(Reading time: 39 - 78 minutes)

வங்களுக்கு குடும்பம் இல்ல….குழந்தை இல்ல….மாசி அண்ணாவும் காதலுக்காக ஃபேமிலிய இழந்துட்டாங்க..…இப்டி எல்லாம் அவங்க சைடை யோசிகிறாங்களே…..உனக்கு என்னடி இருந்துச்சு…..? ஏற்கனவே யாருமில்லாத உனக்கு குடும்பமே இல்லாம போய்டுமே….அத யோசிச்சாங்களா? இன்னும் வளராத தன் எம்ப்ரியோ அழிஞ்சுடக் கூடாதுன்னு  யோசிக்க முடிஞ்ச உன் அக்காவுக்கு வளந்து பாசமும் ஆசையுமா நிக்ற உன்ன பத்தி யோசிக்க முடியல என்ன?”

“அதுப்பா…..அவங்க என்ன வச்சு ப்ளான் செய்யல….இது ஆக்சிடென்டலி திடீர்னு எடுத்த முடிவு… அதுவும் நான்தான் கேட்டேன்..” அவனிடம் சண்டை போட துளியும் விருப்பம் இல்லை….ஆனால் அவனிடம் இனியும் மனதில் நினைப்பதை பேசாது வாழும் வாழ்க்கை கூடாது…..தயங்கியே சொல்லி வைத்தாள் ரியா…

“ஏன் ரியு உன்னை செய்தாதான் தப்பு….ஆனா பண தேவை உள்ள ஒரு ஏழைப் பொண்ண செய்தா தப்பில்லையா? அப்டித்தான் உனக்கு தோணுதா?” அவன் கோபமாக கத்தலாகவெல்லாம் கேட்கவில்லை…..இருந்தும் அறை வாங்கியது போல் உணர்ந்தாள் இவள்….

“வீட்ல ஆடி கார் வாங்க முடியல…… அப்ராட் ட்ரிப் போக முடியல்லன்னா ரியு  இந்த வேலை செய்து கொடுக்க பொண்ணுங்க வர்றாங்க…..அவங்களோட அடிப்படை தேவைக்கு அவங்க தடுமாறுவத  இவங்க பணத்த காட்டி யூஸ் செய்துக்கிறங்க அப்டித்தானே….?”

“…………..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வசுமதியின் "சர்வதோபத்ர... வியூகம்...!!!" - சாகசம் + கற்பனை + நகைச்சுவை கலந்த தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

இந்த குழந்தைய அபார்ஷன் செய்ய மட்டேன்னு எப்டி தவிச்ச நீ…? அப்போ அது வெறும் 49 நாள் பேபி…. இதுல 9 மாசம் சுமந்தவங்கட்ட அது உன் குழந்தை இல்லைனு சொல்வாங்களாம்….ஆமான்னு அவங்களும் எதோ கர்சீஃபை கழட்டி கொடுக்க மாதிரி கொடுத்துட்டு போய்டுவாங்களாம்….? அவங்களுக்கு மனசு இல்ல….? பிள்ளைய தூக்கி கொடுக்க வலிக்காது??

“………………….”

“சுமந்துகிட்டு இருக்ற குழந்தைய 9 மாசமா அவங்க குழந்தை இல்லை அவங்க குழந்தை இல்லைனு சொல்லிட்டே இருந்தா அதை சரகோட் மதர்  நம்பிடுவாங்களாம்…..ஆனா குழந்தை இல்லாதவங்க தத்தெடுத்து இருபத்தி சொச்ச வருஷம் வளர்க்கிற குழந்தை அவங்கள அம்மா அப்பான்னு நம்பாதாம் ஏத்துக்காதாம்….சோ இவங்க ஓன் ரத்தம் வேணும்னு சரகோசி போறாங்களாம்….என்னடி லாஜிக் இது?”

“……..”

