(Reading time: 15 - 29 minutes)

சொல்லு தர்ஷூ,  நம்ம ஹீரோ நேத்து என்னதான் சொன்னாரு.. ஏதச்சும் ரொமான்ஸ்?”

“ஹுக்கும், ஐயோ பாவம் ஆட்டோ சார்ஜ் மிச்சமாகட்டும்னு வீட்டில விட்டாரு டீ,  நீ கற்பனை பன்ற அளவு, வேற எதுவும் நடக்கல..”

“நீ ரொம்ப வேஸ்ட் மச்சி, கடைச்ச சான்ஸ மிஸ் பன்னிட்ட, அப்படியே ஆளை அமுக்கி..” என்று ஏதோசொல்ல வந்தவளை தர்ஷினி முறைக்க

“சரி விடு அதெல்லாம் உனக்கு செட் ஆகாது, பட் அட்லீஸ்ட், அட்ரெஸ் வாங்குனியா?”

“நானா அவர் கிட்ட எப்பிடி கேப்பேன்.?.”

“சரி வேணாம், மொபைல் நம்பர்..? நீங்க பத்திரமா ரீச் ஆயிட்டு எனக்கு கால் பன்னுங்கன்னு ஒரு பிட்ட போட்டிருக்கவேண்டியதுதானே?”

இப்போதும் தர்ஷினி விழிக்க, காவ்யா முறைத்தாள்…

“ஒகே நோ ஃபீலிங்க்ஸ்” உன்னோட ஆள் அட்ரெஸ் கண்டுபிடிக்கவேண்டியது என் பொறுப்பு” என்று புன்னகைத்தாள்.

“அத விடு காவீ, ஈவ்னிங்க் ஒரு ஆர்ஃபனேஜ் போறேன் அம்பத்தூர்ல நீ வர்றீயா?”

“ஈவினிக் ப்ராத்னால ஒரு ஷொ இருக்கு,அங்க போலாம்னு ப்ளான்.. இந்த ஆசிரமம், ஆர்ஃபனேஜ்லாம் நமக்கு செட் ஆகாது.. சோ மேம் போயிட்டு சேவை செஞ்சுட்டு வாங்க!”  என்று புன்னகைத்தாள்

வாசலில் சம்பந்தமும் மாணிக்கமும் உரையாடும் சத்தம் கேட்டு இருவரும் வாசலுக்கு நடந்தனர்.

சம்பந்தம் தர்ஷினியைப்பார்த்து, “தர்ஷினி, ஒரு ஆர்ஃபனேஜுக்காக டொனேஷன் கேட்டிருந்தியே”, என்று தன் சட்டைப்பையிலிருந்து ஒரு செக்கையெடுத்து அவளிடம் நீட்ட,

“தேங்க்யூ அங்கிள்” என வாங்கிக்கொண்டாள்.

“அப்புறம் மா, நானும் ஆன்ட்டியும் இரண்டு நாள் வெளியூர் போறோம், நீ கொஞ்சம் காவ்யாவ பாத்துக்கோ”

“நான் பார்த்துகிறேன்.. நீங்க போயிட்டுவாங்க” – தர்ஷினி

சம்பந்தம் வெளியூர் போகும் ப்ளான் தெரிஞ்சதும் அவர் பின்னால் நின்று ஹாப்பி என்று வாயசைத்து டேன்ஸ் ஆடினாள் காவ்யா, அவர் திரும்பி அவளைப்பார்க்க சட்டென நிறுத்துவிட்டு  பவ்யமாக நின்றாள்.

“அப்ப நான் வர்றேன், மாணிக்கம் சார், ஈவினிங்க் காவ்யா இங்க வருவா!” என்று கூறி இருவரும் கிளம்பினர். தரிஷினியைப்பார்த்து கையசைத்துவிட்டு காரில் ஏறினாள் காவ்யா.

