(Reading time: 39 - 78 minutes)

தனால்தான் விஷயம் தெரியவும் ரியாவுடனான மேரேஜுக்கும் முன் அவன் சைக்காலஜிஸ்ட் ஒருவரின் உதவியை நாடினான்.. ரியாவிடம் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரிந்து கொள்ள அவன் செய்த முயற்சி அது….

சைக்காலஜிஸ்ட் தெபோரா சத்யமூர்த்தி  சென்னையின் ஒரு  ரெப்யூட்டட் காலேஜில்  ப்ரொஃபெசராக இருந்தார்…. அவர் ஒரு சர்ச்சில் ப்ரேயர் கவ்ன்சிலராகவும் வாரத்தில் ஒரு நாள் ஊழியத்திற்கு வருவார் என அறிந்து அந்த சர்ச் கவ்ன்சிலிங் சென்டர் போனில் அவரை தொடர்பு கொண்டான்.

ஐடன்டியை டிஸ்க்ளோஸ் செய்யாமல் ப்ரச்சனைக்கு நம்பிக்கையான தீர்வு வாங்க இது அவனுக்கு திருப்தியான வழியாக தோன்றியது…

அவர் இவனுக்கு இரண்டு காரியங்களை தெளிவு படுத்தினார்……மருத்துவ  ரீதியாக இப்படி மறதி சாத்யமே என்றார் அவர்…..ஆனால் அதற்கான காரணம் புரிய அந்தப் பெண்ணிடம் பேசினால்தான் முடியும் என்றுவிட்டார்…. அவளுக்கு தானா விஷயம் நியாபகம் வரும்…. அதுவரைக்கும் யாரும் அதுபத்தி  எதுவும் துருவவோ அவளை ஃபோர்ஃஸ் செய்யவோ வேண்டாம்….” என்றும் சொல்லி இருந்தார்.

விவனையோ “அன்போட அடிப்படையிலதான மேரேஜ் செய்றீங்க….நீங்க நீங்களா இயல்பா இருங்க உங்க வைஃப்ட்ட…. உங்க அன்பே அவங்கள ஹீல் பண்ண ரொம்பவும் எயிட் செய்யும்”  என்றிருந்தார்.

இவனது அன்பை புரிந்து கொண்டு ரியாவும் இவனிடம் நெருங்க நெருங்க அவளிடம் நியாபகங்கள் துளிர்க்க தொடங்கியது….அப்போதே  அவள் முழுவதுமாய் குணமாகும் நேரம் இப்படி எல்லாம் நினைவில் வந்து நிற்கும் என எதிர்பார்த்தே இருந்தான் அவன்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதலும் நட்பும் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அதோடு திரும்பும் இவளது நியாபகங்கள் பற்றி நேற்று  ப்ரொஃபெசர் தெபோராவுடன்  அவன் பேசிக் கொண்டதால்…. இப்படி சூழலை எப்படி கையாள வேண்டும் என்றும் தெளிவாக அறிந்தே இருந்தான்.

ஆக இந்த நிமிடம் தன் கைகளுக்குள் கதறியவளை எந்த வகையிலும் தடை செய்யாமல் அப்படியே அழவிட்டான்…. அதுதான் அவளது இப்போதைய தேவை…..

அவள் அழுகையில் வெடிக்கும் நேரங்களில் அவ்வப்போது அவள் உச்சந்தலையில் நெற்றியில் என இதழ் பொருத்தி எடுத்தாலும் வேறு எந்த வகையிலும் அவளின் செயலில் அவன் தலையிடவே இல்லை…

கைகளுக்குள் பொதிந்து மட்டும் வைத்துக் கொண்டான்.

அழுது கொண்டிருந்தாள் ரியா….. அவள் மனம் தனக்கு பிடிக்காதவைகளையும் தாங்க முடியாதவைகளையும் கண்ணீரோடும் கதறலோடும் சரீரம் வழியாக தடை இன்றி வெளியிட்டிக் கொண்டிருந்தது….

இதில் ஒரு கட்டத்தில்  அவள் அழுகை குறைந்து காரணமற்ற சமாதானமும் ஒரு லைட் வெயிட் ஃபீலும் இவளுக்குள் வர இப்போது அடுத்த சிந்தனை….

அவனிடம் விஷயத்தை சொல்லி ஆக வேண்டுமே… சொன்னால் நம்புவானா?

நிர்மலமான அவள் மனம் இப்போது வேறு வகையில் யோசிக்கிறது….

கண்மணியின் மேரேஜுக்கு முன்னால் அத்தனை தூரம் மஹிபால் வீடைப் பற்றி  விசாரித்து…சுடர் ஆண்டியிடம் வரை கண்மணி பழக நேரம் கொடுத்து….அத்தனை பார்த்து பார்த்து மேரேஜ் செய்து வச்ச விவன்….இவளப் பத்தி இவ வீட்டப் பத்தி விசாரிக்காமலா மேரேஜ்க்கு மூவ் செய்திருப்பான்…..? அப்டின்னாலே இவனுக்கு பூர்வி சரோகேட் மதர் ட்ரைப் பண்ணது தெரிய வந்திருக்கும்…. அடுத்து  இவ ப்ரெக்னென்ட்னதும் கண்டிப்பா அவனுக்கு அதுக்கு காரணம் புரிஞ்சிருக்கும்…. அதான் பின்னால ஆதிரன் சார்ட்ட மத்த கல்ப்ரிட் பத்தி எல்லாம் அவன் விசாரிக்க சொல்லி இருந்தாலும்…..இந்த குழந்தை எப்படி வந்துச்சுன்னே அவன் யார்ட்டயும் விசாரிக்க சொல்லலை….

பூர்வி மேலயும் பொண்ணு கேட்டு வந்தப்பதான் தப்பான எண்ணம் இல்லனு சொல்லி இருக்கான்….ஆனா நிச்சயமா இப்ப நல்ல ஃபீல் அவனுக்கு இல்ல…. இதெல்லாம் யோசிச்சா அவனுக்கு விஷயம் தெரியும்….

அது தெரிஞ்சுகிட்டேதான் அவன் இவள மேரேஜ் செய்துறுப்பதும்….காதலிப்பதும்…..இவள தன் வைஃபா முழுமனசா நடத்துறதும்…

அப்படினாலே இவ நடிக்கலை, நடந்த காரியத்த மறந்துட்டான்னு நம்புறான்னும் அர்த்தம் வருதே….

தெரிஞ்சே ஏமாத்றவங்கள ஏத்துக்கிற ஆளா இவன்….. அந்த நாதன் மேல எப்டி கோபபட்டான்…

இப்படி ஒரு புரிதல் வரவும் அவன் மார்பில் புதைந்திருந்தவள் விழிகளை மட்டும் உயர்த்தி அவன் முகம் பார்த்தாள்…

அவள் கண்களை சந்தித்தவனிடம் ஒரு ஆறுதலான தாய்மையின் புன்னகை இப்போது…. அவளது புருவ மத்தியில் மென்மையாய் ஒரு சிறு முத்தமும் அவன் செயல்… அமர்ந்திருந்த இதயம் இன்னுமாய் அமர்ந்து குளிர அதை கண்மூடி தன்னுள் வாங்கினாள் ரியா….

இவ திடீர்னு அழுததுக்கு நியாபடி இப்ப அவன் எப்படி நடந்துக்கனும்…. இது என்ன ஆறுதலும் கொஞ்சலும்….. சோ இவளுக்கு நியாபகம் வந்துட்டுன்னு கூட அவனுக்கு புரியுது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.