(Reading time: 39 - 78 minutes)

மௌனமாய் அவன் விழிகளில் பார்வையை நிறுத்தி இருந்தவள் கண்களில் இப்பொழுது மீண்டும் நீர் சரம்…. நிறைந்த மனம்தான் நீராய் இறங்கியது….அவனுக்கு என்னதாய் புரிந்ததோ?

“உன் அக்கா மாசி அண்ணா செய்ததுதான் ரியு எனக்கு பிடிக்கல….ஆன அதை குழந்தைட்டல்லாம் காமிக்க மாட்டேன்மா….. அது நம்ம பாப்பா….நம்ம வளர்க்கிற முறையில வளரப் போகுது…..”

இவள் கண்ணீரை துக்கம் என கண்டு சொன்னானோ….அல்லது இத்தனை நேர பேச்சில், இவளுக்கு அவனது பூர்வி மாசி மீதான கோபம், குழந்தை மீதும் வந்துவிடும் என்ற பயம் தோன்றிவிடக் கூடாதென எண்ணி சொன்னானோ….அவளுக்கு தெரியாது….

ஆனால் அவன் இரண்டு கன்னங்களிலும் கை வைத்து பற்றி,  இத்தனை நேரமும் அவளுக்காக அத்தனை அத்தனையாய் ஆர்க்யூ செய்து கொண்டிருந்த அவன் இதழ்களை  அந்த கணம் தன்னுடையவைகளால் சந்தித்தாள்……

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

உன் மேலிருந்த என் எல்லா பயமும் போய்விட்டது என்றாளா…..அல்லது அது காதலா காமமா இல்லை அக்மார்க் அன்பா…. ஒரு வேளை இவை எதுவுமற்ற வெறும் விளையாட்டு செயலா… உரிமை பறை சாற்றுதலா? நீயும் நானும் ஒன்றே என நிலையின் வெளிப்பாடா அல்லது அந்நேர சூழ்நிலையின் கணம் குறைக்கும் முயற்சியா இல்லை எல்லாமேவா…. தெரியாது…

ஆனால் அரை நிமிட செலவுக்குப் பின் இவள் விலகும் போது……சற்று முன நடந்த அந்த கடின மன குமுறலை இருவருமே கடந்திருந்தனர்….

அடுத்து விலகியபடி அவன் கண் பார்த்தவளைப் பார்த்து சின்னதாய் சிரித்தான் அவன்….. இவளும் அதே வகை சிரிப்பை அவனுக்கு கொடுத்தபடி ….. தன் புடவையை சரி செய்து கொண்டே அவனைவிட்டு இரண்டடி விலகி நடக்க…..

“ஹார்ஷா பேசி இருந்தேன்னா சாரி ரியு” என்றான் அவன்.

மீண்டுமாக இப்போது அவனிடம் வந்தவள்…..மீண்டுமாக அவன் இரு கன்னங்களையும் பற்றிக் கொண்டு அவன் அதரங்களை தன்னவைகளால் சந்தித்தவள்……அடுத்த  கால் நிமிடத்திற்குப் பின்னே விலக…… இப்போது அவள் கைப் பற்றியவன்….

“கோபபட்டேன்னா பதிலுக்கு என் ஜிலேபி கெண்ட என்ன செமயா கவனிக்கும் போலயே….இந்த டெக்னிக் எனக்கு ரொம்ப பிடிச்சிறுக்கு” என்க.....

“எல்லாவகை கவனிப்பும் இங்கு விவன் சார்க்கு எப்போதும் கிடைக்கும்…” என கண்சிமிட்டியபடி இப்போது அவள் அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டு நடக்க…

“விவனாஆ…சாரா… சே யார் அந்த பையன்…..நீ உன் ஜெரோம மட்டும் கவனிப்பியாம்” என என்னை ஜெரோம்னு மட்டும் கூப்டு என்ற அர்த்தத்தில் விவன் அறிக்கை கொடுக்க…...

அந்நேரம் அங்கிருந்த ஒரு டவலை எடுத்து வந்தவள்…… அவன் கேட்காவிட்டாலும் கூட அவன் மனதிலிருக்கும் கேள்விக்கு விடையை சொல்லியபடி…..

இவன் கை பற்றி அருகிலிருந்த சேரில் உட்கார வைத்து…..அவனது ஈரமுடியை துவட்ட துவங்கினாள்.

“முத முதல்ல நமக்கு மேரேஜாகிட்டுன்னு ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல உங்க நேமோட என் பேரையும் பார்த்தப்ப…. முன்னல்லாம் ஸ்கூல் டேஸ்ல உங்க நேமை ஜெரோம்னுதான கூப்டுவேன்…. சோ அந்த பழக்கப்படி ஹஸ்பண்ட் நேம் ஜெரோம்னுதான் வாசித்தேன்…. அப்டி நினைக்கவே அந்நேர சூழல்ல  ரொம்ப வெறுப்பா பதிஞ்சுது இல்லையா அதான் அடுத்து உங்கள ஜெரோம்னு சொல்லவே முடியல….. இப்ப உங்கள வேற எப்டியும் கூப்ட பிடிக்கல….. எனக்கு ஜெரோம்தான் இப்ப எல்லாம்.”