ம்பத்தூர் பிரதான சாலையில் நதானமாக தன் வாகனத்தை செலுத்தியவள், அவள் போய் சேர வேண்டிய விலாசத்தை விசாரித்து ஒரு மூன்று மாடி கட்டிடத்தின் முன் தன் டூவிலரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள். அவளைப்பார்த்தது ஐந்தாறு சிறுவர், சிறுமியர், “தர்ஷினி அக்கா!” என ஓடி வந்தனர்.  அவர்களுக்கு பின்னே ஐம்பது வயது மதிக்கதக்க ஒரு பெண்மணி வந்தாள்.

“வாம்மா, தர்ஷினி, உன்னதான் எதிர்பார்த்து கொண்டு இருக்கோம்!”

தர்ஷினி, தன் கைப்பையை திறந்து சம்பந்தம் தன்னிடமளித்த செக்கை எடுத்து அந்த பெண்மணியிடம் நீட்டினாள். அதில் எழுதப்பட்டிருந்த தொகையைப்பார்த்து வியந்தவள்,

“இது ரொம்ப பெரிய உதவி தர்ஷினி” என்றார்.

“அதெல்லாம் பரவாயில்ல, கனகாக்கா நீங்க செய்ற இந்த சேவையைப் பார்க்கும் போது நான் செய்றதெல்லாம் ஒன்னுமில்ல, ஆமா உங்களுக்கு இந்த இடமெல்லாம் செட் ஆயிட்டா?” – தர்ஷினி

“கொஞ்சம் கொஞ்சம் செட் ஆகிருக்கு, சிவம்னு ஒரு தம்பி, இந்த ஏரியால கொஞ்சம் பெரிய ஆளு தான், அவரே முன்னாடி நின்னு எல்லாத்தையும் செய்து கொடுத்துட்டாரு.., அப்புறம் தர்ஷினி இன்னொரு சின்ன உதவி!” – கனகா

“சொல்லுங்கக்கா!” – தர்ஷினி

“நம்ம ப்ரியா பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல பக்கத்தில ஒரு ஹாஸ்பிட்டல் இருக்கு, உன்னோட வண்டில போகமுடியுமா?”

இருவரும் அந்த சிறுமியைத்தூக்கிக்கொண்டு மருத்துவமணைக்கு விரைந்தனர், அங்கே அவளுக்கு சிகிச்சைசெய்து திரும்பும்போது, கனகா, தர்ஷினியைக்கூப்பிட்டு,

“தர்ஷினி கொஞ்சம் அங்க பாரு, அவர் தான் சிவம் தம்பி!”

தர்ஷினி கனகா காட்டிய திசையைப்பார்த்தாள் அவளது விழிகள் விரிந்தது. அது குழந்தைகள் மருத்துவருக்கான அறை அதன் அருகே நின்ற ஒரு பெரிய க்யூவில் தோளில் விஷ்ணுவை சாய்த்துக்கொண்டு வாடிய முகத்துடன் சிவபிரகாஷ் நின்றிருந்தான்.

“ஐயோ, அந்த தம்பியோட பாப்பாவுக்கு உடம்பு சரியில்ல போல..வா என்னான்னு கேட்கலாம்?”

கனகா இயல்பாக கூற, தர்ஷினிக்கு தான் தலையை சுற்றியது. கனகா தர்ஷினியின் கையைப்பிடித்துக்கொண்டு சிவாவின் அருகே வந்தாள்,

“தம்பி!” அவள் குரலுக்கு நிமிர்ந்தவன் அருகே தர்ஷினியைப்பார்த்ததும் ஒருகணம் அதிர்ந்து போனான், அடுத்த நோடியே எந்த ஒரு உணர்வும் பிரதிபலிக்காத பார்வை ஒன்றை வைத்தான்.

தர்ஷினியின் பார்வை அவனையும் அவன் தொளை தன் கைகளால் மாலையாக்கி சரிந்து கிடந்த  சின்னஞ்சிறியவளின் மீதும் விழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.