(Reading time: 15 - 29 minutes)

ன்னுமில்ல” – தர்ஷினி

“பின்ன ஏன் உன் மூஞ்சி இப்படி இஞ்சிதின்ன குரங்கு மாதிரி இருக்கு?” – காவ்யா

சற்று அமைதியாக இருந்தவள்.

“நா அவர பாத்தேன் காவீ” – தர்ஷினி

“எவர?”

இப்போது தர்ஷினி நிமிர்ந்து காவ்யாவின் முகத்தைப்பார்த்தாள் கண்கள் சிவந்து கலங்கியிருந்தது. அவ்வளவு தான் காவ்யாவிற்கு இதயம் கரைந்து விட்டது. அவளருகே வந்து கைகளைப்பற்றிக்கொண்டாள்.

“என்னாச்சு டா? சிவாவையா பாத்த?”

“ம்ம்.. “ என்று தலையசைத்தாள், கண்களில் கண்ணீர் உருண்டு கண்ணங்களில் விழுந்தது

“சரி, அவர பாத்த..அதனால?”

“காவீ, அவருக்கு கல்யாணமாகி ஒரு கேர்ள் பேபி இருக்கு, அவளுக்கு உடம்பு சரியில்லன்னு ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு வந்திருந்தாரு!”

“ம்ம், அவரு வொய்ஃப் பாத்தீயா?”

“இல்ல, அவங்க வரல!”

“சரி அதுக்கு ஏன்டி நீ அழுற, ஹீ இஸ் மேரீட் தட்ஸ் இட், இனிம அதில பேசரதுக்கு ஒன்னுமில்ல.. ஜஸ்ட் சைட்டுன்னு தான சொன்ன, அப்புறம் ஏன் ஃபீல் பன்ற?”

தர்ஷினி அமைதியாக இருந்தாள். அவளது வாடிய முகத்தைக்கண்டு காவ்யா

“டூ யூ லவ் ஹிம், உனக்கு அவர பிடிச்சுருகாடீ?” – காவ்யா

“பிடிச்சிருந்தாலும் இப்ப என்ன பன்ன முடியும், காவீ?”

“ஸோ, இது தேவையில்லாத கவலைனு உனக்கே புரியுது? லீவ் இட்! சாப்பிட்டீயா?

“இல்ல எனக்கேதும் வேண்டாம்!”

“அடி வாங்கப்போற!”

“இல்ல காவீ, அவரு பொண்ணுக்கு நல்ல காய்ச்சல், வீடு வரைக்கும் வர முடியுமானு கேட்டாரு, நான் தான் இல்ல லேட் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு வந்துட்டேன்!”

“நல்ல வேள, சரின்னு மண்டைய ஆட்டிட்டு பின்னாடி போகாம இருந்தீயே, அது வரைக்கும் நல்லது, நீ இன்னும் தெளிவா தான் இருக்க..!”  

தர்ஷினியின் மன நிலை காவ்யாவிற்கு புரியாமலில்லை, காவ்யாவிற்கும் அது ஏமாற்றமாக தான் இருந்தது.  

“ஹலோ, உனக்கு அந்த பேபிய பாக்கனுமா?”

தர்ஷினி ஆர்வமுடன் காவ்யாவைப்பார்க்க..

“நாளைக்குப் போலாம், பட் அது அந்த பேபிக்காக மட்டும் தான், ஓ.கே!, தேவையில்லாம எதையாவது கற்பன பன்னாத, அவனும் அவன் தாடியும் அப்பவே நினைச்சேன், சரியான அழுத்தமான ஆளு! ஒரு ஃபேமிலிமேன் மாதிரியா பிகேவ் பன்னினான், எப்படி உன்ன சைட் அடிச்சான், நான் கூட அவனுக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு நினைச்சேன், நல்ல வேள அவனோட உண்மையான முகம் எதுனு தெரிஞ்சிருச்சே, விடுடீ, ஹீ இஸ் த லூசர்…”

“காவீ, அவர தப்பா பேசாத, அவரா நம்மகிட்ட வந்து ஏதாச்சும் பேசினாரா, ஹீ இஸ் வெல் மேனர்டு, அவர் நல்லவர் தான், எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, குழந்தையிருக்குன்னு தேவயில்லாம அவர் எங்கிட்ட ஏன் சொல்லனும்…? நீ சொன்ன மாதிரி இது நானா செஞ்சுகிட்ட கற்பனை தான், அது கற்பனையாகவே போகட்டும், ஐயம் ஓ.கே!”

“குட்! தர்ஷூ, பொண்ணுங்க மனச எப்போதும் நெருப்பு மாதிரி வச்சிருக்கனும், அப்பதான் விட்டில் பூச்சிங்கல்லாம் தானா பொசுங்கிடும், நம்மகிட்ட எந்த ஆபத்தும் வராது. எப்போதுமே சேஃபர் சைடில இருக்கனும்… புரிஞ்சுதா, நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன் ஃபீல் பன்னாம நிலவ இரசிசிட்டு இரு”.

இளமையின் போக்கு விசித்திரமானது தான், வாழ்கையின் எந்த  தருணம் நம்மை கலங்கடிக்கும், எந்த தருணம் மலர் மாலை சூட்டுமென்பது நாம் அறியாததுதான், அறிய முடியாத நிகழ்வுகளில் தான் சுவாரஸ்யம் அதிகம். முதன் முறையாக சலனப்பட்ட தர்ஷினியின் மனம், இந்த ஏமாற்றத்தால் காயப்பட்டிருந்தது. சிவா திருமணமானவன் என்ற நினைப்பே அவளை வாட்டியது, முகம் காணாத அவன் மனைவி மீது மெல்லிய பொறாமை வந்தது. இறுதியில் இழப்பு அவளுக்கு தான் என தோன்றியது, கண்ணீர் வந்தது.. கூடவே காவ்யாவின் வார்த்தையும் ஞாபகம் வந்தது, “தர்ஷூ, பொண்ணுங்க மனச எப்போதும் நெருப்பு மாதிரி வச்சிருக்கனும்!”, தர்ஷினி தன் மனதிற்கு சொல்லிக்கொண்டாள், “என்னால, இந்த வலிய தாங்க முடியும்…!” மெதுவாக கண்கள் மூடிக்கொண்டாள்.

காவ்யாவின் அந்த வார்தைகள் உண்மையானது தான், நெருப்பென இருக்கும் காவ்யாவின்  மனதை புயற்காற்றாய் வந்து ஒருவன்  ஆளாப்போகிறான், அவனுக்காக அவள் இதயத்தைமட்டுமல்ல வாழ்கையையே இழக்கப்போகிறாள் இதை உணராது விளையாட்டும் குறும்புமாக அவள் இயங்கிக்கொண்டிருந்தாள்…

வானத்து நிலவு மெதுவாக நகர்ந்தது, ஏனோ அதை பார்க்கும்போது தர்ஷினிக்கு விஷ்ணுவின் நினைவே வந்தது…

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1120}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.