இதுல சிலர் அதுக்கும் மேல…. எக் டொனேஷன்…..ஸ்பெர்ம் டொனேஷன்னு வேற யார்ட்ட இருந்தெல்லாமோ வாங்கி கூட குழந்தை வச்சுப்பாங்களாம்….ஆனா ஏற்கனவே பிறந்திருக்கிற அம்மா அப்பா இல்லாத குழந்தையை அடாப்ட் செய்துக்க மாடாங்களாம்…”

“………………….”

“மறுநாள் உயிரோட இருக்கப் போறொம்னு கூட கேரண்டி இல்லாத லைஃப்ல..…எதுக்காக நம்ம வரட்டு பிடிவாதத்துக்காக இன்னொரு பொண்ணோட வாழ்க்கையில் விளையாடனும் ரியு…? அடாப்ஷன்ல இல்லாத என்ன புனிதம் இந்த சரகோட் மதர் கான்சப்ட்ல கிடச்சுடுது?”

“……….”

“இந்த ப்ரொசீசர்ல கேரண்டியா எமோஷனல் அண்ட் ஃபிசிகல் ஸ்ட்ரெஸ் ரொம்ப அதிகம்னு சொல்றாங்க……அதுவும் நம்ம சோசியல் செட் அப்க்கு இது ரொம்ப ரொம்பவே அதிகம்….” அவன் சொல்லிக் கொண்டு போக….இதை இவளை விட யாருக்கு அதிகம் தெரியுமாம் என்பது போல் அவனைப் பார்த்திருந்தாள் ரியா….

“இதுல திரும்ப டெலிவரி வேற சிசேரியன்ல கோத்ரூ செய்யனும்……அவங்க அந்த பெய்ன்ல இருக்கப்ப ஃபீட் பண்ண கூட விடாம பேபிய பிடுங்கிட்டு போய்றுவாங்க காசு கொடுத்தவங்க…..அதோட இதுக்கான சில ப்ரொசீசர்ல யுட்ரெஸ் டேமேஜ், ப்ளாடர் டேமேஜ்…..ஏன் டெத் வரைக்கும் அக்கர் ஆகலாமாம்…. இப்டி அந்த சரகோட் மதர் எப்படி போனா எனக்கென்ன…..எனக்கு என் ரத்தத்துல குழந்தை வர்றதான் முக்கியம்னு நினைக்கவங்கள செல்ஃபிஷ்னு சொல்லாம என்னதுன்னு சொல்லனும்?

 “……….”

“எப்டி பார்த்தாலும் உன் பூர்வி அக்கா மாசி அண்ணா ஆக்க்ஷனையும்  செல்ஃபிஷ்னெஸ்னு மட்டும்தான் எனக்கு பார்க்க முடியுது….. ஆனா இல்லாம போனவங்களப் பத்தி என்ன பேச…..உன் மனசுக்கு பிடிக்காத எதையும் பேசவும் எனக்கு இஷ்டம் இல்ல…சோ இதை இதோட விட்றுவோம்…

பட் ஒன்னு மட்டும் சொல்லனும்… நாதன் மாதிரி ஆட்கள்ளாம் அவங்க ஆசைக்காக அடுத்தவங்கள தீக்குள்ள இழுத்து போடுறவங்கன்னா…….நீ உன்னய தீக்குள்ள தள்ளிக்கிற ரகம்…. உன் தப்புக்கும் அவங்க தப்புக்கும் அந்த செல்ஃபிஷ்நெஸ்தான் வித்யாசம்…

நாதன சிவியரா பனிஷ்செய்யனும்….. உன்ன…” என்பது வரை ஒரு எரிச்சல் கலந்த அழுத்த டோனில் சொல்லி வந்தவன்…. இப்போது மிகவும் குரல் இறக்கி…

“உன்ன உன்ட்ட இருந்து காப்பாத்ததான்டி செய்யனும்…” என்று முடிக்க…… அவன் முகத்தையே பார்த்திருந்தவளுக்கு எப்படி இருக்கிறதாம்?

இவளிடம் இருந்து இவளையே காப்பாத்துவானாமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.