உட்கார்ந்திருந்தவன் அவளை இடையோடு இரண்டு கைகளாலும் இப்போது பற்றிக்கொள்ள…. சிறுவயதில் தனக்கு தலை துவட்டும் தன் அம்மாவை இப்படி பற்றும் நியாபகத்தில் தாய்மை சாரல் இவளுள்….

“இப்டி சின்ன பையன் மாதிரி பிஹேவ் செய்றப்ப இனிமே வா விவி…. போ விவி…..டேய் நில்றா விவி….ன்னு பேசப் போறேன்….” அடுத்த பேச்சுக்கு அவள் போக

“டிடிஎம் ம விடவாங்க இது மரியாதை குறைவா இருக்கு…?” அவன் கேட்க

ரியாவின் நினைவு திரும்பலின் மூலமாய் எரிமலை போல் வெடித்திருந்த கர்ப்பம் தோன்றிய கால கோரம்… இப்படி செயல்களாலும் பேச்சாலும் சற்று முயன்றும் ஆற்று நீர் போல இயல்பாகவும் தாண்டி போகப்பட்டது அவர்கள் இருவராலும்…..

பழைய நினைவு இப்போதுதான் ஆறிய காயம் போல சற்று பலவீன மன நிலையை தந்தாலும் இது எல்லாவற்றிலும் விவன் இவளை நம்பிய வகையிலும் ஏற்றுக் கொண்ட முறையிலும் முழுதுமாய் பூரித்திருந்தாள் ரியா என்பதும் உண்மை……அவள்  மனம் அவனையே சுற்றும்படி பார்த்துக் கொண்டான் அவளது கணவனும்….

 விவன் அவனது  ஏதோ ஃபோனெல்லாம் பேசி முடித்துவிட்டு   வரும்போது……. தன் ஈரபுடவையை மாற்றிவிட்டு கிட்சனில் எதையோ குடைந்து கொண்டு இருந்தாள் ரியா…

உண்மையாகவே இப்ப லைட் யெல்லோ ஷேடில் சேரி கட்டி அவள்…. ஈர முடியை அடியில் மட்டுமாய் முடிச்சிட்டு செம குடும்ப பங்காய் பொண்ணிருக்க….

“ஹேய் பொண்டாட்டி என்ன செய்துட்டு இருக்க…?” என்றபடி அவளை பின்னாலிருந்து அணைத்தபடிதான் அவள் என்ன செய்கிறாள் என்பதை எட்டிப் பார்த்தான் இவன்…

அவள் மும்முரமாக வெள்ளரிக்காயை தோல் சீவிக் கொண்டிருந்தாள்…

“என்ன நீ யெல்லோ ட்ரெஸ் போட்டு ஏதோ நான்வெஜ் சிக்னல் எல்லாம் கொடுத்துட்டு வெஜிடபிள் கூட விளையாடிட்டு இருக்க…..?”

“ரிவர்ல குளிச்சதான்னு தெரியல….திரும்ப பசிக்குது….வெஜிடபிள் சலாட் செய்ய போறேன்….”

“ஓகேய்ய்ய்…கோ அகெட்…”

“இப்டில்லாம் செய்தீங்கன்னா நான் எப்டி வேலைய பார்க்க…?”

“நீ வெள்ளரிக்காய கவனி….நான் வீட்டுக்காரிய கவனிக்கிறேன்…இதுல என்னடி ப்ரச்சன?”

இப்போது அவன் கைக்குள் நின்றவள் திரும்பிப் பார்த்து அவனுக்கு பழிப்பம் காட்ட….. அவனோ அவளுக்கு தன் கன்னத்தை நீட்டினான்…

“பொழச்சுப் போங்க….” என சலித்துக் கொண்டாலும்  அவன் கேட்டதை ஆசையாக அங்கு செலுத்திவிட்டே இவள் காயை கவனிக்க

“உன்ட்ட கொஞ்சம் பேசனும் ரியு…” என்ற விவன்

“இங்க முடிஞ்சவரை  கேட்டாச்சு…… தேட முடிஞ்ச சோர்ஸ்லலாம் தேடியாச்சு….. இந்த விந்தவனம் பத்தி நோ ஐடியா….. ரெண்டு ஹிஸ்டாரியன்ட்ட இதப் பத்தி கேட்டு மெயில் செய்துறுக்கோம்….. ரிப்ளை வரவும் பார்க்கலாம்….. இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா….நீ கேட்டபடி தேடிட்டுதான் இருக்கோம்… நீ டென்ஷனாகாம இருக்கனும்…ஓகேவா….” என்றுவிட்டு…

“ஜெபர்சன்ட்ட பேசி எல்லா அரேஞ்ச்மென்ட்டும் செய்தாச்சு…. உனக்கு ஓகேன்னா இன்னைக்கு கூட நாம குற்றாலம் போய்ட்டு வரலாம்….” என அவள் ஆசைப்பட்ட தகவலை தெரிவித்தான்…

 “வாவி…. ” என்றபடி எக்சைட் ஆனவள்….”அச்சோ பாண்டியரே…..உங்களால என் சாலட் ஹோகயா…” என்ற அங்கலாய்ப்புக்கு போனாள் அடுத்த நிமிடம்…..

