(Reading time: 39 - 78 minutes)

ப்படி தோன்றவும் தன்னவன் மேல் இன்னுமாய் உருகிறது இவள் மனம்….எப்படி பட்டது இவனது அன்பு?  இவளே எல்லாத்துக்கும் காரணம் இவன்தான்னு நினச்சு கூட ஆடியிருக்காளே…. ஆனாலும் இவளை நொடி நொடியாய் புரிந்து…..

உருகலும் குற்ற மனப்பான்மையிலும்தான் அவனிடம் பேச தொடங்கினாள்…

“நம்ம மேரேஜே அவராலதான் நடந்துச்சுன்னா கூட அந்த நாதன்க்கு சிவியர் பனிஷ்மென்ட் கிடைக்கனும்னு சொன்னீங்கல்லப்பா…... எனக்கும் அது போல பனிஷ்மென்ட் தாங்க ஜெரோம்” அவள் ஆரம்பிக்க….

இம்மீடியட்டாய் முறைத்தான் விவன்….

“அந்த ஆள் நம்ம ரெண்டு பேர் நேமயும் சேர்த்து  ரெஜிஸ்டர் செய்ததுக்கு பதிலா வேற யார் பேர் கூடயாவது உன் நேமை சேர்த்திருந்தா என்ன செய்திருப்ப…..? ஏன் மஹி நேமையும் உன் நேமையும் சேர்த்து  ரெஜிஃஸ்டர் செய்திருந்தா கூட எத்தன பேர் லைஃப் அஃபெக்ட் ஆகி இருக்கும்…..? இது போல எத்தன சம்பந்தம் இல்லாதவங்களுக்கு அந்த ஆள் மேரேஜ் செய்து வைக்கானோ……

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

இவ்ளவு ஏன்……தன்னை விரும்பாத பொண்ண….இல்ல தான் பழி வாங்க நினைக்கிற ஒரு பொண்ணையோ பையனையோ இப்டி யார் கூடயாவது சேர்த்து எந்த கிறுக்காவது காசு கொடுத்து ரெஜிஃஸ்டர் செய்ய கேட்டா கூட இந்த நாதன் செய்யத்தானே செய்வான்…..?

எத்தன பேர் லைஃப் இதுல அடி வாங்கும்…? மேரேஜ்ன்றது விளையாட்டாவா தெரியுது….. இப்டி பனிஷ்மென்ட் கொடுத்தாதான அடுத்த தடவை தப்பு செய்ய தைரியம் வராது….அதான் அந்தாளுக்கு கண்டிப்பா பனிஷ்மென்ட் கொடுக்கனும்னு சொன்னது…” விவன் சொல்ல சொல்ல அவனையே கண்கொட்டாது பார்த்திருந்தாள் ரியா…

இப்ப இவளப் பத்தி என்ன சொல்வான்?

“நீ செய்ததும் கண்டிப்பா தப்புதான் சரின்னு சொல்ல மாட்டேன்…..உதவி கேட்கிற எவனுக்கும் கொடுன்னு சொல்லிட்டு அடுத்து பைபிள்ள உதவியா குறிப்பிட்டுருக்கிறது சாப்பாடையும் ட்ரெஸ்ஸையும் மட்டும்தான்…. அது ரெண்டையும் எதிரிக்கு கூட கொடுக்கனும்…. அது ரெண்டு தவிர வேற எது இல்லாத மனுஷனாலயும் நிம்மதியா மனநிறைவா வாழ கண்டிப்பா வழி இருக்கும்…..அத அவன்தான் தேடி பிடிக்கனும்…அதுக்குத்தான் தேடுகிறவன் கண்டடைவான்னும்  சேர்த்தே சொல்லி வச்சுறுக்கு…

அவங்கவங்களுக்கு நியமித்த பாதைனு ஒன்னு இருக்கு அதுல அவங்கள ஓட அலவ் பண்ணனும்…..அதவிட்டுட்டு நாமளே அவங்களுக்கு கடவுளாகி எல்லாத்தையும் தர நினைக்க கூடாது…. அது ஒருக்காலமும் வொர்க் அவ்ட் ஆகாது….

