(Reading time: 25 - 50 minutes)

நேரடியாக இவனுக்கு பதில் சொல்லாமல் குழந்தையை கேட்டாள், “உங்க பேரென்ன சொல்லுங்க செல்லம்”

“தயா!” என்றது மழலை.

“தியா!” என்றால் மைத்ரீ.

“தியா ரொம்ப க்யூட்டாயிருக்காங்க” என்று குழந்தையிடம் சொன்னவனுக்கு அவளிடமிருந்து பதில் வந்தது.

“ஆமா ராகுல்! தியா பாப்பா க்யூட் மட்டுமில்ல சமர்த்தும் கூட” தியாவின் மீதான அன்பை அவளின் குரல் வெளிபடுத்த இவனின் மனமோ மைத்ரீயின் மீதான் காதலை பரைசாற்ற…. சொல்லிவிட்டிருந்தான் ராகுல்….

“நமக்கும் இதே மாதிரி க்யூட்டான பாப்பா பிறக்கும்”

மைத்ரீ பாப்பா என்ற வார்த்தையை சொன்னதிலிருந்து தியா கைத்தட்டி “பாப்பா பாப்பா” என்று ஆர்பரித்திருந்தாள்.

இதன் நடுவேயும் ராகுல் சொன்னது தெளிவாக மைத்ரீயின் காதுகளில் சேர்ந்திருக்க அப்படியே உறைந்து நின்றுவிட்டாள் மைத்ரீ.

தன்னோடு நடந்தவளை காணாது திரும்பியவன்

“என்னாச்சு மைத்ரீ?” என்று வெகு இயல்பாக அவளிடமாக திரும்பி வந்தான்.

நமக்கும் இதே மாதிரி க்யூட்டான பாப்பா பிறக்கும்னு தானே சொன்னான்.  அப்புறம் எப்படி இவ்வளவு கேஷுவலா இருக்கான்.  ஒருவேளை எனக்கு சரியா காது கேட்கலையோ? தியாவும் பேசிட்டிருந்ததுல தப்பா கேட்டுச்சு போல… இல்லயே’ அவள் மனதுக்குள் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்க அதை மறைக்க மறந்தவளின் முகமோ குழப்பத்தை வெளிக்காட்டியது.  அதிர்ச்சி, கோபம், குழப்பமென அவள் முகத்திலிருந்த ரசங்களை தனக்குள்ளேயே ரசித்து சிரித்தவன் அவளிடமிருந்து பழப்பையை வாங்க முயற்சித்தான்.

“இந்த விருந்தாளிய வேலை வாங்க கூடாதுனு இவ்வளவு நேரம் தூக்கியாச்சு.  இப்போ கூட நானா வந்து இதை செய்ற.  ஸோ என்னை நீயா வேலை வாங்கல”

“இல்லை ராகுல்!”

“உன்னோட பேச்சுக்கு மரியாத கொடுத்து இவ்வளவு நேரம் நான் சும்மாயிருந்த.  இதுக்கு மேல முடியாது” அழுத்தமாக அவன் சொல்லவும் பையை கொடுத்துவிட்டு அவனோடு சேர்ந்து நடந்தாலும் மனம் மட்டும் குழம்பியது.

‘ஒன்னுமே சொல்லாத மாதிரி சாதாரணமா பேசுறானே? எனக்கு நல்லா கேட்டுச்சே.  எதுக்கு இப்படி கஷ்டபட்டு யோசிக்கனும்? பேசாம அவங்கிட்டயே கேட்டுற வேண்டியதான’ என்றெழுந்த எண்ணத்தில் தூக்கி வாரிப் போட்டது.

‘என்னென்று கேட்பது? நமக்கும் இதே மாதிரி க்யூட்டான பாப்பா பிறக்கும்னு நீங்க சொன்னீங்களானு கேக்கறதா? அவன் அப்படி சொல்லைனா நான் தான் அப்படி ஒரு ஆசையோடு கேட்ட மாதிரி இருக்காதா? என்ன முட்டாள் தனமான யோசனை?’

அவளின் குழப்பத்தை ரசிப்பதை நிறுத்தியிருக்கவில்லை ராகுல்.

எவ்வளவுதான் மெதுவாக நடந்தபோதும் பேஸ்மென்டிலிருந்து இரண்டாம் தளம் வந்துதானே ஆக வேண்டும்!

வெறுங்கையோடு வந்து கொண்டிருந்த மைத்ரீயிடம் வந்தார் வடிவு.

“அப்போ போனவ இப்பதா வர.. அதுவும் வெறுங்கையோட… ப்ரோஹிதர் எத்தனை முறை கேட்டார் தெரியுமா? பழங்கள் எங்க மைத்ரீ?”  ப்ரோஹிதருக்கு பதில் சொல்ல முடியாமல் இவளுக்காகக் காத்திருந்த வடிவு ராகுலை கவனிக்காது பொறிந்து தள்ளினார்.

“நீங்க கேட்டது இங்கிருக்கு ஆன்டி” என்று மலர்ந்த முகத்தோடு ராகுல் அந்த பையை கொடுத்தான்.

“தாங்க்ஸ் தம்பி!” அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு மைத்ரீயிடமாக திரும்பி யாரென்று கண்களால் வினவினார் வடிவு.

அதை புரிந்தவளாக மைத்ரீ ராகுலை அறிமுக படுத்தினாள்.

“அம்மா! இவரு சரயூவோட அண்ணன் ராகுல்”

“வணக்கம் தம்பி! எப்படியிருக்கீங்க? வீட்ல யாரும் வரலயா?”

“வணக்கம் ஆன்டி! நான் நல்லாயிருக்க.  கொஞ்ச அவசர வேலைனால அம்மா அப்பா வர முடியல”

“அவங்களை கேட்டதா சொல்லுங்க.  நீங்க உட்காருங்க தம்பி!” என்று நாற்காலியை அவனுக்கு கைக்காட்டியவர் மகளிடம் திரும்பினார்.

“விசேஷத்துக்கு வந்த விருந்தாளிய வேலை வாங்கியிருக்க.  என்னாச்சு உனக்கு?”

அவள் ஏதோ சொல்ல வரவும்

அவளை முந்தி கொண்ட ராகுல், “இல்லை ஆன்டி! மைத்ரீ மேல தப்பில்ல.  பையை தரமாட்டேனுதா சொன்னாங்க… நாந்தா வர்புறுத்தி வாங்கின”

“நீங்க விருந்தாளி… உங்களை வேலை வாங்குறது நால்லாயிருக்குமா?”

“என்னை ஏன் விருந்தாளியா நினைக்கிறீங்க? உங்க வீட்ல ஒருத்தனா நினைங்க.  அப்படி நினைச்சிங்கனா நான் பழத்தை எடுத்து வந்தது தப்பா தெரியாதே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.