(Reading time: 25 - 50 minutes)

துக்கு ஏன் இவ்வளவு தயக்கம் மைத்ரீ! குழந்தையை கொடு” என்று சட்டென வாங்கியவன் இன்னமும் பழங்களைப் பற்றிய கேள்வியுடன் நிற்க

அவள் வேகமாக பழங்களை எடுத்து பையினுள் போட்டாள்.

“இதையேதான நானும் செஞ்சிருப்ப”

“அது…அது நல்லாயிருக்காது ராகுல்! நீங்க எங்க கெஸ்ட்.  உங்களை போய் வேலை வாங்கிறது…” என்றபடி தலையை இடமும் வலமுமாக ஆட்டியவள் பழங்களை பொறுக்கி முடித்திருக்க பையோடு கிளம்பினாள்.

தன்னை அவள் விருந்தாளியாக பாவித்ததும் அவனின் மனம் சிணுங்கியது.  ‘பரவாயில்ல விடு! இன்னும் எத்தனை நாளைக்கு உனக்கு நான் விருந்தாளியா இருக்கப் போறேன்?’ என்று தனக்குள்ளேயே சொல்லி கொண்டான்.

“வாங்க ராகுல்! போகலாம்” என்று சொன்னவளின் பயம் மறைந்து சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாள்.

மைத்ரீ அவனுக்கு வழிக்காட்டி முன்னே நடக்க அவளை பின்தொடர்ந்தான் ராகுல்.

முன்னே நடந்தவளின் நீண்ட கூந்தல் ராகுலின் கவனத்தை தனதாக்கியது.  அழகான அவளின் பின்னலுக்கு தங்கள் சார்பில் இன்னும் சற்று அழகு சேர்த்தன அங்கே குடியிருந்த குண்டு மல்லிகைகள்.  அதன் வாசம் பிடித்து அதில் முகம் புதைக்க துடித்த அவன் மனதினைப் பார்த்து ‘அது உன்னால் முடியாதே’ என்று எள்ளி நகைத்தன அந்த மல்லிக்கூட்டம்.  எல்லாம் அவள் தலையில் குடியிருக்கும் கர்வம் தான்!

அவளையே மொய்த்திருந்த கண்களுக்கு அவளின் நடை தளர்வது புரிய

“என்ன மைதிரீ?”

‘எப்படி தெரிஞ்சது?’ என்று வியந்தவளின் விழிகள் விரிய இவன் புறமாக திரும்பியவள், “உங்க அம்மா அப்பா வரலியா?”

பளபளக்கும் கருப்பு முத்தை தாங்கிய அவளின் கண்களெனும் சிப்பிகள் வியப்பை வெளிபடுத்தி இப்போது கேள்வியோடு இவன் முகத்தை எதிர்நோக்க தன் மனதிலெழுந்த பேரலைகளை கட்டுப்படுத்தி,

“அம்மாவும் அப்பாவும் வரர்தா இருந்தாங்க… காலைல எமெர்ஜென்ஸினு அப்பா ஹாஸ்பிடல் போக வேண்டியதா போச்சு…”

“அம்மாவையாவது நீங்க அழைச்சிட்டு வந்திருக்கலாமே”

ராகுல் முகத்தில் சிறு புன்னகை மலர, “இந்த மாதிரியான விசேஷங்களுக்கு அப்பா இல்லாம அம்மா போகமாட்டாங்க…. அப்பா பிஸியாயிருக்கும் போது தவிர்க்க முடியாத சூழ்நிலைன்னா அம்மா மட்டும் போவாங்க… ஆனா கல்யாணங்களுக்கு எப்பவுமே அப்பாயில்லாம தனியா போனது கிடையாது”

அந்த கரு முத்துகள் இப்போதும் ஆச்சரியத்தை வெளிப்படுத்திட அவளின் ரோஜா இதழ்கள் மலர்ந்தன.  மாயக்காரி! இவன் மனதை மயக்கி தன்னோடு முடிந்து கொண்ட மாயக்காரியின் நடை சற்று வேகமெடுத்தது.  அவ்வளவு சீக்கிரம் அவளை பிரியக் கூடாது என்று நினைத்த அவனின் பேராசை பிடித்த மனமோ கூச்சலிட்டு மூளையை யோசிக்க வைத்தது.

“முகூர்ததம் எத்தனை மணிக்கு?” அவனுக்கு நன்றாக தெரியும் முகூர்த்த வேளை எப்போதென்று..

கேள்வியில் அவள் தன் வேகத்தை குறைத்து இவனிடமாக திரும்பி, “முகூர்ததம் ஒன்பது மணிக்கு” என்று சொல்லி முடிப்பதற்குள் தன் திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருந்தான் ராகுல்.

அவளின் முன்னே இவன் நடப்பது தான் அந்த ரகசிய திட்டம்! இப்போது அவள் இவனை பின்தொடர வேண்டிய நிலை.  மிகவும் மெதுவாக நடந்து ராகுல் தன்னவளை இன்னும் சற்று நேரம் தன்னோடு இறுத்தினான்.

மறுபடியும் அவளைப் பார்க்க பரபரத்த மனதை அவனால் அடக்க முடியாமல் போக, “சஞ்சய் எங்கே?” என்று அவளிடமாக திரும்பினான்.

இப்போது மைத்ரீயை அடி முதல் முடி வரை தன் கண்களெனும் அஞ்சலகத்தில் தந்தியாக அடித்து அவசரமாக மனதுக்கு சேர்த்தான்.  இளம்பச்சை உடலெங்கும் அதே நிற சிறு பூக்களால் நிறைந்திருக்க இளம் சிவப்பு கரைகளோடு அவளால் அழகு பெற்ற சேலை அவனை இம்சித்தது.

“இங்கதா எங்கயாவது இருப்பா! இருங்க அவனை கூப்பிடற” அவசரமாக சொன்னவள் தனது கைப்பேசி இல்லாததை உணர்ந்து கீழ்தட்டை லேசாக கடித்தாள்.  அவள் கடித்ததென்னவோ அவளின் கீழ்தட்டை தான் ஆனால் வலித்ததென்னவோ இவன் மனம்தான்.

“ஸாரி! ஃபோன் ரூம்ல இருக்கு.  இதை அம்மாட்ட கொடுத்திட்டு ஜெய்யை வரச்சொல்ற” என்றவள் வேகமெடுத்ததில் அவனுக்கு பக்கத்தில் நடந்தாள்.

‘என்னோட கேள்வி சொதப்பிருச்சே!’ அவளை திசைத்திருப்ப பேச்சு கொடுத்தான்.

“இல்லை பரவாயில்ல! அவசரமா கூப்பிடனும்னு கிடையாது”

மறுபடியும் ரோஜா இதழ்கள் மலர்ந்தன.

‘வேற என்ன பேசலா?’ யோசித்தவனுக்கு தன் கைகளிலிருக்கும் தியா இப்போது நினைவுக்கு வந்தாள்.

“குழந்தை பேரென்ன?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.