நோய்ல இருக்கவனுக்கு மருந்து கொடுக்கனும்….கூட இருந்து பார்த்துக்க கூட செய்யலாம்….ஜெயில்ல இருக்க மனுஷன தேடிப் போய் ஆறுதலுக்காக பார்த்துட்டு வரலாம்….இதெல்லாம் கூட ஹெல்ப்தான்…..ஆனா பேஷண்ட்காக நாம சாகவும் கூடாது….ஜெயில்ல இருக்கவனுக்கு பதிலா நாம ஜெயிலுக்கு போகவும் கூடாது…. அது ஹெல்பும் இல்ல…..தியாகமும் இல்ல.....அதால யாருக்கும் நல்லதும் நடக்காது….

அதான் நீ செய்த தப்பு….. நாதன் உன் அக்கா மாதிரி ஆட்கள்ளாம் அவங்க ஆசைக்காக அடுத்தவங்கள தீக்குள்ள இழுத்து போடுறவங்கன்னா……” அவன் சற்று காரம் கலந்த அழுத்த குரலில் கோபத்தையெல்லாம் அடக்கிப் போட்டு சொல்லிக் கொண்டு போக….

இவளுக்கு அவனது எல்லா வார்த்தைகளிலும் உடன்பாடு இருந்தாலும் அக்காவை நாதனோடு அவன் ஒப்பிடுவது மனதிற்கு உடன்பாடு இல்லை….

“பாவம்பா அக்கா….அவ எனக்கு கெடுதல் செய்யனும்னு செய்யல…” என கெஞ்சலாக இடையிட்டாள்…

“குழந்தையில்லாம அவ ரொம்பவும் கஷ்டபட்டா…. வேற ஒரு பொண்ணத்தான் அரேஞ்ச் செய்திருந்தாங்க…..” விளக்கவும் முற்பட்டாள்….

“குழந்தை இல்லைனா உன் பூர்விகாவுக்கும் மாசி அண்ணாவுக்கும் என்ன ஆகி இருந்திருக்கும்…? “ வெட்டிக் கொண்டு வந்தது அவனது கேள்வி….

என்ன பதில் சொல்வாள் இவள்….?

“குழந்தை இல்லாதவங்கல்லாம் வாழ்றதே இல்லையா ரியு…..? இல்ல கடைசி காலத்தில் ஓல்ட் ஏஜ் ஹோம்ல இருக்கவங்கல்லாம் குழந்த இல்லாதவங்களா?”

“………….”

 “ஆனந்தப்பாவல உன்ன தன் மகளா ஏத்துக்க முடிஞ்சா, உன் பூர்விக்கா மாசி அண்ணாவால ஏன் ஒரு குழந்தைய தத்தெடுத்து தன் குழந்தையா வளக்க முடியாது..…?”

“……………….”

“ நம்ம ரத்தத்தில் வந்த சொந்த குழந்தைனா கூட அது நம்மள மாதிரி, நமக்கு பிடிச்ச மாதிரிதான் வளரும்னு என்ன கேரண்டி…?”

“……………..”

“உன் அக்காவே கூட அவங்க அப்பா மாதிரி வளரலையே…. எந்த சிச்சுவேஷன்லயும்  ஆனந்தப்பா உன்ன அவங்க பொண்ணா நினச்சு உனக்கு எது நல்லதுன்னு பார்த்துறுக்காங்களே….உன் அக்கா அவங்களுக்கு தேவைனு வரவும் ஒரு கல்யாணம் ஆகாத சின்ன  பொண்னுனு கூட பார்க்காம உன்னை கன்சீவாகுன்னு அனுப்பிவிட்டுடாங்க….?......எத்தன பேர்ட்ட போய் இது சரோகசின்னு எப்படி நிருபிச்சுடுவாங்க….?....நீதானடி சிலுவ சுமந்திருப்ப….? ஆனந்தப்பா எங்க உன் பூர்விக்கா எங்க?”

“……………”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.