“ ஹேய் நான் என்ன செய்தேன்……. நம்ம டீல் படி வெள்ளரிக்காவ கவனிச்சது நீ மட்டும்தான்….நான் என் வீட்டுக்காரிய மட்டுதான் கவனிச்சுட்டு இருந்தேன்….”

“போங்க நீங்க செய்த வேலையில எனக்கு சாலட் செய்றேன்னு மறந்துட்டு….பாருங்க  ராய்த்தாக்கு போல சீவி வச்சுட்டேன்….. இத எப்டி சாப்டவாம் இப்ப…?”

“இதென்ன கேள்வி…எடுத்து வாயில வச்சுதான்…”

இப்போது அவனை திரும்பிப் பார்த்து முறைத்தவள்…. “சிக்கன் இருந்தா கூட பிரியாணி செய்துடலாம்…..காம்போ நல்லா இருக்கும்….” என அடுத்த ப்ளானை யோசிக்க..

“அதை  மலைல வச்சு சாப்ட எனக்கு ரொம்ப பிடிக்கும்…… லன்ச் குற்றாலம் எடுத்துட்டு போய்டலாம்…. சிக்கன்க்கு வழி செய்துட்டு வர்றேன் “ என விவன் இப்போது கிளம்பினான்…..

“நீங்களா வெளிய போறீங்க…?” என்ற போது இவள் முகத்தில் தவிப்பு… “அப்பன்னா சிக்கனே வேண்டாம்…” மனைவியின் முடிவு….

“ஹேய் வெளியவே போகாம எல்லாத்துக்கும் ஜெபட்ர்சன்ட்ட சொல்லிட்டு இருந்தா….. கல்ப்ரிட் நம்ம மானிடர் செய்தா….எப்டி இருக்கும்…? குற்றாலம் போறது போல ஃபுல் செக்யூரிட்டியோதான் இதுக்கும் போறேன்…. நிம்மதியா இருக்கனும் ஓகேவா…” என்றவன்

“முக்கியமானத சொல்லவிட்டு போச்சு ஜிலேபி கெண்ட…உன் எல்லோ ட்ரெஃஸ் வேலை….” என்றபடி திரும்பவும் இவளிடம் வந்தான்.

மீண்டுமாய் பின்னிருந்து அணைப்பு…. “ஆதிரன் சார்ட்ட இருந்து லேப் ரிப்போர்ட் வந்திருக்கு….. உன் செயின்ல இருந்தது ப்ளெட் இல்ல……கொலாய்டல் கோல்ட்…..அவ்ளவு ஈசி கிடையாதுன்னாலும்…. எதோ ஒரு கெமிஸ்ட்ரி ஃப்ரீக் இதை செய்துறுக்கலாமாம்…. அதோட வீட்டுக்குள்ள எரிஞ்ச தீ…..வைட் பாஸ்பரஸ்…… கார்ல ப்ளாஸ்ட் ஆனது எதோ நியூ கெமிக்கல் சவ்ண்ட் லெஸ் பாம்….. சோ எல்லா வகையிலும் இது கெமிக்கல் பேக்ரவ்ண்ட் உள்ளவங்க வேலைனு தெரியுது…..  ஆக நான் கல்ப்ரிட் மனுஷன்னு நம்புறேன்…..சேம் டைம் உன்னை இப்டித்தான் நம்பனும்னு கம்பல் செய்ய மாட்டேன்….  பேய்க்கு கெமிஸ்ட்ரி தெரியாதுன்னு சொல்ல முடியாதே……பாரு உனக்கு கூட கெமிஸ்ட்ரி தெரிஞ்சிருக்கே “ என முதலில் இன்ஃபோ ஷேரிங்காக ஆரம்பித்த ஒன்றை வாரலாக முடித்தான்.

ரியாவுக்கு இவ்ளவுக்கும் காரணம் யார் என்றும் எது என்றும் தெரிந்தே விட்டது….

அவள் விந்தவனம் சென்றே ஆக வேண்டும்…

Friends வீட்ல ஒரு ஃபங்க்ஷன்…..இது ஹெவி எப்பி என்னை பொறுத்தவரை…ரொம்பவும் ஹேப்பி போர்ஷனை பின்னால சேர்த்து  முடிக்கிறப்ப சந்தோஷமா நீங்க  ஃபீல் செய்றாப்ல அனுப்ப நினைத்திருந்தேன்….பட் ஃபங்க்ஷன் ப்ளான்ல சில எக்ஸ்ட்ரா வொர்க் சேர….எழுத இருந்த டைம் ரொம்பவும் குறஞ்சுட்டு….  சோ இவ்ளவுதான் முடிஞ்சிருக்கு…. பொறுத்தருளவும். நன்றி

தொடரும்

Episode # 23

Next episode will be published on 31st Mar. This series is updated weekly on Fridays - 8pm.

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.