொழுது முதலில் இவள் செய்த செயல் தன்னில் கரைந்து கொண்டிருப்பவனை கை கொண்டு பதறிப் போய் தள்ளியதே….அவனது கணவன் வகை பிடிக்குள் இருந்தவளுக்கு அவனை விலக்கும் அந்த தருணம்தான்  உறைக்கிறது அக் கேள்வி….

இதை இவளது கணவனிடம் எப்படி சொல்வாள் இவள்???? மறந்துட்டுன்னு சொல்ல சின்ன விஷயமா இது…?? நம்புவானா இவளை???

இவளது விலக்கும் முயற்சியில் சுயநிலைக்கு வந்துவிட்டாலும்….. அவள் மீதிருந்த தன் முகத்தை நிமிர்த்தி அவளைப் பார்த்த விவன்…. அவளை இடையோடு அணைத்திருந்த தன் கரங்களை மட்டும் விலக்கவில்லை…..அதோடு இன்னும் இறுகவே பற்றிக் கொண்டான் அவன்….

அவள் இதழ் தாண்டியும் இவன் ஆசை களம் காண துவங்கி இருக்க…..கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாத காலத்தில் தாம்பத்யம் கூடாது என அறிவுறுத்தி இருந்த டாக்டரின் வார்த்தையை, எங்கு தான் மீறுகிறேனோ என்ற பயத்தில், தன்னவள் தன்னை விலக்குகிறாள் என்பது மாத்திரமே அவனது அந்நேரத்து புரிதல்…..

இதற்கு முந்திய நொடி வரை அவளும்தானே இவனிடம் கரைந்தவள்….ஆக வேறு எப்படி நினைக்க தோன்றும் இவனுக்கு….?

“ரியுமா ஒன்னும் இல்லடா…..சாரி…..அவ்ளவுதான்…”என சொல்லும் போது அவன் முகத்தில் சிறு சிரிப்பும் அதோடு குட்டியே குட்டியாய் கொஞ்சம் வெட்கமும் கூட வருகிறது…’சே இப்டி அவன மீறி என்ன செய்து வச்சுட்டான்….’ என்றிருக்கிறது அவனுக்கு…

அப்பொழுதுதான் அவன் கண்ணில் படுகிறது அவள் கண்ணில் துளிர்த்திருக்கும் ஒற்றை துளி நீர்…

“யாராவது இதுக்குப் போய் அழுவாங்களா ரியுகுட்டி…?” செம செல்லமாய் அவளைக் கேட்டவனுக்கு, ஒரு வேளை அவளுக்கு அவன் செயல் பிடிக்கவில்லையோ என்ற கேள்வி திடீரென வர…  அடிபட்டவனாய்… “ இதெல்லாம் பிடிக்கலையா ரியு…?” என  தவிப்பாய் விசாரித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.